பொங்கலுக்கு விலை குறைந்த சாம்சங் ஸ்மார்ட்போன்கள்.!
ஏ7, ஏ9 ஸ்மார்ட்போன்: சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ7 மற்றும் ஏ9 போன்கள் விலை இந்தியாவில் குறைக்கப்பட்டுள்ளது . சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ7 மற்றும் ஏ9 போன்கள் 2018 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட
தமிழர் திருநாளாம் தை பொங்கள் சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. இதையொட்டி சாம்சங் ஸ்மார்ட்போன் நிறுவனம் தற்போது விலையை குறைந்து விற்பனையை அதிரவிட்டுள்ளது.

இதனால் ஏராளமான வாடிக்கையாளர்கள் ஸ்மார்ட்போன்களை வாங்க முன் வந்துள்ளனர். இந்த பொங்கல் விலை குறைந்த சாம்சங் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் வாங்கி பொது மக்கள் பொங்கலை கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.

ஏ7, ஏ9 ஸ்மார்ட்போன்:
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ7 மற்றும் ஏ9 போன்கள் விலை இந்தியாவில் குறைக்கப்பட்டுள்ளது. சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ7 மற்றும் ஏ9 போன்கள் 2018 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.

விலை குறைந்துள்ளது:
தற்போது இந்த போன்களின் விலை இந்திய சந்தையில் குறைந்துள்ளது. சாம்சங் கேலக்ஸி ஏ7-ன் 4ஜிபிரோம்/64ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்டின் விலை ரூ.18,990 ஆக குறைக்கப்படுள்ளது. இதற்கு முன்பாக இந்த வேரியண்டு ரூ.23,990 விற்பனை செய்யப்பட்டது.

அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது:
அதேபோல் 6ஜிபி ரேம்/ 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.22,990 ஆக குறைந்துள்ளது. இதற்கு முன்பாக இந்த வேரியண்டு ரூ.28,990 விற்பனை செய்யப்பட்டது. சாம்சங் கேலக்ஸி ஏ9 போனின் 6ஜிபி ரேம்/128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ.3,000 விலை குறைந்து ரூ.33,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதிர விட்ட சாம்சங் நிறுவனம்:
அதேபோல் கேலக்ஸி ஏ9-ன் 8 ஜிபி ரேம்/128ஜிபி வேரியண்ட் ரூ 36,990 விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு முன்பாக ரூ 39,990-க்கு விற்பனை செய்யப்பட்டது. விலையை குறைத்து அதிரவிட்டுள்ளது சாம்சங் நிறுவனம். இதனால் பொது மக்கள் அனைவரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications