புதுமைகளுடன் இந்தியச் சந்தைக்குள் நுழைந்தது சாம்சங் கேலக்ஸி ஏ 7.!

அனைத்து ஆலைகளும் சுற்றிச்சுழன்று கொண்டிருக்க, அவர்களின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு வாடிக்கையாளர்களை ஈர்க்க சாம்சங் தயாராகி விட்டது.

|

ஸ்மார்போன் விரும்பிகளின் அகோரப்பசி, ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களின் அடங்காத ஆர்வம் இவையெல்லாம் மொபைல் நிறுவனங்களின் சிந்தனையை அளப்பரிய அளவில் தூண்டி விட்டுள்ளது. அனைத்து ஆலைகளும் சுற்றிச்சுழன்று கொண்டிருக்க, அவர்களின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு வாடிக்கையாளர்களை ஈர்க்க சாம்சங் தயாராகி விட்டது.

புதுமைகளுடன் இந்தியச் சந்தைக்குள் நுழைந்தது சாம்சங் கேலக்ஸி ஏ 7.!

சாம்சங் கேலக்ஸி ஏ7 என்ற புதிய ஸ்மார்ட் போன், கடந்த செப்டம்பர் மாதம் கடைசி வாரத்தில் இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. மூன்று பின்புற கேமராக்களுடன் பல்வேறு புதுமைகளை தன்னகத்தே கொண்டுள்ளது. இந்திய ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்களுக்கு இது புதிய அனுபவத்தை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.

சாம்சங் கேலக்ஸி ஏ7

சாம்சங் கேலக்ஸி ஏ7

சாம்சங் கேலக்ஸி ஏ7 ஸ்மார்ட் போன் இருவேறு டிவைஸ்களாக விற்பனைக்கு வந்துள்ளது. முதலாவது 4ஜிபி ரேமுடன், 64 ஜிபி உள்ளடக்க சேமிப்புத் திறனைப் பெற்றுள்ளது.இரண்டாவது 6 ஜிபி ரேமுடன் 128 ஜிபி உள்ளடக்க சேமிப்புத் திறனைக் கொண்டது.


தோற்றப் பொலிவு
கண்களை வசீகரிக்கும் வகையில் கண்ணாடிகள், இதுவரை பார்த்திராத இன்பினிடி டிஸ்பிளே இடம்பெற்றுள்ளது. பின்பக்கத்தில் படங்களை பக்காவாக கேப்ஜர் செய்யும் 3 கேமராக்கள் உள்ளன. செங்குத்தாக மேற்புற இடப்பகுதியில் எல்.இ.டி டிஸ்பிளேயுடன் கேமராவும், வலப்புறத்தில் பிங்கர் பிரிண்ட் ஸ்கேனரும் இருக்கிறது.வால்யூம் கண்ட்ரோல் மேல்புறத்தில் வலப்பக்கமாவும், சிம் மற்றும் மைக்ரோ எஸ்.டி கார்டு நுழைவுகள் இடம்புறத்திலும் அமைக்கப்பட்டுள்ளது.ஸ்பீக்கர் கிரில், மைக்ரோ யு.எஸ்.பி போர்ட், 3.5 எம்.எம் ஆடியோ ஜேக் ஆகியவை போனின் கீழே உள்ளது.

சேவைகள்

சேவைகள்

கேலக்ஸி ஏ7 போனுடன் அமேசான் ஷாப்பிங், பிரைம் வீடியோ, டெய்லி ஹண்ட், பேஸ்புக்,மைக்ரோசாப்ட் செயலிகள் மற்றும் லிங்க்டின் வழங்கப்பட்டுள்ளது. வோல்டு எக்ஸல், பவர் பாய்ண்ட், ஒன் டிரைவ்,லிங்க்டின் ஆகிய மூன்றாம்நபர் சேவைகளையும் தருகிறது. முதல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒன் டிரைவ் சேமிப்புக்கு 100 ஜி.பி சலுகை வழங்கப்படுகிறது. இதுதவிர கூகிள் செயலிகள், சாம்சங்கின் மை கேலக்ஸி, சாம்சங் பே, மை பைல், உள்ளிட்டவை வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கிறது.

ப்யூச்சர்ஸ்

ப்யூச்சர்ஸ்

எஸ் பவர் பிளானிங், எஸ் பைக் மோட், கேம் லாஞ்சர், எஸ் செக்யூர், பிங்கர் பிரிண்ட் சென்சார் செமிக்ஞை, மல்டி விண்டோ, ஸ்மார்ட் கேப்ஜர், ஜாட் ஓவர் வீடியோ இருக்கிறது. ஆப் டெவலப்பர் ஆதரவு இல்லாமல் வீடியோ ஜாட் செய்யும் வசதி இடம்பெற்றுள்ளது.

ஒலி, வண்ணக்கலவை

ஒலி, வண்ணக்கலவை

ஆடியோ மற்றும் அழைப்புகளை தெளிவாக கேட்கும் வகையில் கேலக்ஸி ஏ7 இல் மேம்படுத்தப்பட்ட சாதனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. கீழே உள்ள ஸ்பீக்கர் இசையை வடிகட்டி செவிகளுக்கு அனுப்பும் திறன் கொண்டது. 6 இன்ச் எப்.ஹெச்.டி டிஸ்பிளேயுடன், சூப்பர் அமோஎல்இடி வசதியால் படங்களின் வண்ணக்கலவை பிரமிப்பை ஏற்படுத்துகிறது.

பேட்டரி திறன்

பேட்டரி திறன்

அதிக சக்தி கொண்ட பேட்டரிகள் இதில் பொருத்தப்பட்டுள்ளன. தினம்தோறும் இடைவிடாமல் 8 முதல் 9 மணி வரை பயன்படுத்த முடியும்.

2 மணி நேரத்துக்குள் முழுமையாக சார்ஜ் செய்யும் திறனை பேட்டரி பெற்றுள்ளது. ஒன்றரை மணி முதல் 2 மணி வரை மியூசிக் கேட்க முடியும். அதேநேரத்தில் இமெயில், யூடியூப், இன்ஸ்டாகிராமை ஆபரேட் செய்யலாம்

என்ன விலை

என்ன விலை

கேலக்ஸி ஏ7 ஸ்மார்ட் போனின் 23, 990 ரூபாயிலிருந்து 28,990 வரை விற்பனையாகிறது. சாம்சங் ஆன்லைன் ஸ்டோர், பிளிப் கார்ட் தளங்களில் போனை பெற்றுக்கொள்ளலாம்.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A7 2018 review: A competent mid-ranger with triple cameras: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X