சாம்சங் கேலக்ஸி A7 2018-ல் உள்ள சிறப்பு தன்மைகளும் அளிக்க தவறியவைகளும்

|

இடைப்பட்ட வகையைச் சேர்ந்த பிரிவில் மூன்று கேமராக்களுடன் கூடிய ஸ்மார்ட்போனை, சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

இதன்படி கேலக்ஸி A7 2018 என்ற ஸ்மார்ட்போனை 2 வகைகளில் களமிறக்கி உள்ளது. 4GB ரேம் மற்றும் 64GB சேமிப்பகம் கொண்டு ரூ.23,990 என்ற விலை நிர்ணயத்திலும் 6GB ரேம் மற்றும் 128GB சேமிப்பகம் கொண்டு ரூ.28,990 என்ற விலை நிர்ணயத்திலும் வழங்கப்பட்டுள்ளது. இவற்றின் சிறப்பு தன்மைகளும், அளிக்க தவறிய தன்மைகளையும் குறித்து கீழே காண்போம்.

 சாம்சங் கேலக்ஸி A7 சிறப்பு தன்மைகள்

சாம்சங் கேலக்ஸி A7 சிறப்பு தன்மைகள்

டிஸ்ப்ளே

சிறப்பு வாய்ந்த இதன் டிஸ்ப்ளே 6 இன்ச் சூப்பர் அமோல்டு உடன் மெய்யான FHD+ பகுப்பாய்வு மற்றும் 1080 x 2220 பிக்சல்கள் கொண்டுள்ளது. மல்டிமீடியாவுக்கு ஏற்றதாக 18:5:9 அம்ச விகிதத்தில் உள்ளது. இதன் பகுப்பாய்வுக்கு வைடுவைன் L1 சான்றிதழ் கிடைத்துள்ளதால், அமேசான் ப்ரைம் வீடியோ, நெட்பிலிக்ஸ் என்று எல்லா வீடியோ ஸ்ட்ரீம்மிங் சேவைகளைப் பெற முடிகிறது.

சேமிப்பு தேர்வுகள்

இந்த ஃபோனில் 4GB / 6GB ரேம் மற்றும் 64GB / 128GB சேமிப்பக தேர்வுகளை கொண்டுள்ளது. இதை ஒரு மைக்ரோSD மூலம் 512GB விரிவாக்கம் செய்ய முடியும். இந்த ஃபோனில் நிறுவப்படும் எல்லா அப்ளிகேஷன்களையும் சமூக வலைத்தள உள்ளடக்கங்களையும் நேரடியாக SD கார்டில் சேமிக்கலாம்.

ஆடியோ ஜெக்

ஆடியோ ஜெக்

பெரும்பாலான ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்களைப் போல, இதிலும் டைப்-சி போர்ட்டிற்கு தகுந்த 3.5mm ஆடியோ ஜெக் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் மூன்றாம் தரப்பு ஹென்ஸ் ப்ரீ தயாரிப்புகளுடன் எளிதாக பயன்படுத்தலாம்.

பக்கவாட்டில் ஏறிவரும் கைரேகை சென்ஸர்

ஸ்மார்ட்போனை எளிதாக திறக்கும் வகையில், பக்கவாட்டில் ஏறிச்செல்லும் கைரேகை சென்ஸர் அளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக வெளியிடப்பட்ட சாம்சங் தயாரிப்புகளான கேலக்ஸி நோட் 8 மற்றும் எஸ்8 ஆகியவற்றில், கைரேகை சென்ஸர் வைக்கப்பட்ட இடம் குறித்து விமர்சனம் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

சிறப்பான செயல்பாடு

சிறப்பான செயல்பாடு

3300mAh பேட்டரியில் இயங்கும் இந்த ஃபோன், சாம்சங் நிறுவனத்தின் ஸ்மார்ட் அசிஸ்டெண்ட்டான பிக்ஸ்பை-யை ஆதரிக்கிறது. இதன்மூலம் இந்த சாதனம் சாம்சங் பே பயன்படுத்தி, மற்ற வாலெட்களுக்கு போகாமலேயே கட்டணங்களை செலுத்த முடிகிறது.

சாம்சங் கேலக்ஸி A7 இல் அளிக்க தவறிய தன்மைகள்

மாறுபட்ட துளை இல்லை

இந்த ஃபோனில் மூன்று கேமரா இருக்கும் நிலையிலும் மாறுபட்ட துளை தொழிற்நுட்பம் இல்லாதது ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது. இருப்பினும், மாறுபட்ட ஒளி சூழ்நிலைகளிலும் இந்த ஃபோன் சிறந்த செயல்படும் என்று தயாரிப்பு நிறுவனம் கூறுகிறது.

