செப்: 27 - களமிறங்கும் ட்ரிபிள் கேமரா சாம்சங் கேலக்ஸி ஏ7.! விலை விபரம்.!
இந்தியா சந்தையில் ட்ரிபிள் கேமரா செட்டபுடன் வெளியாகப் போகும் முதல் ஸ்மார்ட்போன் என்ற பெருமை கேலக்ஸி ஏ7 ஸ்மார்ட் போன்ற்கு கிடைத்துள்ளது.
சாம்சங் நிறுவனத்தின் புதிய 4 ட்ரிபிள் கேமரா சேவை கொண்ட சாம்சங் கேலக்ஸி ஏ7 ஸ்மார்ட்போன்-னினை வெளியிடப் போவதாக அந்நிறுவனம் தெரிவித்திருந்தது.

இந்தியா சந்தையில் ட்ரிபிள் கேமரா செட்டபுடன் வெளியாகப் போகும் முதல் ஸ்மார்ட்போன் என்ற பெருமை கேலக்ஸி ஏ7 ஸ்மார்ட் போன்ற்கு கிடைத்துள்ளது.

புதிய கேலக்ஸி ஏ7
சாம்சங் இன் புதிய கேலக்ஸி ஏ7 பற்றிய விபரக்குறிப்புகள் மற்றும் சிறப்பம்சங்கள் பற்றிய அனைத்துத் தகவல்களும் நமக்குக் கிடைத்துவிட்ட நிலையில், அதன் அதிகாரப்பூர்வ விலை பற்றிய விபரங்களை இன்னும் சாம்சங் நிறுவனம் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

செப்டம்பர் 25
சாம்சங் கேலக்ஸி ஏ7 ஸ்மார்ட் போன் செப்டம்பர் 25 ஆம் தேதி இந்தியா சந்தையில் அறிமுகம் செய்யடுமென்ற அறிவிப்பை அறிவித்திருக்கிறது.

இ-ஸ்டோர் & பிளிப்கார்ட்
இந்த புதிய சாம்சங் கேலக்ஸி ஏ7 ஸ்மார்ட் போன் சாம்சங் நிறுவனத்தின் இ-ஸ்டோர் மற்றும் பிளிப்கார்ட் தலத்தில் கிடைக்குமென்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மூன்று பிரைமரி கேரா, செல்பி கேமரா என மொத்தம் நான்கு கேமராக்களுடன் சாம்சங் ஏ7 ஸ்மார்ட்போன் செப்டம்பர் 25 அறிமுகம் செய்யப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி ஏ7 விபரக்குறிப்பு:
- 6 இன்ச் முழு எச்.டி பிளஸ் சூப்பர் அமோலேட் இன்பினிட்டி 1080x2220 பிக்சல் ரெசொலூஷன் கொண்ட டிஸ்பிளே
- 2.2GHz ஆக்டா கோர் ஏகசினோஸ் அல்லது ஸ்னாப் டிராகன் சிப்செட்
- ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ
- 4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு
- 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு வேரியண்ட்
- 6ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு வேரியண்ட் என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கும்.
- 256 ஜிபி வரையிலான விரிவாக்கச் சேமிப்பு வசதி
- 8 மெகா பிக்சல் 120 டிகிரி அல்ட்ரா வைய்டு ஏங்கிள் கேமரா(f/2.4)
- 24 மெகா பிக்சல் கேமரா (f/1.7)
- 5 மெகா பிக்சல் கேமரா (f/2.2)
- 24 மெகா பிக்சல் பிரென்ட் பேஸிங் செல்பி கேமரா (f/2.0)
- 3,300 எம்.ஏ.எச் பேட்டரி
எதிர்பார்க்கப்படும் துவக்க விலை: 23,990


Click it and Unblock the Notifications