இந்தியா: மே 1: மூன்று கேமராக்களுடன் கேலக்ஸி ஏ70 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
கேலக்ஸி ஏ70 ஸ்மார்ட்போனின் பின்புறம் 32எம்பி பிரைமரி கேமரா+ 8எம்பி அல்ட்ரா வைட் கேமரா + 5எம்பி டெப்த் கேமரா என மூன்று கேமராக்கள் இடம்பெற்றுள்ளது.
இந்தியாவில் வரும் மே 1-ம் தேதி அன்று சாம்சங் நிறுவனம் அதன் கேலக்ஸி ஏ70 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, பின்பு இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.28,990-என்று அந்நிறுவனம் சார்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக கேலக்ஸி ஏ70 ஸ்மார்ட்போன் மாடல் பிளிப்கார்ட் வலைதளத்தில் விற்பனை வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு கருப்பு, நீலம், வெள்ளை போன்ற நிறங்களில் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல் கிடைக்கும் என்பது
குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த கேலக்ஸி ஏ70 ஸ்மார்ட்போனின் பல்வேறு அம்சங்களைப் பார்ப்போம்.

டிஸ்பிளே:
சாம்சங் கேலக்ஸி ஏ70 ஸ்மார்ட்போன் பொதுவாக 6.7-இன்ச் எச்டி பிளஸ் சூப்பர் ஏஎம்ஒஎல்இடி இன்பினிட்டி -யு டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பினபு 1080 பிக்சல் திர்மானம் மற்றும் 20:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் இந்த சாதனம் வெளிவந்துள்ளது.

ஸ்னாப்டிராகன் 670:
கேலக்ஸி ஏ70 ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 670 ஆக்டோ-கோர் சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது,பின்பு ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக கருப்பு, நீலம், வெள்ளை போன்ற நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேமரா:
கேலக்ஸி ஏ70 ஸ்மார்ட்போனின் பின்புறம் 32எம்பி பிரைமரி கேமரா+ 8எம்பி அல்ட்ரா வைட் கேமரா + 5எம்பி டெப்த் கேமரா என மூன்று கேமராக்கள் இடம்பெற்றுள்ளது. பின்பு 32எம்பி செல்பீ கேமரா மற்றும் எல்இடி பிளாஸ் ஆதரவு மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

சேமிப்பு:
கேலக்ஸி ஏ70 சாதனத்தில் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பேட்டரி:
இந்த ஸ்மார்ட்போனில் 4500எம்ஏஎச் பேட்டரி இடம்பெற்றுள்ளது, பின்பு பல்வேறு இணைப்பு ஆதரவுகள் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது


Click it and Unblock the Notifications