Home
Mobile

சாம்சங் கேலக்ஸி ஏ72 ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம்.. நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முழு விபரம்..

சாம்சங் நிறுவனம் தனது புதிய சாம்சங் கேலக்ஸி ஏ72 ஸ்மார்ட்போன் மாடலை விரைவில் அறிமுகம் செய்யவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மேம்பட்ட கேமரா அம்சத்துடன் இன்னும் பல்வேறு அதிநவீன அம்சங்களுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் மற்ற முக்கிய சிறப்பம்சங்கள் பற்றி பார்க்கலாம்.

புதிய சாம்சங் கேலக்ஸி ஏ72

புதிய சாம்சங் கேலக்ஸி ஏ72 ஸ்மார்ட்போன், குவால்காம் ஸ்னாப்டிராகன் 720ஜி சிப்செட் அடிப்படையாக கொண்ட ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்துடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சாம்சங் கேலக்ஸி ஏ72 ஸ்மார்ட்போன் 6.7' இன்ச் 1080 பிக்சல் கொண்ட புல் எச்டி பிளஸ் டிஸ்பிளேவுடன் மிரட்டலான டிசைனில் வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்டோரேஜ்

இந்த புதிய சாதனம் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடலாக இவை வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எஸ்டி கார்டு மூலம் ஸ்டோரேஜ் விரிவாக்கம் செய்யவும் இதில் உங்களுக்கு மெமரி ஆதரவு கிடைக்கிறது. இத்துடன் இந்த ஸ்மார்ட்போனில் மிரட்டலான குவாட் கேமரா அமைப்பு அம்சம் வழங்கப்பட்டுள்ளது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

64 எம்பி பிரைமரி கேமரா

இந்த ஸ்மார்ட்போனில் 64 எம்பி பிரைமரி கேமரா சென்சார் உட்பட மொத்தம் நான்கு கேமராக்கள் உள்ளது என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 32எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகளை இந்த அசத்தலான சாம்சங் கேலக்ஸி ஏ72 ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது.

20W பாஸ்ட் சார்ஜிங்

கேலக்ஸி ஏ72 ஸ்மார்ட்போனில் 20W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உள்ளது. இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் கைரேகை சென்சார் உட்பட, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது. விரைவில் வெளியாகத் தயார்நிலையில் இருக்கும் இந்த ஸ்மார்ட்போனின் உறுதியான விலை விபரங்களை அடுத்த பதிவில் பார்க்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A72 4G Launch Specs and More : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X