Home
Mobile

சாம்சங் தனது கேலக்ஸி ஏ70 ஸ்மார்ட்போன் மாடலுக்கு புத்தம் புதிய அப்டேட்.!

சாம்சங் தனது கேலக்ஸி ஏ70 ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு 10 புதுப்பிப்பை வெளியிடத் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது, மேலும் புதிய அம்சங்கள் மற்றும் பிழை திருத்தங்களுடன் சமீபத்திய ஒன்யூஐ 2.0 வசதி இந்த சாதனத்திற்கு வழங்கப்படும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர்

இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர்

கேலக்ஸி ஏ70 ஸ்மார்ட்போனில் இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் ஆதரவு உள்ளது, பின்பு வாட்டர் டிராப் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளதால் இந்த ஸ்மார்ட்போனை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

சாம்சங் கேலக்ஸி ஏ70 டிஸ்பிளே

சாம்சங் கேலக்ஸி ஏ70 டிஸ்பிளே

சாம்சங் கேலக்ஸி ஏ70 ஸ்மார்ட்போன் பொதுவாக 6.7-இன்ச் எச்டி பிளஸ் சூப்பர் ஏஎம்ஒஎல்இடி இன்பினிட்டி -யு டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பினபு 1080 பிக்சல் திர்மானம் மற்றும் 20:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் இந்த சாதனம் வெளிவந்துள்ளது.

ஸ்னாப்டிராகன் 670 சிப்செட்

ஸ்னாப்டிராகன் 670 சிப்செட்

கேலக்ஸி ஏ70 ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 670 ஆக்டோ-கோர் சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக கருப்பு, நீலம், வெள்ளை போன்ற நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 கேலக்ஸி ஏ70 கேமரா

கேலக்ஸி ஏ70 கேமரா

கேலக்ஸி ஏ70 ஸ்மார்ட்போனின் பின்புறம் 32எம்பி பிரைமரி கேமரா+ 8எம்பி அல்ட்ரா வைட் கேமரா + 5எம்பி டெப்த் கேமரா என மூன்று கேமராக்கள் இடம்பெற்றுள்ளது. பின்பு 32எம்பி செல்பீ கேமரா மற்றும் எல்இடி பிளாஸ் ஆதரவு மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

கேலக்ஸி ஏ70

கேலக்ஸி ஏ70 சாதனத்தில் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 4500எம்ஏஎச் பேட்டரி

4500எம்ஏஎச் பேட்டரி

இந்த ஸ்மார்ட்போனில் 4500எம்ஏஎச் பேட்டரி இடம்பெற்றுள்ளது, மேலும் ப்ளூடூத் ஆதரவு, யுஎஸ்பி டைப்-சி போர்ட், வைஃபை, ஜிபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A70 now receiving Android 10 update : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X