பழைய செயலி

பழைய செயலி

கேலக்ஸி A7 2018-யை இந்நிறுவனத்தின் எக்ஸினோஸ் 7885 ஆக்டா-கோர் செயலி இயக்கி, 2.2GHz, 1.6GHz செயல்பாட்டை தருகிறது. இதற்கு பதிலாக மிகவும் சமீபகாலத்தை சேர்ந்த 8890 செயலியை பயன்படுத்தி இருக்கலாம்.

காலம் கடந்த சாஃப்ட்வேர்

தற்போது ஆண்ட்ராய்டு 9 பை வெளியாகி உள்ள நிலையில், இந்த ஃபோன் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ மூலம் இயக்கப்படுவது ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது. ஆடியோ வெளியீடு கூட டால்பி அட்மோஸ் மூலம் இயக்கப்படுகிறது. இதை ஹெட்போனை பயன்படுத்தி மட்டுமே கேட்க முடியும் என்பது பின்னடைவு.

இன்-டிஸ்ப்ளே பையோமெட்ரிக் பாதுகாப்பு இல்லை

இன்-டிஸ்ப்ளே பையோமெட்ரிக் பாதுகாப்பு இல்லை

பக்கவாட்டில் ஏறிச் செல்லும் கைரேகை சென்ஸர் அமைப்பு என்ற ஒரு புதிய செயல்பாட்டை சாம்சங் நிறுவனம் அளித்திருந்தாலும், இன்- டிஸ்ப்ளே கைரேகை சென்ஸர் அளித்து இருந்தால் இன்னும் சிறப்பானதாக இது மாறி இருக்கும்.

X காரியங்கள்

ஹூவாய் P20 ப்ரோவிற்கு பிறகு மூன்று கேமரா அமைப்பைக் கொண்ட சிறப்பை, கேலக்ஸி A7 2018 பெற்றுள்ளது. இதில் f/1.7 துளை உடன் கூடிய 24MP ஆட்டோஃபோக்கஸ் சென்ஸர், f/2.4 துளை உடன் கூடிய 8MP அல்ட்ரா வைடு சென்ஸர் மற்றும் போக் தன்மை அளிப்பதற்கான f/2.2 துளை உடன் கூடிய 5MP ஆழமான சென்ஸர் என்று மூன்று கேமராக்கள் காணப்படுகிறது

இந்த கேமராவை குறுகிய காலத்தில் பரிசோதனை செய்ததில், வெவ்வேறு விதமான ஒளி சூழ்நிலைகளில் முதல் கட்டத்தில் சிறப்பாக செயல்பட்டதாக தெரிகிறது. இந்த கேமராவில் எடுக்கப்பட்ட படத்தில் தகவல்கள் விரிவாக காண முடிகிறது.

இதன் முதன்மை 24MP சென்ஸர், சூப்பர் பிக்ஸல் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதால், 4 பிக்ஸல்கள் ஒன்றாக சேர்த்து கொள்ளப்படுகிறது. இதில் படங்கள் அதிக தெளிவாக உள்ளது. 8MP சென்ஸர் மூலம் அல்ட்ரா வைடு படங்களை 120 கோணத்தில் எடுக்க முடிகிறது.

இதன் 5MP சென்ஸர் மூலம் பப்புலர் போக்கத் விளைவு படங்கள் எடுக்க முடிகிறது. இதில் படத்தின் இலக்கை துல்லியமாகவும் பின்னணியை மங்கலாகவும் மாற்றுகிறார். இது DSLR கேமராவில் எடுக்கப்படும் படங்களின் தன்மை அளிக்கிறது. செல்ஃபீ படங்களை எடுக்க, 24MP கேமரா அளிக்கப்பட்டுள்ளது. இது AR இமோஜி மற்றும் விரிந்த செல்ஃபீ மோடிலும் படம் எடுக்க உதவுகிறது.

முடிவு

முடிவு

இடைப்பட்ட பிரிவைச் சேர்ந்த சாதனங்களில், ஒரு பயனர் எதிர்பார்க்கும் எல்லா அம்சங்களையும் இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. சில பகுதிகளில் இன்னும் முன்னேற்றம் காட்டி இருந்தால், வாங்கவோரின் எண்ணிக்கையை அதிகரித்து இருக்கலாம். ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது, இது ஒரு சிறந்த ஸ்மார்ட்போன் எனலாம்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Samsung Galaxy A7 (2018): The good, the bad, and the X factor: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X