சாம்சங் கேலக்ஸி ஏ70எஸ் ஸ்மார்ட்போனுக்கு புதிய அப்டேட்.! என்ன தெரியுமா?
சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ70எஸ் மற்றும் கேலக்ஸி ஏ90 5ஜி ஸ்மார்ட்போன்களுக்கு ஆண்ட்ராய்டு 11 சார்ந்த One UI 3.1 அப்டேட் வழங்குவதாக தெரவித்துள்ளது. மேலும் இதனுடன் மார்ச் 2021 security patch மற்றும் சில புதிய அம்சங்களும் இந்த அசத்தலான ஸ்மார்ட்போனக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த புதிய அப்டேட் முதலில் இந்திய பயனர்களுக்கு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின்பு தான் தென் கொரியாவில் பயனர்களுக்கு கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. சாட் பபிள்ஸ், மேம்பட்ட தனியுரிமை மற்றும் பாதுகாப்பு, மேம்பட்ட மீடியா கண்ட்ரோல்ஸ், ஒன் டைம் பெர்மிஷன், நோட்டிபிகேஷன் ஹிஸ்டரி, ப்ரியாரிட்டி சாட் பங்க்ஷன் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஆண்ட்ராய்டு அப்டேட். மேலும் இந்த கேலக்ஸி ஏ70எஸ் சாதனத்தின் பல்வேறு அம்சங்களை இப்போது பார்ப்போம்.

சாம்சங் கேலக்ஸி ஏ70எஸ் ஸ்மார்ட்போன் 6.7-இன்ச் எப்எச்டி பிளஸ் இனிபினிட்டி யு சூப்பர் AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது,பின்பு 2400 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது.
2ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 675எஸ்ஒசி சிப்செட் அடிப்படையாக கொண்டு இந்த கேலக்ஸி ஏ70எஸ் ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 9பை இயங்குதளத்தை கொண்டு இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது, ஆனால்
தற்சமயம் ஆண்ட்ராய்டு 11 அப்டேட் கிடைத்துள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ70எஸ் ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி லென்ஸ் + 5எம்பி செகன்டரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் என மூன்று கேமராக்கள் இடம்பெற்றுள்ளது. மேலும் 32எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.
சாம்சங் கேலக்ஸி ஏ70எஸ் ஸ்மார்ட்போனில் 4500எம்ஏஎச் பேட்டரி இடம்பெற்றுள்ளது, பின்பு வைஃபை, ஜிபிஎஸ்,டூயல் 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், 3.5எம்எம் ஆடியோ ஜாக் யுஎஸ்பி டைப்-சி போர்ட் மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

குறிப்பிட்ட ஆண்ட்ராய்டு 11 அப்டேட் பற்றிய தகவல் உங்களுக்கு வரவில்லை என்றால், நீங்கள் கைமுறையாக கூட இதை சரிபார்க்கலாம் மற்றும் அப்டேட் செய்யலாம், அதற்கு நீங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள செட்டிங்ஸ்-ற்குள் செல்ல வேண்டும், பின்னர் சாப்ட்வெர் அப்டேட்டை சரிபார்க்கலாம்.


Click it and Unblock the Notifications