Home
Mobile

மூன்று கேமராவுடன் கேலக்ஸி ஏ7 ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா?

இந்த கேலக்ஸி ஏ7 ஸ்மார்ட்போனில் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ7 ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் மூன்று கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் விரைவில் வெளிவரும் ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனிலும் மூன்று கேமராக்கள் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று கேமராவுடன் கேலக்ஸி ஏ7 ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை?

சாம்சங் கேலக்ஸி ஏ7 ஸ்மார்ட்போனில் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம். பின்பு இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் பல்வேறு அம்சங்களைப் பார்ப்போம்.

சாம்சங் கேலக்ஸி ஏ7:

சாம்சங் கேலக்ஸி ஏ7:

சாம்சங் கேலக்ஸி ஏ7 ஸ்மார்ட்போன் மாடல் 6-இன்ச் எப்எச்டி சூப்பர் அமோல்ட் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது இந்த
அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். பின்பு 2.5டி பாதுகாப்பு கண்ணாடி அமைப்புடன் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ7 ஸ்மார்ட்போன்
வெளிவந்துள்ளது.

 எக்ஸிநோஸ் 7885:

எக்ஸிநோஸ் 7885:

சாம்சங் கேலக்ஸி ஏ7 ஸ்மார்ட்போனில் எக்ஸிநோஸ் 7885 2.2ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு
ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிக அருமையாக இருக்கும்.

சேமிப்பு:

சேமிப்பு:

இந்த கேலக்ஸி ஏ7 ஸ்மார்ட்போனில் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி
நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது. பின்பு வீடியோ கேம் மற்றும் ஆப் வசதிகளுக்கு தகுந்தபடி இந்த ஸ்மார்ட்போன்
வெளிவந்துள்ளது.

கேமரா:

கேமரா:

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் மூன்று கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, அதில் 8எம்பி அல்ட்ரா வைட் கேமரா, 24எம்பி லோ லைட்
கேமரா, 5எம்பி டெப்த் லென்ஸ் கேமரா என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இந்த ஸ்மார்ட்போனின் முன்புறம் 24மெகாபிக்சல்
கொண்ட கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, அதில் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களும் உள்ளது என்று தான் கூறவேண்டும். குறிப்பாக எல்இடி பிளாஷ் ஆதரவு இவற்றில் உண்டு.

விலை மற்றும் பேட்டரி:

விலை மற்றும் பேட்டரி:

சாம்சங் கேலக்ஸி ஏ7 ஸ்மார்ட்போனில் 3300எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, குறிப்பாக 4ஜிபி ரேம் கொண்ட இக்கருவியின்
விலை ரூ.23,990-ஆக உள்ளது, அதேபோல் 6ஜிபி கொண்ட மாடலின் விலை ரூ.28,990-ஆக உள்ளது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் 2000 வரை கேஷ்பேக் பெறமுடியும். பின்பு வரும் 27-ம் தேதி முதல் இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை துவங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A7 with triple rear cameras launched in India starting Rs 23990: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X