நம்பினால் நம்புங்கள்.! ரூ.15,000/-க்குள் இன்பினிட்டி டிஸ்பிளேவுடன் கேலக்ஸி ஏ6.!

சாம்சங் நிறுவனத்தின் வரவிருக்கும் மிட்ரேன்ஜ் ஸ்மார்ட்போன்கள் ஆன கேலக்ஸி ஏ6 மற்றும் கேலக்ஸி ஏ6 ப்ளஸ்-ன் அம்சங்கள் வெளியாகியுள்ளன.

|

சாம்சங் நிறுவனத்தின் வரவிருக்கும் மிட்ரேன்ஜ் ஸ்மார்ட்போன்கள் ஆன கேலக்ஸி ஏ6 மற்றும் கேலக்ஸி ஏ6 ப்ளஸ்-ன் அம்சங்கள் வெளியாகியுள்ளன. இதில் சாம்சங் கேலக்ஸி ஏ6+ ஆனது சமீபத்தில் நிறுவனத்தின் வலைத்தளத்தில் காணப்பட்டது என்பதும், இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களுமே ஏற்கனவே வைஃபை போன்ற தேவையான சான்றிதழ்களைப் பெற்றுவிட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.

ரூ.15,000/-க்குள் இன்பினிட்டி டிஸ்பிளேவுடன் கேலக்ஸி ஏ6.!

இருந்தாலும் கூட இதன் இரண்டு ஸ்மார்ட்போன்களின் ஸ்பெக்ஸ்-ஷீட் (அம்சங்களை) மட்டும் நமக்கு தெரியாமலேயே இருந்தன. தற்போது இந்தோனேசியாவில் இருந்து வெளியாகியுள்ள அறிக்கையின்கீழ், கேலக்ஸி ஏ6 மற்றும் கேலக்ஸி ஏ6 ப்ளஸ்-ன் பிரதான அம்சங்கள் அம்பலமாகியுள்ளது.

ஸ்னாப்டிராகன் 450 எஸ்ஓசி.!

ஸ்னாப்டிராகன் 450 எஸ்ஓசி.!

முன்னர் வெளியான தகவலின்படி, கேலக்ஸி ஏ6 ஆனது சாம்சங் நிறுவனத்தின் சொந்த எக்ஸ்ஸிநோஸ் எஸ்ஓசி கொண்டு இயங்கும் மறுகையில் உள்ள ஏ6 ப்ளஸ் ஆனது ஒரு ஸ்னாப்டிராகன் எஸ்ஓசி மூலம் இயக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. அதை சமீபத்திய லீக்ஸ் தகவலும் நிரூபிக்குகிறது. அதாவது கேலக்ஸி ஏ6 ஆனது எக்ஸிநோஸ்7870 ஆக்டா-கோர் சிப்செட் கொண்டு வரும். பெரிய மாறுபாடான கேலக்ஸி ஏ6+ ஆனது ஸ்னாப்டிராகன் 450 எஸ்ஓசி கொண்டுவரும்.

முழு எச்டி + இன்பினிட்டி டிஸ்பிளே.!

முழு எச்டி + இன்பினிட்டி டிஸ்பிளே.!

சிப்செட் விவங்களுடன் சேர்ந்து, இந்த ஸ்மார்ட்போன்களின் பெரும்பாலான விவரங்களும் கசிந்துள்ளது. கேலக்ஸி ஏ6 ஆனது ரேம் 3 ஜிபி + 32 ஜிபி உள் சேமிப்பு, 5.6 அங்குல முழு எச்டி + இன்பினிட்டி டிஸ்பிளே (இறுதியாக சாம்சங் அதன் 18: 9 என்கிற திரை விகிதத்தை அதன் மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன்களுக்கு கொண்டுவருகிறது), 441 பிபிஐ, எக்ஸிநோஸ் 7870 ஆக்டா-கோர் சிப்செட் ஆகியவைகளை கொண்டிருக்கும்.

4 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள் சேமிப்பு.!

4 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள் சேமிப்பு.!

கேலக்ஸி ஏ6+ ஸ்மார்ட்போனை பொறுத்தவரை, 6 இன்ச் முழு எச்டி + டிஸ்ப்ளே (2220 × 1080 பிக்சல்கள் தீர்மானம்), 441 பிபிஐ, 4 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள் சேமிப்பு, ஸ்னாபடிராகன் 450 எஸ்ஓசி சிப்செட் ஆகிய அம்சங்களை கொண்டிருக்கும். இந்த இடத்தில் ஸ்னாபடிராகன் 450 எஸ்ஓசி என்கிற அம்சம் தான் மிகவும் சுவாரசியமான விஷயமாகும்.

விலை நிர்ணயம் எப்படி இருக்கும்.?

விலை நிர்ணயம் எப்படி இருக்கும்.?

ஏனெனில் அதே சிப்செட் கொண்ட சூப்பர் பட்ஜெட் ஸ்மார்ட்போன் ஆன சியோமி ரெட்மீ 5, சந்தையில் வாங்க கிடைக்கும் நிலைப்பாட்டில், சாம்சங் கேலக்ஸி ஏ6 ஸ்மார்ட்போன்களின் விலை நிர்ணயம் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

How to check PF Balance in online (TAMIL)
ரூ.15,000/-க்கு மேலான விலை நிர்ணயம்.?

ரூ.15,000/-க்கு மேலான விலை நிர்ணயம்.?

கண்டிப்பாக ரூ.7,999/- என்கிற விலைக்கு சாம்சங் கேலக்ஸி ஏ6 ஸ்மார்ட்போகள் அறிமுகமாகாது என்பது ஒருபக்கம் இருக்க, ரூ.15,000/-க்கு மேலான விலை நிர்ணயம் கொண்டு வெளியாவதில் எந்த புண்ணியமும் இல்லை என்பது வெளிப்படை.!

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A6+ Will Reportedly Feature Snapdragon 450 SoC. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X