சாம்சங் கேலக்ஸி ஏ71 ஸ்மார்ட்போனுக்கு புத்தம் புதிய அப்டேட்.! என்ன தெரியுமா?
சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி ஏ71 ஸ்மார்ட்போனுக்கு ஏப்ரல் 2021 ஆண்ட்ராய்டு security patch அப்டேட் வசதியை வழங்கியுள்ளது. குறிப்பாக இந்த அப்டேட் மூலம் பாதுகாப்புடன் ஸ்மார்ட்போனை பயன்படுத்த முடியும். மேலும் கேலக்ஸி எஸ் 21, கேலக்ஸி எஸ் 21 +, கேலக்ஸி எஸ் 21 அல்ட்ரா மற்றும் கேலக்ஸி எஸ் 10 லைட் உள்ளிட்ட பிற சாம்சங் ஸ்மார்ட்போன்கள் ஏற்கனவே சமீபத்திய ஆண்ட்ராய்டு security patch பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த புதிய அப்டேட் தற்போது ஹாங்காங்கில் வெளியிடப்பட்டுள்ளது, விரைவில் இது மற்ற நாடுகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று தகவல் வெளிவந்துள்ளது.
சாம்சங் கேலக்ஸி ஏ71 ஸ்மார்ட்போன் மாடல் 6.7-இன்ச் சூப்பர் AMOLED Plus எச்டிபிளஸ் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது.. மேலும் 2400 x 1080பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

இந்த ஸ்மார்ட்போனில் மிகவும் அதிகம் எதிர்பார்த்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 730எஸ்ஒசி சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குளத்தை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளிவநதுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கேலக்ஸி ஏ71 ஸ்மார்ட்போனின் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.
கேலக்ஸி ஏ71 சாதனத்தின் கேமரா அமைப்பிற்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்றுதான் கூறவேண்டும், அதன்படி இந்த சாதனத்தின் பின்புறம் 64எம்பி பிரைமரி கேமரா + 12வைடு ஆங்கிள் லென்ஸ் + 5எம்பி டெப்த் சென்சார் + 5எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 32எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.
கேலக்ஸி ஏ71 ஸ்மார்ட்போனில் வைஃபை 802.11ஏசி,புளூடூத் வி 5.0, ஏ-ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள்ள அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஸ்மார்ட்போனில் 4500எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. குறிப்பாக வீடியோ, வீடியோ கேம் போன்ற வசதிகளுக்கு அருமையாக உதவும். அதன்பின்பு 25வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளது. சாம்சங் கேலக்ஸி ஏ71 ஸ்மார்ட்போன் ஆனது கருப்பு, நீலம், சில்வர் போன்ற நிறங்களில் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications