சாம்சங் அதிரடி: மிட்-ரேன்ஜ் பட்ஜெட்டில் 2 ஹை-எண்ட் ஸ்மார்ட்போன்கள்.!

18: 9 என்கிற திரை விகிதத்திலான இன்பினிட்டி டிஸ்பிளே மற்றும் இரட்டை முன்பக்க கேமராக்கள் கொண்டுள்ளன என்பது - இதர ஸ்மார்ட்போன்களை மிரட்டும் வண்ணத்திலான - பிரதான அம்சங்களாகும் என்பதில் சந்தகேமேயில்லை.

|

ஒருவழியாக, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சாம்சங் கேலக்ஸி ஏ8 (2018) மற்றும் ஏ8 பிளஸ் (2018) ஸ்மார்ட்போன்களின் அதிகாரபூர்வமான அம்சங்கள் வெளியாகியுள்ளன.

சாம்சங் அதிரடி: மிட்-ரேன்ஜ் பட்ஜெட்டில் 2 ஹை-எண்ட் ஸ்மார்ட்போன்கள்.!

சாம்சங் நிறுவனத்தின் இந்த மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன்களும் 18: 9 என்கிற திரை விகிதத்திலான இன்பினிட்டி டிஸ்பிளே மற்றும் இரட்டை முன்பக்க கேமராக்கள் கொண்டுள்ளன என்பது - இதர ஸ்மார்ட்போன்களை மிரட்டும் வண்ணத்திலான - பிரதான அம்சங்களாகும் என்பதில் சந்தகேமேயில்லை.

சாம்சங் கேலக்ஸி ஏ8 (2018) மற்றும் ஏ8 பிளஸ் (2018)

சாம்சங் கேலக்ஸி ஏ8 (2018) மற்றும் ஏ8 பிளஸ் (2018)

தென் கொரிய சந்தையில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள சாம்சங் கேலக்ஸி ஏ8 (2018) மற்றும் ஏ8 பிளஸ் (2018) ஆகியவைகளின் இந்தியா விலை மற்றும் வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும் கூட தன ,முழுமையான அம்சங்களும் வெளிப்பட்டுள்ளன. முதலில் இரண்டு கருவிகளுக்கும் இடையே உள்ள பொதுவான அம்சங்களை பற்றி விரிவாக காண்போம்.

16எம்பி + 8 எம்பி என்கிற இரட்டை முன்பக்க கேமரா

16எம்பி + 8 எம்பி என்கிற இரட்டை முன்பக்க கேமரா

கேலக்ஸி ஏ8 (2018) ஸ்மார்ட்போன் ஆனது, எப் / 1.9 துளையுடனான 16எம்பி + 8 எம்பி என்கிற இரட்டை முன்பக்க கேமராவை கொண்டுள்ளது. அதாவது ஒருவழியாக சாம்சங் போர்ட்ரியட் படங்களை எடுக்க அனுமதிக்கும் என்று அர்த்தம். பின்புறத்தில், கேலக்ஸி ஏ8 (2018) ஒரே ஒரு கேமராவுடன் தொடர்கிறது, இது எப் / 1.7 துளையுடனான 16எம்பி ரியர் கேமராவை கொண்டுள்ளது

லைவ் ஃபோகஸ் அம்சம்

லைவ் ஃபோகஸ் அம்சம்

மேலும் கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போனில் காணப்பட்டதைப் போலவே செல்பீ எடுத்துக் கொள்ளப்படுவதற்கு முன்போ அல்லது அதற்கு பின்னதாகவோ இரட்டை பின்புற கேமராக்களைக் கொண்டிருக்கும் போகஸ் விளைவை மாற்றுவதற்கான லைவ் ஃபோகஸ் அம்சமும் கேலக்ஸி ஏ8 (2018) ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

முன்பக்கம் வளைந்த கண்ணாடி வடிவமைப்பு

முன்பக்கம் வளைந்த கண்ணாடி வடிவமைப்பு

டிஸ்பிளேவை பொறுத்தமட்டில் சாம்சங் கேலக்ஸி ஏ8 (2018) மற்றும் கேலக்ஸி ஏ8 பிளஸ் (2018) ஆகிய இரண்டுமே 18: 9 என்கிற விகிதத்திலான இன்பினிட்டி டிஸ்பிளே கொண்டுள்ளன. கேலக்ஸி ஏ8 2018 தொடரானது மீண்டும் அதன் முன்பக்கம் வளைந்த கண்ணாடி வடிவமைப்பை தொடர்கிறது.

மொத்தம் நான்கு நிறங்களில் வெளியாகிறது

மொத்தம் நான்கு நிறங்களில் வெளியாகிறது

அதன் பக்கத்தில் ஒரு உலோக சட்டகம் உள்ளது. கேலக்ஸி ஏ8 (2018) மற்றும் ஏ8 பிளஸ் (2018) மொத்தம் நான்கு நிறங்களில் வெளியாகிறது - பிளாக், ஆர்க்கிட் ஏஷ், கோல்ட் மற்றும் ப்ளூ. இந்த இரண்டு சாதனங்களுமே ஆல்வேஸ் ஆன் டிஸ்பிளே மற்றும் சாம்சங் பே ஆதரவுடன் வருகிறது.

