Home
Mobile

அதிகாரப்பூர்வமான கேலக்ஸி எஸ்8 'க்ளோன்' போலிருக்கும் கேலக்சி ஏ கருவிகள்.!

இந்த தகவல் இக்கருவிகள் எவ்வளவு அழகாக இருக்குமென்ற ஒரு கண்ணோட்டத்தையும் நமக்கு வழங்கியுள்ளது.

By Muthuraj

சாம்சங் கேலக்ஸி ஏ-தொடர் (2018) ஸ்மார்ட்போன்கள் பற்றிய வதந்திகள் மற்றும் லீக்ஸ் தகவல்கள் கடந்த சில மாதங்களாகவே வெளியான வண்ணம் உள்ளது. அடுத்த 2018-ஆம் ஆண்டு தொடக்கத்தில் வெளியாகுமென எதிர்பார்க்கப்படும் இந்த ஸ்மார்ட்போன்களில் இன்பினிட்டி டிஸ்ப்ளே இடம்பெறவும் வாய்ப்புள்ளது.

அதனை உறுதிப்படுத்தும் வண்ணம் வரவிருக்கும் கேலக்ஸி ஏ5 (2018) மற்றும் கேலக்ஸி ஏ7 (2018) சார்ந்த லீக்ஸ் ஒன்று வெளியாகியுள்ளது. மேலும் இந்த தகவல் இக்கருவிகள் எவ்வளவு அழகாக இருக்குமென்ற ஒரு கண்ணோட்டத்தையும் நமக்கு வழங்கியுள்ளது.

பிரீமியம் வடிவமைப்பை கொண்டிருக்கும்.!

பிரீமியம் வடிவமைப்பை கொண்டிருக்கும்.!

முதலில் கிஸ்மோசீனா வலைத்தளத்தால் காணப்பட்டுள்ள இந்த லீக்ஸ் தகவலின் கீழ், கூறப்படும் இரண்டு சாதனங்கள் பிரீமியம் வடிவமைப்பை கொண்டிருக்கும் என்பதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. வடிவமைப்பில் மட்டுமின்றி சாம்சங் கேலக்ஸி எஸ்-தொடர் ஸ்மார்ட்போன்களின் பிரீமியம் அம்சங்களையும் கொண்டுவருமென அறிவுறுத்துகிறது.

அதிகாரப்பூர்வ கேலக்ஸி எஸ்8 க்ளோன்.!

அதிகாரப்பூர்வ கேலக்ஸி எஸ்8 க்ளோன்.!

ஆம், நீங்கள் நினைப்பது சரி தான். இயக்கருவிகள் கேலக்ஸி எஸ்8 ஸ்மார்ட்போனை போலவே தான் இருக்கும், இன்னும் சொல்லப்போனால் அதன் அதிகாரப்பூர்வ க்ளோன் போன்று இருக்கும்.

பிக்ஸ்பை வாய்ஸ் அசிஸ்டென்ட் ஆதரவு.!

பிக்ஸ்பை வாய்ஸ் அசிஸ்டென்ட் ஆதரவு.!

இந்த சாதனத்தில் இடம்பெறும் இன்பினிட்டி டிஸ்பிளே தவிர, கேலக்ஸி ஏ5 (2018) மற்றும் கேலக்ஸி ஏ7 (2018) ஆகிய ஸ்மார்ட்போன்கள் சாம்சங் நிறுவனத்தின் பிக்ஸ்பை வாய்ஸ் அசிஸ்டென்ட் ஆதரவு கொண்டு வருமெனவும் லீக்ஸ் தகவல் தெரிவிக்கின்றது.

ஒரு பிரத்யேக பொத்தான்.!

ஒரு பிரத்யேக பொத்தான்.!

பிக்ஸ்பை அம்சமானது இந்த ஆண்டு முன்னதாக கேலக்ஸி எஸ்8 மற்றும் கேலக்ஸி எஸ்8+ ஆகிய ஸ்மார்ட்போன்களில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த அம்சம் இடது பக்கத்தில், வால்யூம் கட்டுப்பாடு பொத்தானுக்கு கீழே ஒரு பிரத்யேக பொத்தான் வடிவமைப்பில் இருக்கலாம். சாதனத்தின் பவர் பொத்தான் வலது புறத்தில் இடம்பெறலாம்.

18.5: 9 என்ற திரை விகிதத்திலான அளவு.!

18.5: 9 என்ற திரை விகிதத்திலான அளவு.!

இக்கருவிகளில் 18.5: 9 என்ற திரை விகிதத்திலான அளவை பார்ப்போம் என்று யூகிக்க முடிகிறது. ஆனால் தீர்மானம் பற்றிய வார்த்தைகள் ஏதுமில்லை. இந்த தொலைபேசிகளின் இன்பினிட்டி டிஸ்பிலேவை கருத்தில் கொண்டு இதன் கைரேகை சென்சார் தொலைபேசியின் பின்பக்கம் மாற்றப்படலாம்.

4 ஜிபி மற்றும் 6 ஜிபி ரேம்.!

4 ஜிபி மற்றும் 6 ஜிபி ரேம்.!

இந்த வதந்திகள் உண்மையாகினில், கேலக்ஸி ஏ5 மற்றும் கேலக்ஸி ஏ7 (2018) ஆகிய கருவிகளில் க்வால்காம் ஸ்னாப்ட்ராகன் 660 எஸ்ஓசி உடனான 4 ஜிபி மற்றும் 6 ஜிபி ரேம் இணைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த 2018 மாதிரிகள் கேமரா அம்சத்தை மையமாக கொண்ட சாதனங்களாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. எனினும், அது பற்றிய விவரங்கள் ஏதுமில்லை.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A7 (2018), Galaxy A5 (2018) to reportedly feature Infinity Display, Bixby support. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X