மூன்று சாம்சங் ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி விலைகுறைப்பு.!
சாம்சங் நிறுவனத்தின் மூன்று ஸ்மார்ட்போன்களுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட கேலக்ஸி ஏ71 ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.30,999-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.29,499-விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் 8ஜிபி ரேம் கொண்ட கேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போனுக்கு ரூ.1500-விலைகுறைக்கப்பட்டு ரூ.24,499-விலையில் விற்பனைசெய்யப்படுகிறது. பின்பு 6ஜிபி ரேம் கொண்ட கேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போனுக்கு ரூ.1000-விலைகுறைக்கப்பட்டு ரூ.22,999-விலையில்விற்பனை செய்யப்படுகிறது. மேலும் சாம்சங் கேலக்ஸி ஏ31 ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.18,999-விலையில்
விற்பனை செய்யப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி ஏ71 ஸ்மார்ட்போன் மாடல் 6.7-இன்ச் சூப்பர் AMOLED Plus எச்டிபிளஸ் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது. மேலும் 2400 x 1080பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். இந்த ஸ்மார்ட்போனில் மிகவும் அதிகம் எதிர்பார்த்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 730எஸ்ஒசி சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குளத்தை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளிவநதுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கேலக்ஸி ஏ71 சாதனத்தின் கேமரா அமைப்பிற்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்றுதான் கூறவேண்டும், அதன்படி இந்த சாதனத்தின் பின்புறம் 64எம்பி பிரைமரி கேமரா + 12வைடு ஆங்கிள் லென்ஸ் + 5எம்பி டெப்த் சென்சார் + 5எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 32எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். இந்த ஸ்மார்ட்போனில் 4500எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. குறிப்பாக வீடியோ, வீடியோ கேம் போன்ற வசதிகளுக்கு அருமையாக உதவும். அதன்பின்பு 25வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் முழு எச்டி பிளஸ் இன்பினிட்டி-ஒ அமோல்ட் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும், பின்பு 2340 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவருவதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். இந்த ஸ்மார்ட்போன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆக்டோ-கோர்
எக்ஸிநோஸ் 9611 சிப்செட் (குவாட் 2.3ஜிகாஹெர்ட்ஸ் 10 குவாட் 1.7ஜிகாஹெர்ட்ஸ்) வசதியுடன் மாலி-ஜி72 ஜிபியு வசதியும் இடம்பெற்றுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 10இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

கேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 12எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ்+ 5எம்பி டெப்த் சென்சார் + 5எம்பி மேக்ரோ கேமரா என மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 32எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ்,உள்ளிட்ட அம்சங்கள் இவற்றுள் அடக்கம். புதிய கேலக்ஸி ஏ51 ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி மற்றும் 15வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி இடம்பெற்றுள்ளது.

கேலக்ஸி ஏ31 ஸ்மார்ட்போன் மாடல் 6.4-இன்ச் முழு எச்டி பிளஸ் இன்பினிட்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது,பின்பு 1080x2400 பிக்சல் திர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த
சாதனம். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் மீடியாடெக் ஹீலியோ பி65 சிப்செட் ஆதரவைக் கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

கேலக்ஸி ஏ31 ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ராடு வைடு ஆங்கிள் லென்ஸ் + 5எம்பி மேக்ரோ லென்ஸ் + 5எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 20எம்பி செல்பீ கேமரா, கைரேகை சென்சார் மற்றும் இன்ஃராரெட் சென்சார் உள்ளிட்ட ஆதரவுகளுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது. கேலக்ஸி ஏ31 ஸ்மார்ட்போனில்
5000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 15வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி இவற்றுள் இடம்பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications