Home
Mobile

ஆண்ட்ராய்டு ஓரியோவுடன் சாம்சங் கேலக்ஸி ஏ6 மற்றும் ஏ6 பிளஸ்.!

இந்தாண்டு சாம்சங் அதன் ஏ தொடர் கருவிகளை இன்னும் விரிவடைய செய்யும் என்பது உறுதி.!

By Muthuraj

தரப்படுத்துதல் தளமான கீக்பெஞ்சில் (Geekbench), எஸ்எம்-ஏ600எப்என்மற்றும் எஸ்எம்-ஏ605ஜி என்கிற இரண்டு மாடல் எண்களின் கீழ், புதிய சாம்சங் ஸ்மார்ட்போன்கள் காணப்பட்டுள்ளது. இந்த "மர்மமான" ஸ்மார்ட்போன்களானது, இன்னும் அறிவிக்கப்படாத கேலக்ஸி ஏ6 மற்றும் ஏ6 பிளஸ் ஆக இருக்கலாமென்று கூறப்படுகிறது.

அது உண்மையாகின், இந்தாண்டு சாம்சங் அதன் ஏ தொடர் கருவிகளை இன்னும் விரிவடைய செய்யும் என்பது உறுதி. அதாவது முன்னர் வெளியான கேலக்ஸி ஏ8 மற்றும் ஏ8 பிளஸ் ஸ்மார்ட்போன்களுக்கு அடுத்தபடியாக வெளியாகவும் மூன்றாம் மற்றும் நான்காம் ஏ தொடர் கருவியாக கேலக்ஸி ஏ6 மற்றும் ஏ6 பிளஸ் இருக்கும்.

ரெகுலர் மற்றும் பிளஸ் வகை.!

ரெகுலர் மற்றும் பிளஸ் வகை.!

அம்சங்களை பொறுத்தமட்டில், கேலக்ஸி ஏ6 ஆனது ஒரு எக்ஸிநோஸ் செயலி கொண்டிருக்க வேண்டும். மறுகையில் உள்ள ஏ6 பிளஸ் ஆனது ஸ்னாப்டிராகன் 625 எஸ்ஓசி மூலம் இயக்கப்படலாம். இது சற்றே அசாதாரண இருக்கிறது. ஏனெனில், வழக்கமாக சாம்சங் அதன் ரெகுலர் மற்றும் பிளஸ் வகை ஆகிய இரண்டிலும் ஒரே சிப்செட் தான் பயன்படுத்தும்.

நிறுவனத்தின்  சொந்த இடைப்பட்ட சிப்செட்.!

நிறுவனத்தின் சொந்த இடைப்பட்ட சிப்செட்.!

ஆனால் பென்ச்மார்க் (benchmark) பட்டியலோ வெவ்வேறு சிப்செட்தனை பரிந்துரைக்கிறது. பட்டியலின்படி, கேலக்ஸி ஏ6 ஆனது எக்ஸிநோஸ் 7870 எஸ்ஓசி மூலம் இயக்கப்படும், இது ஸ்னாப்டிராகன் 625 எஸ்ஓசி சிப்செட்டை எதிர்கொள்ளும் முனைப்பின்கீழ் உருவான நிறுவனத்தின் சொந்த இடைப்பட்ட சிப்செட் ஆகும்.

3 ஜிபி ரேம்.!

3 ஜிபி ரேம்.!

சேமிப்பத்துறையை பொறுத்தமட்டில், கேலக்ஸி ஏ6 ஆனது 3 ஜிபி ரேம் கொண்டிருக்கும் மற்றும் முன்னர் குறிப்பிட்டபடியே ஆண்ட்ராய்டு ஓரியோவுடன் ஷிப்பிங் தொடங்கும். தரப்படுத்துதல் தளத்தின்படி இக்கருவியின் சிங்கிள்-கோர் மதிப்பெண் ஆனது 723 ஆகும் மற்றும் மல்டி-கோர் மதிப்பெண் ஆனது 3605 ஆகும்.

4 ஜிபி ரேம்.!

4 ஜிபி ரேம்.!

மறுகையில் உள்ள, கேலக்ஸி ஏ6 பிளஸ் ஆனது ஸ்னாப்டிராகன் 625 எஸ்ஓசி சிப்செட் கொண்டு இயங்கும். சேமிப்பத்துறையை பொறுத்தமட்டில், கேலக்ஸி ஏ6 பிளஸ் ஒரு 4 ஜிபி ரேம் கொண்டிருக்கும் மற்றும் ஏ6 ஸ்மார்ட்போனை போன்றே ஆண்ட்ராய்டு ஓரியோ கொண்டு இயங்கும். தரப்படுத்துதல் தளத்தின்படி இக்கருவியின் சிங்கிள்-கோர் மதிப்பெண் ஆனது 739 ஆகும் மற்றும் மல்டி-கோர் மதிப்பெண் ஆனது 3469 ஆகும்.

Instagram Simple Tips and Tricks (TAMIL)
கேலக்ஸி ஜே8 பிளஸ் மற்றும் ஜே6 (2018).!

கேலக்ஸி ஜே8 பிளஸ் மற்றும் ஜே6 (2018).!

இந்த ஸ்மார்ட்போனின் எஞ்சியுள்ள அம்சங்கள் பற்றிய வார்த்தைகள் ஏதுமில்லை. ஆனால் இந்த இரு சாம்சங் கருவிகளும் விரைவில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர தென் கொரிய நிறுவனமான சாம்சங், அதன் ஆன் தொடர் வரிசையின் கீழ் கேலக்ஸி ஜே8 பிளஸ் மற்றும் ஜே6 (2018) ஆகிய இரு மிட்-ரேன்ஜ் கருவிகளையும் இந்தாண்டு வெளியிடவுள்ளதென்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A6 and A6 Plus Smartphones Spotted on Geekbench Running Android Oreo. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X