பெசல்-லெஸ் டிஸ்பிளேவுடன் வெளிவரும் சாம்சங் கேலக்ஸி ஏ7(2018).!
இக்கருவி 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.
சாம்சங் கேலக்ஸி ஏ7(2018) ஸ்மார்ட்போன் பற்றிய பல தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது, அதன்படி இந்த ஸ்மார்ட்போன் மாடல் பல்வேறு மென்பொருள் தொழில்நுட்பங்களுடன் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சாம்சங் கேலக்ஸி ஏ7(2018) ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ள முக்கிய சிறப்பம்சம் என்னவென்றால் பெசல்-லெஸ் டிஸ்பிளே மற்றும் கைரேகை சென்சார் போன்றவை இடம்பெற்றுள்ளது, மேலும் இந்திய மொபைல் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

6ஜிபி ரேம்:
இக்கருவி 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின் கூடுதலாக
மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. மேலும் கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ள பல அம்சங்கள்
இந்த ஸ்மார்ட்போனில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைரேகை சென்சார்:
இந்த ஸ்மார்ட்போனில் கைரேகை சென்சார் மற்றும் பிக்ஸ்பை (Bixby) செயற்கை நுண்ணறிவு (AI) அசிஸ்டென்ட் ஆகிய ஹைஎண்ட்
அம்சங்கள் கொண்டு லீக்ஸ் செய்திகளில் சிக்கிய இக்கருவி தாய்லாந்தில் அறிமுகமாகுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

பெசல்-லெஸ்:
இந்த சாம்சங் கேலக்ஸி ஏ7(2018) ஸ்மார்ட்போன் பொறுத்தவரை பெசல்-லெஸ் டிஸ்பிளே மற்றும் 18:9 என்ற திரை விகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது, மேலும் இதன் வடிவமைப்பு மிக அருமையாக உள்ளது.

ஆக்டோ-கோர்:
சாம்சங் கேலக்ஸி ஏ7(2018) ஸ்மார்ட்போன் பொதுவாக எக்ஸிநோஸ் 7885 ஆக்டோ-கோர் குவால்காம் செயலி இவற்றுள் இடம்பெற்றுள்ளதாக
தகவல்கள் வெளிவந்துள்ளதுm அதன்பின் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

இணைப்பு ஆதரவுகள்:
வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

ஒற்றை கேமரா:
சாம்சங் கேலக்ஸி ஏ7(2018) ஸ்மார்ட்போனில் பின்புறம் ஒற்றை கேமரா மற்றும் எல்இடி பிளாஷ் இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு இந்த
ஸ்மார்ட்போனில் பல்வேறு மென்பொருள் தொழில்நுட்பம் இடம்பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications