4ஜிபி ரேம் & 6-இன்ச் டிஸ்பிளேவுடன் களமிறங்கும் கேலக்ஸி ஏ6 பிளஸ்.!
இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.
சாம்சங் நிறுவனம் தொடர்ந்து புதிய ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது, அதனபடி விரைவில் அதிநவீன தொழில்நுட்பங்கள்
கொண்ட கேலக்ஸி ஏ6 மற்றும் கேலக்ஸி ஏ6 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல்கள் ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும். மேலும் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இந்த இரண்டு ஸ்மார்ட்போன் மாடல்கள்.
தற்சமயம் சாம்சங் கேலக்ஸி ஏ6 பிளஸ் மற்றும் கேலக்ஸி ஏ6 ஸ்மார்ட்போன்கள் பற்றிய பல்வேறு தகவல்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது, குறிப்பாக செயற்கை நுண்ணறிவு சார்ந்த கேமரா அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல்கள் வெளிவரும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்ட்டுள்ளது.

கேலக்ஸி ஏ6 பிளஸ்:
கேலக்ஸி ஏ6 பிளஸ் ஸ்மார்ட்போன் பொதுவாக 6-இன்ச் எப்எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் 1080பிக்சல் தீர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் வெளிவரும். மேலும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்
மாடல்.

ஆண்ட்ராய்டு ஓரியோ:
கேலக்ஸி ஏ6 பிளஸ் ஸ்மார்ட்போனில் எக்ஸிநோஸ் 7870 ஆக்டோ-கோர் செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு ஓரியோ 8.0 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த கேலக்ஸி ஏ6 பிளஸ் ஸ்மார்ட்போன்.

நினைவகம்:
இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. மேலும் வீடியோ கால் மற்றும் ஆப் வசதிகளுக்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

16எம்பி ரியர் கேமரா:
இந்த ஸ்மார்ட்போனில் 16எம்பி ரியர் கேமரா பொருத்தப்படும் என எதிர்பார்க்கப்படுறது, அதன்பின்பு அசத்தலான செல்பீ கேமரா மற்றும் எல்இடி பிளாஷ் ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும். மேலும் வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.


3000எம்ஏஎச்:
கேலக்ஸி ஏ6 பிளஸ் ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விலை சற்று உயர்வாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கேலக்ஸி ஏ6:
கேலக்ஸி ஏ6 ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 5.6-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் 1080 பிக்சல் தீர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக கருப்பு நீலம், தங்கம் போன்ற நிறங்களில் இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications