சாம்சங் கேலக்ஸி ஏ71 ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு ஒரு நற்செய்தி: என்ன தெரியுமா?

|

சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி ஏ71 ஸ்மார்ட்போன் மாடலுக்கு ஆண்ட்ராய்டு 11 அப்டேட்-ஐ வெளியிட்டுள்ளது. மேலும் குறிப்பாக இந்த புதிய அப்டேட் பயனர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை கொடுக்கும் என்றே கூறவேண்டும்.

சாம்சங் கேலக்ஸி ஏ71 ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு ஒரு நற்செய்தி.!

மேலும் கேலக்ஸி ஏ71 ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு 11 அப்டேட் உடன் சாம்சங் One UI 3.1 மற்றும் பிப்ரவரி 2021-க்கான security patch வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு இந்த புதிய அப்டேட்-இன் பில்ட் நம்பர் A715FXXU3BUB5 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் கேலக்ஸி ஏ71 ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு 11 அப்டேட் கிடைத்ததன் மூலம் screen ரெக்கார்டர், சிறந்த மீடியா கன்ட்ரோலர், நேட்டிவ் ஸ்மார்ட் ஹோம் கன்ட்ரோல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை பயன்படுத்த முடியும். மேலும் இந்த சாதனத்தின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

சாம்சங் கேலக்ஸி ஏ71 ஸ்மார்ட்போன் மாடல் 6.7-இன்ச் சூப்பர் AMOLED Plus எச்டிபிளஸ் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது.. மேலும் 2400 x 1080பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளதால்

பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

சாம்சங் கேலக்ஸி ஏ71 ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு ஒரு நற்செய்தி.!

இந்த ஸ்மார்ட்போனில் மிகவும் அதிகம் எதிர்பார்த்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 730எஸ்ஒசி சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. கேலக்ஸி ஏ71 ஸ்மார்ட்போனின் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

கேலக்ஸி ஏ71 சாதனத்தின் கேமரா அமைப்பிற்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்றுதான் கூறவேண்டும், அதன்படி இந்த சாதனத்தின் பின்புறம் 64எம்பி பிரைமரி கேமரா + 12வைடு ஆங்கிள் லென்ஸ் + 5எம்பி டெப்த் சென்சார் + 5எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 32எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம்என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

சாம்சங் கேலக்ஸி ஏ71 ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு ஒரு நற்செய்தி.!

கேலக்ஸி ஏ71 ஸ்மார்ட்போனில் வைஃபை 802.11ஏசி,புளூடூத் வி 5.0, ஏ-ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள்ள அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஸ்மார்ட்போனில் 4500எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. குறிப்பாக வீடியோ, வீடியோ கேம் போன்ற வசதிகளுக்கு அருமையாக உதவும். அதன்பின்பு 25வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியை அடிப்படையாக கொண்டுஇந்த சாதனம் வெளிவந்துள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Samsung Galaxy A71 Received Android 11 with One UI 3.1 Update: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X