சாம்சங் கேலக்ஸி ஏ71 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.! உடனே முந்துங்கள்.!

|

சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி ஏ71 ஸ்மார்ட்போன் மாடலுக்கு விலைகுறைப்பை அறிவித்துள்ளது, அதன்படி 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட கேலக்ஸி ஏ71 ஸ்மார்ட்போனின் விலை ரூ.32,999-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.30,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக சாம்சங்.காம், பிளிப்கார்ட் போன்ற தளங்களில் இந்த சாதனத்தை வாங்க முடியும்.

கேலக்ஸி ஏ71 ஸ்மார்ட்போன் மாடல் 6.7-

சாம்சங் கேலக்ஸி ஏ71 ஸ்மார்ட்போன் மாடல் 6.7-இன்ச் சூப்பர் AMOLED Plus எச்டிபிளஸ் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது.. மேலும் 2400 x 1080பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

மிகவும் அதிகம் எதிர்பார்த்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 730எஸ்ஒசி சிப்செட்

இந்த ஸ்மார்ட்போனில் மிகவும் அதிகம் எதிர்பார்த்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 730எஸ்ஒசி சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குளத்தை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளிவநதுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

VI நிறுவனத்தின் ரூ.49-திட்டம் உட்பட மலிவு விலை திட்டங்கள் மற்றும் ஆப் வசதி அறிமுகம்.! முழுவிவரம்.!VI நிறுவனத்தின் ரூ.49-திட்டம் உட்பட மலிவு விலை திட்டங்கள் மற்றும் ஆப் வசதி அறிமுகம்.! முழுவிவரம்.!

ஸ்மார்ட்போனின் 6ஜிபி/8ஜிபி ரேம்

கேலக்ஸி ஏ71 ஸ்மார்ட்போனின் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

சாதனத்தின் கேமரா அமைப்பிற்கு

கேலக்ஸி ஏ71 சாதனத்தின் கேமரா அமைப்பிற்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்றுதான் கூறவேண்டும், அதன்படி இந்த சாதனத்தின் பின்புறம் 64எம்பி பிரைமரி கேமரா + 12வைடு ஆங்கிள் லென்ஸ் + 5எம்பி டெப்த் சென்சார் + 5எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 32எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

ஸ்மார்ட்போனில் வைஃபை

கேலக்ஸி ஏ71 ஸ்மார்ட்போனில் வைஃபை 802.11ஏசி,புளூடூத் வி 5.0, ஏ-ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள்ள அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜூம் செயலியில் இப்படி ஒரு அம்சம் இருக்கா?- இத்தனை நாளா தெரியாம போச்சே!ஜூம் செயலியில் இப்படி ஒரு அம்சம் இருக்கா?- இத்தனை நாளா தெரியாம போச்சே!

 4500எம்ஏஎச் பேட்டரி

இந்த ஸ்மார்ட்போனில் 4500எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. குறிப்பாக வீடியோ, வீடியோ கேம் போன்ற வசதிகளுக்கு அருமையாக உதவும். அதன்பின்பு 25வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளது. சாம்சங் கேலக்ஸி ஏ71 ஸ்மார்ட்போன் ஆனது கருப்பு, நீலம், சில்வர் போன்ற நிறங்களில் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A71 Price Slashed in India: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X