Home
Mobile

6.7-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் Samsung Galaxy A72.!

சாம்சங் நிறுவனம் தனது புதிய கேலக்ஸி ஏ72 ஸ்மார்ட்போன் மாடலை விரைவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த சிறந்த மென்பொருள் வசதி, அசத்தலான கேமராக்கள் என பல்வேறு ஆதரவுகளுடன் வெளிவரும். மேலும் கேலக்ஸி ஏ72 மாடல் எண் எஸ்எம்-ஏ725எப் ஆகும்.

 6.7-இன்ச்  டிஸ்பிளேவுடன் களமிறங்கும் Samsung Galaxy A72.!

வெளிவந்த தகவலின்படி இந்த கேலக்ஸி ஏ72 ஸ்மார்ட்போன் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 720ஜி சிப்செட் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவரும். மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

கேலக்ஸி ஏ72 ஸ்மார்ட்போன் ஆனது 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1080 பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளிவரும். குறிப்பாக இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 6.7-இன்ச்  டிஸ்பிளேவுடன் களமிறங்கும் Samsung Galaxy A72.!

கேலக்ஸி ஏ72 ஸ்மார்ட்போன் ஆனது 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுக கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்படும்.

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி சென்சார் உட்பட மொத்தம் நான்கு கேமராக்கள் உள்ளது என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 32எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல்.

கேலக்ஸி ஏ72 ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 20 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். மேலும் கைரேகை சென்சார் உட்பட பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

 6.7-இன்ச்  டிஸ்பிளேவுடன் களமிறங்கும் Samsung Galaxy A72.!

கேலக்ஸி ஏ72 ஸ்மார்ட்போனில் டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A72 May Launching Soon in India: Here the Details! : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X