கைரேகை ஸ்கேனர்

கைரேகை ஸ்கேனர்

மேலும் இரண்டு கருவிகளுமே மேக்னட்டிக் செக்யூர் டிரான்ஸ்மிஷன் (MST) மற்றும் நியர் பீல்ட் கம்யூனிகேஷன் (NFC) ஆகிய அம்சங்களையும் கொண்டுள்ளன. கைரேகை ஸ்கேனர் ஆனது கேலக்ஸி ஏ8 தொடரில் கருவிகளின் கேமரா தொகுதியின் கீழே பொதிக்கப்பட்டுள்ளது.

மெமரி

மெமரி

மேலும் இரண்டு தொலைபேசிகளுமே ஐபி68 நீர் மற்றும் தூசி எதிர்ப்பு சான்றிதழ் மற்றும் 256ஜிபி வரையிலாக மைக்ரோ எஸ்டி அட்டை ஸ்லாட் கொண்டு நீட்டிக்கும் மெமரி ஆதரவு கொண்டுள்ளன. கேலக்ஸி ஏ8 (2018) தொடர் தான் சாம்சங் கியர் விஆர் ஹெட்செட் ஆதரவு கொண்டு வெளியாகும் முதல் ஏ தொடர் கருவிகளாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கேலக்ஸி ஏ8 (2018) அம்சங்கள்

கேலக்ஸி ஏ8 (2018) அம்சங்கள்

5.6-அங்குல எஸ் அமோ எல்இடி முழுஎச்டி+ (2220 x 1080 பிக்சல்கள்) மற்றும் 18: 9 விகிதம் கொண்ட இன்பினிட்டி டிஸ்பிளே, ஆக்டா-கோர் ப்ராஸசர், 4ஜிபி ரேம், 32 ஜிபி / 64 ஜிபி சேமிப்பு ஆகியவைகளை கொண்டுள்ளது.

கேலக்ஸி ஏ8 ப்ளஸ் (2018) அம்சங்கள்

கேலக்ஸி ஏ8 ப்ளஸ் (2018) அம்சங்கள்

சற்று பெரிய மாறுபாடான கேலக்ஸி ஏ8 ப்ளஸ் அம்சங்களை பொறுத்தமட்டில், 2220 x 1080 பிக்ஸல் தீர்மானம் கொண்ட 6.0-இன்ச் முழுஎச்டி+ சூப்பர் அமோஎல்இடி டிஸ்பிளே, ஆக்டா-கோர் ப்ராஸசர், 4ஜிபி ரேம், 32 ஜிபி / 64 ஜிபி சேமிப்பு ஆகியவைகளை கொண்டுள்ளது.

பேட்டரி

பேட்டரி

கேலக்ஸி ஏ8 ஸ்மார்ட்போன் ஆனது ஒரு 3000 எம்ஏஎச் பேட்டரி கொண்டுள்ளது, பெரிய மாறுபாடான ஏ8 ப்ளஸ் ஆனது 3500 எம்ஏஎச் பேட்டரி கொண்டிருக்கிறது. முன்னர் குறிப்பிட்டபடி, இரு தொலைபேசிகளுமே ஒரே மாதிரியான பின்புற மற்றும் முன்னணி கேமிராக்களை கொண்டுள்ளது.

பரிமாணங்கள்

பரிமாணங்கள்

கேலக்ஸி ஏ8 (2018) ஸ்மார்ட்போன் ஆனது அளவீட்டில், 149.2 x 70.6 x 8.4 மிமீ மற்றும் 172 கிராம் எடையும் கொண்டுள்ளது. மறுகையில் உள்ள பிளஸ் பதிப்பானது 159.9 x 75.7 x 8.3 மிமீ மற்றும் 191 கிராம் கிராம் எடை என்கிற பரிமாணங்களைக் கொண்டுள்ளது

ஆண்ட்ராய்டு

ஆண்ட்ராய்டு

இரண்டு ஸ்மார்ட்போன்களுமே பாஸ்ட் சார்ஜ் ஆதரவு மற்றும் ஒரு யூஎஸ்பி டைப் -சி போர்ட் கொண்டுள்ளன. துரதிருஷ்டவசமாக இந்த தொலைபேசிகள் இன்னும் ஆண்ட்ராய்டு 7.1.1 நௌவ்கட் கொண்டே இயங்குகின்றன.

இணைப்பு ஆதரவு

இணைப்பு ஆதரவு

இணைப்பு ஆதரவுகளை பொறுத்தமட்டில், வைஃபை, ப்ளூடூத் வி 5.0, ஆண்ட்+ (ANT+) மற்றும் சென்சார்களை பொறுத்தமட்டில், அக்ஸிலெரோமீட்டர், பாரோமீட்டர், பிங்கர் ப்ரிண்ட், கைரோ, ஜியோமேனடிக் சென்சார், ஹால் சென்சார், பிராக்ஸிமிட்டி சென்சார் மற்றும் ஆர்ஜிபி லைட் சென்சார் ஆகியவைகளை கொண்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A8 (2018), A8+(2018) now official: Feature Infinity Display, dual front cameras. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X