Samsung Galaxy A71 ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம்: விலை இவ்வளவு தான்.!

|

சாம்சங் நிறுவனம் இன்று தனது கேலக்ஸி ஏ71 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்யதுள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியுடன் ரூ.29,999-விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனத்தின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

சாம்சங் கேலக்ஸி ஏ71

சாம்சங் கேலக்ஸி ஏ71

சாம்சங் கேலக்ஸி ஏ71 ஸ்மார்ட்போன் ஆனது கருப்பு, நீலம், சில்வர் போன்ற நிறங்களில் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வரும் பிப்ரவரி 24-ம் தேதி முதல் இந்த சாதனம் விற்பனைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனத்தின்

சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

6.7-இன்ச்  எச்டிபிளஸ் டிஸ்பிளே

6.7-இன்ச் எச்டிபிளஸ் டிஸ்பிளே

சாம்சங் கேலக்ஸி ஏ71 ஸ்மார்ட்போன் மாடல் 6.7-இன்ச் சூப்பர் AMOLED Plus எச்டிபிளஸ் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது.. மேலும் 2400 x 1080பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

Google எடுத்த அதிரடி முடிவு: இனி அனைத்து ரயில்வே ஸ்டேஷனிலும் அந்த சேவை கிடையாது!Google எடுத்த அதிரடி முடிவு: இனி அனைத்து ரயில்வே ஸ்டேஷனிலும் அந்த சேவை கிடையாது!

அருமையான சிப்செட் வசதி

அருமையான சிப்செட் வசதி

இந்த ஸ்மார்ட்போனில் மிகவும் அதிகம் எதிர்பார்த்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 730எஸ்ஒசி சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குளத்தை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளிவநதுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 6ஜிபி/8ஜிபி ரேம்

6ஜிபி/8ஜிபி ரேம்

இந்த ஸ்மார்ட்போனின் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

32எம்பி செல்பீ கேமரா

32எம்பி செல்பீ கேமரா

கேலக்ஸி ஏ71 சாதனத்தின் கேமரா அமைப்பிற்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்றுதான் கூறவேண்டும், அதன்படி இந்த சாதனத்தின் பின்புறம் 64எம்பி பிரைமரி கேமரா + 12வைடு ஆங்கிள் லென்ஸ் + 5எம்பி டெப்த் சென்சார்

+ 5எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 32எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

ரூ.15,999-விலையில் களமிறங்கும் Samsung Galaxy M31ரூ.15,999-விலையில் களமிறங்கும் Samsung Galaxy M31

வைஃபை

கேலக்ஸி ஏ71 ஸ்மார்ட்போனில் வைஃபை 802.11ஏசி,புளூடூத் வி 5.0, ஏ-ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள்ள அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

4500எம்ஏஎச் பேட்டரி

4500எம்ஏஎச் பேட்டரி

இந்த ஸ்மார்ட்போனில் 4500எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. குறிப்பாக வீடியோ, வீடியோ கேம் போன்ற வசதிகளுக்கு அருமையாக உதவும். அதன்பின்பு 25வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Samsung Galaxy A71 with Snapdragon 730 SoC launched in India for Rs 29,999 : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X