மூன்று கேமராக்களுடன் கேலக்ஸி ஏ70 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

கேலக்ஸி ஏ70 ஸ்மார்ட்போனின் பின்புறம் 32எம்பி பிரைமரி கேமரா+ 8எம்பி அல்ட்ரா வைட் கேமரா + 5எம்பி டெப்த் கேமராஎன மூன்று கேமராக்கள் இடம்பெற்றுள்ளது.

|

தென்கொரியாவில் சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி ஏ70 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது, பின்பு இந்த ஸ்மார்ட்போன் மாடல் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக்கு கொண்டுவரப்படும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்குமுன்பு சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ40 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது, கேலக்ஸி ஏ40 ஸ்மார்ட்போன் அனைத்து இடங்களிலும் அதிக வரவேற்பை பெற்றுள்ளது என்று தான் கூறவேண்டும்.

மூன்று கேமராக்களுடன் கேலக்ஸி ஏ70 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

கேலக்ஸி ஏ70 ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் ஆதரவு உள்ளது, பின்பு வாட்டர் டிராப் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளதால் இந்த ஸ்மார்ட்போனை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

 டிஸ்பிளே:

டிஸ்பிளே:

சாம்சங் கேலக்ஸி ஏ70 ஸ்மார்ட்போன் பொதுவாக 6.7-இன்ச் எச்டி பிளஸ் சூப்பர் ஏஎம்ஒஎல்இடி இன்பினிட்டி -யு டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பினபு 1080 பிக்சல் திர்மானம் மற்றும் 20:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் இந்த சாதனம் வெளிவந்துள்ளது.

ஸ்னாப்டிராகன் 670:

ஸ்னாப்டிராகன் 670:

கேலக்ஸி ஏ70 ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 670 ஆக்டோ-கோர் சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது,பின்பு ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக கருப்பு, நீலம், வெள்ளை போன்ற நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேமரா:

கேமரா:

கேலக்ஸி ஏ70 ஸ்மார்ட்போனின் பின்புறம் 32எம்பி பிரைமரி கேமரா+ 8எம்பி அல்ட்ரா வைட் கேமரா + 5எம்பி டெப்த் கேமரா என மூன்று கேமராக்கள் இடம்பெற்றுள்ளது. பின்பு 32எம்பி செல்பீ கேமரா மற்றும் எல்இடி பிளாஸ் ஆதரவு மற்றும்
செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

சேமிப்பு:

சேமிப்பு:

கேலக்ஸி ஏ70 சாதனத்தில் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பேட்டரி:

பேட்டரி:

இந்த ஸ்மார்ட்போனில் 4500எம்ஏஎச் பேட்டரி இடம்பெற்றுள்ளது, பின்பு பல்வேறு இணைப்பு ஆதரவுகள் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக வரும் ஏப்ரல் 10-ம் தேதி அனைத்து நாடுகளுக்கு கேலக்ஸி ஏ70 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என சாம்சங் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A70 with 32MP triple cameras 4500mAh battery announced: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X