அந்த மாதிரிதான் ஆனா அது இல்ல: 108 எம்பி கேமராவுடன் சாம்சங் கேலக்ஸி ஏ73- கசிவு தகவல்!

|

சாம்சங் கேலக்ஸி ஏ73 ஸ்மார்ட்போனானது அதன் முன்னோடியான கேலக்ஸி ஏ72 போன்ற வடிவமைப்பைக் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. சாம்சங் கேலக்ஸி ஏ73 சிஸ்டம் உதவி வடிவமைப்பு (சிஏடி) ரெண்டர்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளன. இந்த ஸ்மார்ட்போன் ஆர்வலர்களுக்கு வரவிருக்கும் சாதனம் எப்படி இருக்கும் என்பது குறித்து தகவலை வழங்குகிறது. ஸ்மார்ட்போனானது இரண்டு வண்ண விருப்பங்களில் கிடைக்கும் என தெரிவிக்கப்படுகிறது. சாம்சங் கேலக்ஸி ஏ73 ஸ்மார்ட்போனானது பிளாஸ்டிக் பில்ட் மற்றும் பஞ்ச் ஹோல் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 108 மெகாபிக்சல் சென்சார் மற்றும் இந்த சாதனம் நிறுவனத்தின் 2022 மிட்ரேஞ்ச் ஸ்மார்ட்போன் வரிசையின் பிடியில் இடம்பெறலாம் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் குறித்து சாம்சங் இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பின்புறத்தில் குவாட் கேமரா அமைப்பு

பின்புறத்தில் குவாட் கேமரா அமைப்பு

லெட்ஸ்கோ டிஜிட்டல் தளத்தில் பகிரப்பட்ட ரெண்டர்களின் படி, டெக்னிசோ கான்செப்ட் மூலம் போனின் கசிவுகள் மற்றும் வதந்திகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. சாம்சங் கேலக்ஸி ஏ73 ஸ்மார்ட்போனானது கேலக்ஸி ஏ72 சாதனத்தை போன்றே பின்புறத்தில் குவாட் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. அதேபோல் இந்த சாதனத்தில் பவர் மற்றும் வால்யூம் பட்டன்கள் அதன் வலது பக்கத்தில் காணப்படுகின்றன. அதேபோல் இந்த சாதனத்தின் கீழ் புறத்தில் யூஎஸ்பி டைப் சி போர்ட் மற்றும் சிம் கார்ட் ட்ரே இரண்டும் இருக்கின்றன. அதேபோல் ரெண்டர்கள் அடிப்படையில் சாம்சங் கேலக்ஸி ஏ73 ஜாக் இல்லாமல் காட்டப்படுகின்றன. ஆனால் சாம்சங் நிறுவனம் தற்போது வரை இந்த ஸ்மார்ட்போன் குறித்து எந்த தகவலையும் வெளியிடவில்லை.

108 மெகாபிக்சல் முதன்மை கேமரா

108 மெகாபிக்சல் முதன்மை கேமரா

சாம்சங் கேலக்ஸி ஏ73 ஸ்மார்ட்போனானது 108 மெகாபிக்சல் முதன்மை கேமரா உடன் வரும் என கூறப்படுகிறது. அதேபோல் இந்த அம்சம் தென்கொரிய நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட சில ஸ்மார்ட்போன்களில் இடம்பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் சாம்சங் கேலக்ஸி ஏ52 மற்றும் சாம்சங் கேலக்ஸி ஏ72 சாதனத்தில் இருக்கும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் ஆனது அனைத்து ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன்களிலும் இடம்பெறும் என கூறப்படுகிறது.

எல்இடி ஃபிளாஷ் உடன் நான்கு கேமரா

எல்இடி ஃபிளாஷ் உடன் நான்கு கேமரா

சாம்சங் கேலக்ஸி ஏ73 5ஜி ஸ்மார்ட்போனானது சாம்சங் கேலக்ஸி ஏ72 சாதனத்தை போன்றே தோற்றமளிக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் முன்பக்கத்தில் பஞ்ச் ஹோல் டிஸ்ப்ளேயை கொண்டிருக்கிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் எல்இடி ஃபிளாஷ் உடன் கேமரா பம்ப் உள்ளிட்ட நான்கு கேமராக்களை கொண்டிருக்கின்றன.

வலது பக்கத்தில் ஆற்றல் பட்டன்கள்

வலது பக்கத்தில் ஆற்றல் பட்டன்கள்

சாம்சங் கேலக்ஸி ஏ73 5ஜி ஸ்மார்ட்போனானது வலது பக்கத்தில் ஆற்றல் பட்டன்கள் மற்றும் வால்யூம் ராக்கர்ஸ்களை கொண்டுள்ளது. அதேபோல் கீழே யூஎஸ்பி டைப் சி போர்ட், மைக்ரோபோன் மற்றும் ஸ்பீக்கர்கள் இருக்கிறது. கேல்கஸி ஏ73 5ஜி ஸ்மார்ட்போனானது ஸ்னாப்டிராகன் 750ஜி-ஐ அடிப்படையாகக் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

6.7 இன்ச் முழு எச்டி ப்ளஸ் அமோலெட் டிஸ்ப்ளே

6.7 இன்ச் முழு எச்டி ப்ளஸ் அமோலெட் டிஸ்ப்ளே

அதேபோல் இந்த ஸ்மார்ட்போன் 6.7 இன்ச் முழு எச்டி ப்ளஸ் அமோலெட் டிஸ்ப்ளேவை கொண்டிருக்கும் எனவும் பயோமெட்ரிக் அங்கீகரிக்கப்பட்ட கைரேகை ஸ்கேனரை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கேலக்ஸி ஏ72 ஸ்மார்ட்போனானது புதுப்பிப்பு வீதம், 90 ஹெர்ட்ஸ் மற்றும் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தோடு வருகிறது.

108 எம்பி முதன்மை கேமரா

108 எம்பி முதன்மை கேமரா

கேலக்ஸி ஏ73 5ஜி ஸ்மார்ட்போனானது பிளாஸ்டிக் கட்டமைப்பைக் கொண்டிருக்கும் எனவும் ஐபி67 மதிப்பீட்டுடன் வரும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த ஸ்மாரட்போன் ஆனது 108 எம்பி முதன்மை கேமராவைக் கொண்டிருக்கும் என கூறப்பட்டாலும் பிற மூன்று கேமராக்கள் குறித்த விவரங்கள் எதுவும் தெரியவில்லை. சாம்சங் கேலக்ஸி ஏ73 5ஜி ஸ்மார்ட்போனானது ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான ஒன் யூஐ அம்சத்தோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 25 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவோடு வரும் எனவும் கூறப்படுகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Samsung Galaxy A73 Smartphone Might Launching with these Specification: Tipped by Renders

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X