விரைவில் அசத்தலான அம்சங்களுடன் வெளிவரும் சாம்சங் கேலக்ஸி ஏ73.!
சாம்சங் நிறுவனம் விரைவில் புதிய கேலக்ஸி ஏ73 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் அசத்தலான அம்சங்களுடன் வெளிவரும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சமீபத்தில் வெளிவந்த தகவலின்படி இந்த சாதனம் ரூ.32,999-விலையில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ73
குறிப்பாக சாம்சங் கேலக்ஸி ஏ73 ஸ்மார்ட்போன் ஆனது 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும்
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு 1,080x2,400 பிக்சல் தீர்மானம், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ்,240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

சாம்சங் கேலக்ஸி ஏ73 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 750ஜி ஆக்டோ-கோர் சிப்செட் வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பின்பு ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல்.குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் மென்பொருள் வசதி மற்றும் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

இந்த சாம்சங் கேலக்ஸி ஏ73 ஸ்மார்ட்போனின் பின்புறம் 108எம்பி கேமராவுடன் மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். இதுதவிர எல்இடி பிளாஷ், செயற்கை நுண்ணறிவு அம்சம் எனப் பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளதுஇந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல்.

சாம்சங் கேலக்ஸி ஏ73 ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவரும். எனவே இந்த சாதனத்தை விரைவில் சார்ஜ் செய்ய முடியும். அதேபோல் 5 ஜி, 4 ஜி எல்டிஇ, வைஃபை, புளூடூத், ஜிபிஎஸ்/ ஏ-ஜிபிஎஸ் மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் போன்ற பல்வேறுஇணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த புதிய சாம்சங் கேலக்ஸி ஏ73 மாடல். மேலும் இந்நிறுவனம் சில மாதங்களுக்கு முன்பு அறிமுகம்செய்த சாம்சங் கேலக்ஸி ஏ22எஸ் ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

சாம்சங் கேலக்ஸி ஏ22எஸ்
சாம்சங் கேலக்ஸி ஏ22எஸ் ஸ்மார்ட்போன் ஆனது 6.6-இன்ச் எஃப்எச்டி பிளஸ் இன்பினிட்டி-வி டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. பின்பு 1080 பிக்சல் தீர்மானம், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த புதிய
ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..

சாம்சங் கேலக்ஸி ஏ22எஸ் ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 2.2ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் மீடியாடடெக் Dimensity 700 பிராசஸர் வசதி உள்ளது. பின்பு One UI Core 3.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. சாம்சங் கேலக்ஸி ஏ22எஸ் ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி
வசதி உள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ22எஸ் ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி கேமரா + 5எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். இதுதவிர கேமரா அம்சங்கள், எல்இடி பிளாஷ் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது கேலக்ஸி ஏ22எஸ் ஸ்மார்ட்போன்.

சாம்சங் கேலக்ஸி ஏ22எஸ் ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 15 பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் என பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 5 ஜி, 4 ஜி எல்டிஇ, வைஃபை, புளூடூத், ஜிபிஎஸ்/ ஏ-ஜிபிஎஸ் மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் போன்ற பல்வேறுஇணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அசத்தலான சாம்சங் கேலக்ஸி ஏ22எஸ்ஸ்மார்ட்போன் மாடல்.


Click it and Unblock the Notifications








