அடுத்த மாதம் அறிமுகமாகும் கேலக்ஸி ஏ71 ஸ்மார்ட்போன்.!
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ71 ஸ்மார்ட்போன் ஆனது அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்படும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கேலக்ஸி ஏ71 ஸ்மார்ட்போன் ஆனது ஏற்கனவே வியட்நாமில் அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

சாம்சங் கேலக்ஸி ஏ71 டிஸ்பிளே
சாம்சங் கேலக்ஸி ஏ71 ஸ்மார்ட்போன் ஆனது 6.7-இன்ச் எப்எச்டி பிளஸ் சூப்பர் இன்பினிட்டி-ஒ அமோல்ட் டிஸ்பிளேவடிவமைப்புடன் வெளிவரும், பின்பு 2340 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக
கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவருவதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

2.2ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர்
இந்த ஸ்மார்ட்போனில் 2.2ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் வசதி வசதியும் இடம்பெற்றுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 10இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

டால்பி அட்மோஸ் ஆதரவு
புதிய கேலக்ஸி ஏ71 ஸ்மார்ட்போன் ஆனது 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது,மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளது. குறிப்பாக இன்-டிஸ்ப்ளே கைரேகை அம்சம் மற்றும் டால்பி அட்மோஸ் ஆதரவு கொண்டுள்ளது புதிய கேலக்ஸி ஏ71 ஸ்மார்ட்போன்.

கேமரா அம்சங்கள்
இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி சென்சார் + 12எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ் + 5எம்பி டெப்த் சென்சார் + 5எம்பி மேக்ரோ கேமரா என மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 32எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ்,உள்ளிட்ட அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

4500எம்ஏஎச் பேட்டரி
புதிய கேலக்ஸி ஏ71 ஸ்மார்ட்போனில் 4500எம்ஏஎச் பேட்டரி மற்றும் 25வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் வைஃபை, வோல்ட்இ, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம்.


Click it and Unblock the Notifications








