ஒரே ஒரு ஸ்க்ரீன்ஷாட்டில் வெளியான பல மேட்டர்கள்; சாம்சங் ரசிகர்கள் குஷி.!

சாம்சங் போலாந்து வலைத்தளத்தின் ஆதரவு பக்கம் ஒன்றில், தென்கொரியன் நிறுவனமான சாம்சங் "தற்செயலாக" ஒரு அறிவிக்கப்படாத ஸ்மார்ட்போன் விவரங்களை பதிவேற்றியது.

|

சாம்சங் நிறுவனத்தின் மிட்ரேன்ஜ் பிரீமியம் ஸ்மார்ட்போன்களான கேலக்ஸி ஏ6 மற்றும் கேலக்ஸி ஏ6 ப்ளஸ் ஆகிய இரு ஸ்மார்ட்போன்களின் வெளியீடு நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பதை உணர்த்தும் வண்ணம் இரண்டு தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒரே ஒரு ஸ்க்ரீன்ஷாட்டில் வெளியான பல மேட்டர்கள்; சாம்சங் ரசிகர்கள் குஷி

ஒன்று, சாம்சங் கேலக்ஸி ஏ6 ப்ளஸ் ஆனது சாம்சங் போலாந்து அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் - மாதிரி எண் SM-A605FN / DS என்கிற பெயரின்கீழ் - பட்டியலிடப்பட்டுள்ளது. இரண்டாவது, தரச்சான்றிதழ் ஆன எப்சிசி பட்டியலில் கூறப்படும் இரண்டு ஸ்மார்ட்போன்களின் அம்சங்களும் காணப்பட்டுள்ளது.

சாம்சங் போலாந்து வலைத்தளத்தின் ஆதரவு பக்கம் ஒன்றில், தென்கொரியன் நிறுவனமான சாம்சங் "தற்செயலாக" ஒரு அறிவிக்கப்படாத ஸ்மார்ட்போன் விவரங்களை பதிவேற்றியது. டச்சு இணையத்தளமான கேலக்ஸிகிளப் (GalaxyClub) படி, அந்த ஸ்மார்ட்போன் வரவிருக்கும் கேலக்ஸி ஏ6 ப்ளஸ் ஆகும்.

ஒரு இரட்டை சிம் ஆதரவு கொண்டிருக்கும் என்பதை தவிர வேறெந்த விவரமும் வலைத்தளத்தில் பட்டியலிடப்படவில்லை. ஆனால் தரச்சான்றிதழ் தளமான எப்சிசி-யில், A3LSMA600FN மற்றும் A3LSMA605FN என்கிற மாடல் பெயரின் கீழ் கேலக்ஸி ஏ6 மற்றும் கேலக்ஸி ஏ6 ப்ளஸ் ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்களின் அம்சங்களும் காணப்பட்டுள்ளது.

ஒரே ஒரு ஸ்க்ரீன்ஷாட்டில் வெளியான பல மேட்டர்கள்; சாம்சங் ரசிகர்கள் குஷி

அதன்படி, கேலக்ஸி ஏ6 ஆனது ஒரு எக்ஸிநோஸ் 7870 எஸ்ஓசி கொண்டு வெளியாகும் மற்றும் 3ஜிபி ரேம் உடன் இணைந்து சாம்சங் எக்ஸ்பீரியன்ஸ் 9.0 (ஆண்ட்ராய்டு ஓரியோ அடிப்படையிலான) ஓஎஸ் கொண்டு இயங்கும். மறுகையில் உள்ள பிரீமியம் மாடலான கேலக்ஸி ஏ6 ப்ளஸ் ஆனது க்வால்காம் ஸ்னாப்டிராகன் 625 எஸ்ஓசி உடனான 4 ஜிபி ரேம் உடன் இணைந்துள்ளது.

ஒரே ஒரு ஸ்க்ரீன்ஷாட்டில் வெளியான பல மேட்டர்கள்; சாம்சங் ரசிகர்கள் குஷி

வெளியான ஸ்கிரீன்ஷாட்டின் படி, இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களிலுமே ஹோம் ஸ்க்ரீன் நேவிகேஷன் கட்டுப்பாடு பட்டன்கள் இருக்கும். அதாவது ஹோம் பட்டன் எதுவும் இருக்காது என்று அர்த்தம். டிஸ்பிளேவை பொறுத்தவரை, 18.5: 9 என்கிற திரை விகிதம் கொண்ட ஒரு இன்னினைட்டி டிஸ்ப்ளே இடம்பெற அதிக வாய்ப்புள்ளது. தற்போது வரையிலாக, இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களின் சேமிப்பு வகைகள், விலை மற்றும் கிடைக்கும் தன்மை பற்றிய எந்த வார்த்தையும் இல்லை.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A6, Galaxy A6+ Spotted on Company Site, FCC Listings Reveal Specifications. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X