ஐந்து கேமராக்களோடு களமிறங்கும் சாம்சங் கேலக்ஸி ஏ72: எப்போது தெரியுமா?

|

சாம்சங் கேலக்ஸி ஏ72 ஸ்மார்ட்போன் ஐந்து ரியர் கேமராக்களோடு அறிமுகமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் அறிமுக தேதி மற்றும் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கலாம்.

பின்புறத்தில் ஐந்து கேமராக்கள்

பின்புறத்தில் ஐந்து கேமராக்கள்

பின்புறத்தில் ஐந்து கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ள சாம்சங்கின் முதல் ஸ்மார்ட்போனான கேலக்ஸி ஏ 72 அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2021 முதல் பாதியில் இந்த ஸ்மார்ட்போன் சந்தையை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி ஏ72 ஸ்மார்ட்போன்

சாம்சங் கேலக்ஸி ஏ72 ஸ்மார்ட்போன்

சாம்சங் கேலக்ஸி ஏ72 ஸ்மார்ட்போனின் பிரத்யேக அம்சம் குறித்து பார்க்கையில் இது பென்டா-கேமரா அமைப்போடு வருகிறது. இருப்பினும் இந்த ஸ்மார்ட்போன் முதன்மை ரக ஸ்மார்ட்போனாக இருக்காது என்றும் மிட்ரேஞ்ச் வகையாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

பென்டா கேமரா வடிவமைப்பு

பென்டா கேமரா வடிவமைப்பு

சாம்சங் கேலக்ஸி 71 மாடல் இந்த ஆண்டு தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் வாரிசாக கேலக்ஸி ஏ72 இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சாதனம் பென்டா கேமரா வடிவமைப்பை கொண்டிருக்கும் என கொரிய செய்தி ஊடகமான தி எலெக் தெரிவித்துள்ளது.

வானில் இரண்டு நிலா: புதிய மினி நிலவு கண்டுபிடிப்பு- இதோ முழுவிவரம்!வானில் இரண்டு நிலா: புதிய மினி நிலவு கண்டுபிடிப்பு- இதோ முழுவிவரம்!

பென்டா கேமரா அம்சம்

பென்டா கேமரா அம்சம்

பென்டா கேமரா அம்சம் குறித்து பார்க்கையில் இது 64 மெகாபிக்சல் பிரைமரி லென்ஸ், 12 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் கேமரா, 3 எக்ஸ் ஜூம் அம்சம் கொண்ட 8 மெகாபிக்சல் கேமரா, 5 மெகாபிக்சல் மேக்ரோ மற்றும் 5 மெகாபிக்சல் ஆழ சென்சார் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

32 மெகாபிக்சல் செல்பி கேமரா

32 மெகாபிக்சல் செல்பி கேமரா

சாம்சங் கேலக்ஸி ஏ 72 ஸ்மார்ட்போன் 32 மெகாபிக்சல் செல்பி கேமரா கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. அதேபோல் சாம்சங் கேலக்ஸி ஏ 72 ஸ்மார்ட்போனுடன் கேலக்ஸி ஏ 52 அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஏ51 போன்றே குவாட் ரியர் கேமரா வடிவமைப்பை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

பிரத்யேக வடிவமைப்பு

பிரத்யேக வடிவமைப்பு

பென்டா கேமரா பிரத்யேக வடிவமைப்பு என்பது சாம்சங்கின் முதல்சாதனம் என்றாலும் பிற பிராண்டுகளில் வெளியிடப்பட்டிருக்கிறது. ஐந்து கேமராவோடு நோக்கியா 9 ப்யூர் வியூ அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் சாம்சங் அறிமுகம் செய்யும் ஐந்து கேமரா மாடல் மிட் ரேன்ஜ் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்தாண்டு சாம்சங் ஏ72 சந்தைக்கு வரும் என கூறப்படுகிறது.

கேலக்ஸி ஏ 72 தொடர்பான சில அறிக்கைகள்

கேலக்ஸி ஏ 72 தொடர்பான சில அறிக்கைகள்

முன்னதாக, கேலக்ஸி ஏ 72 தொடர்பான சில அறிக்கைகளின்படி, கேலக்ஸி ஏ 72 ஆப்டிகல் பட உறுதிப்படுத்தல் (ஓஐஎஸ்) கொண்ட ஏ-சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக இருக்கும். அதேபோல் முன்னதாக சாம்சங் அடுத்த ஆண்டு உயர்நிலை கேலக்ஸி ஏ-சீரிஸ் மாடல்களுக்கு OES தொழில்நுட்பத்தை உருவாக்க தயாராகி வருவதாக கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A72 May Launch with Five Rear Cameras: Here the Details

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X