இந்தியா: ஸ்னாப்டிராகன் 670சிப்செட் வசதியுடன் களமிறங்கும் கேலக்ஸி ஏ70.!
கேலக்ஸி ஏ70 ஸ்மார்ட்போனின் பின்புறம் 32எம்பி பிரைமரி கேமரா+ 8எம்பி அல்ட்ரா வைட் கேமரா + 5எம்பி டெப்த் கேமரா என மூன்று கேமராக்கள் இடம்பெற்றுள்ளது.
சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ70 ஸ்மார்ட்போன் மாடலை தென்கொரியாவில் அறிமுகம் செய்தது, இதை தொடர்ந்து விரைவில் இந்தியாவில் கேலக்ஸி ஏ70 சாதனத்தை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது அந்நிறுவனம். மேலும்
இந்த ஸ்மார்ட்போன் மாடல் அதிநவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் மூன்று கேமரா வசதிகள் இடம்பெற்றுள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் விலை சற்று உயர்வாக தான இருக்கிறது. இருந்தபோதிலும் விலைக்கு தகுந்த அம்சங்களுடன் கேலக்ஸி ஏ70 ஸ்மார்ட்போன் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு வரும். மேலும் இந்த சாதனத்தின் பல்வேறு சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

டிஸ்பிளே:
சாம்சங் கேலக்ஸி ஏ70 ஸ்மார்ட்போன் பொதுவாக 6.7-இன்ச் எச்டி பிளஸ் சூப்பர் ஏஎம்ஒஎல்இடி இன்பினிட்டி -யு டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பினபு 1080 பிக்சல் திர்மானம் மற்றும் 20:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் இந்த சாதனம் வெளிவந்துள்ளது.

ஸ்னாப்டிராகன் 670:
கேலக்ஸி ஏ70 ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 670 ஆக்டோ-கோர் சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக கருப்பு, நீலம், வெள்ளை போன்ற நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேமரா:
கேலக்ஸி ஏ70 ஸ்மார்ட்போனின் பின்புறம் 32எம்பி பிரைமரி கேமரா+ 8எம்பி அல்ட்ரா வைட் கேமரா + 5எம்பி டெப்த் கேமரா என மூன்று கேமராக்கள் இடம்பெற்றுள்ளது. பின்பு 32எம்பி செல்பீ கேமரா மற்றும் எல்இடி பிளாஸ் ஆதரவு மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

சேமிப்பு:
கேலக்ஸி ஏ70 சாதனத்தில் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பேட்டரி:
இந்த ஸ்மார்ட்போனில் 4500எம்ஏஎச் பேட்டரி இடம்பெற்றுள்ளது, பின்பு பல்வேறு இணைப்பு ஆதரவுகள் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.30,919-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications