Samsung Galaxy A70s: சாம்சங் கேலக்ஸி ஏ70எஸ் ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு.!
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ70எஸ் ஸ்மார்ட்போன் ஆனது இந்தியாவில் நல்ல வரவேறப்பை பெற்றுள்ளது என்றுதான் கூறவேண்டும், குறிப்பாக மூன்று ரியர் கேமரா ஆதரவு மற்றும் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. தற்சமயம் இந்த கேலக்ஸி ஏ70எஸ் ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி
அதன்படி 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட கேலக்ஸி ஏ70எஸ் ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.28,999-ஆக இருந்தது, தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.26,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட கேலக்ஸி ஏ70எஸ் ஸ்மார்ட்போனின் முந்தைய விலை ரூ.30,999-ஆக இருந்தது,
தற்சமயம் விலைகுறைக்கப்பட்டு ரூ.28,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

அசத்தலான டிஸ்பிளே
சாம்சங் கேலக்ஸி ஏ70எஸ் ஸ்மார்ட்போன் 6.7-இன்ச் எப்எச்டி பிளஸ் இனிபினிட்டி யு சூப்பர் AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது,பின்பு 2400 * 1080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது.

ஸ்னாப்டிராகன் 675எஸ்ஒசி சிப்செட்
2ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 675எஸ்ஒசி சிப்செட் அடிப்படையாக கொண்டு இந்த கேலக்ஸி ஏ70எஸ் ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 9பை இயங்குதளத்தை கொண்டுள்ளதால் இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

கேமரா அமைப்பு
சாம்சங் கேலக்ஸி ஏ70எஸ் ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி லென்ஸ் + 5எம்பி செகன்டரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் என மூன்று கேமராக்கள் இடம்பெற்றுள்ளது. மேலும் 32எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

பேட்டரி மற்றும் இணைப்பு
ஆதரவுகள் சாம்சங் கேலக்ஸி ஏ70எஸ் ஸ்மார்ட்போனில் 4500எம்ஏஎச் பேட்டரி இடம்பெற்றுள்ளது, பின்பு வைஃபை, ஜிபிஎஸ்,
டூயல் 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், 3.5எம்எம் ஆடியோ ஜாக் யுஎஸ்பி டைப்-சி போர்ட் மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள்அடக்கம்.


Click it and Unblock the Notifications