இன்ஃபினிட்டி டிஸ்ப்ளேவுடன் சாமசங் மொபைல் வேண்டுமா? இதோ அரிய தகவல்கள்.!

|

சாம்சங் நிறுவனத்தின் புதிய தயாரிப்பு ஸ்மார்ட்போன்களாக சாம்சங் கேலக்ஸி A6 மற்றும் கேலக்ஸி A6+ ஆகிய மாடல்கள் வெகுவிரைவில் அதிகாரபூர்வமாக வெளியாக உள்ளது. சாம்சங் நிறுவனத்தின் போலந்து இணையதளத்தில் இதுகுறித்து குறிப்பிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவலில் இந்த போன் மாடல் எண் குறித்து தெரிவிக்கப்படவிலலி எனினும், விரைவில் இந்த மாடல் ரஷ்யா, ஐரோப்பியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் வெளீயாகவுள்ளதாக கூறப்படுகிறது.

இன்ஃபினிட்டி டிஸ்ப்ளேவுடன் சாமசங் மொபைல் வேண்டுமா? இதோ அரிய தகவல்கள்.!

சாம்சங் கேலக்ஸி A6 மற்றும் கேலக்ஸி A6+ ஆகிய மாடல்கள் கடந்த ஆண்டின் பிற்பகுதியில் தொடங்கப்பட்ட கேலக்ஸி A8 மற்றும் கேலக்ஸி ஏ 8 + ஸ்மார்ட்போன்கள் ஆகியவற்றின் புத்துணர்ச்சியளிக்கும் பதிப்புகளாக இருக்கின்றன. இந்த ஸ்மார்ட்போன்கள் வெளியாகும் காலம் குறித்து இன்னும் உறுதி செய்யாமல் இருக்கும் நிலையில், இந்த கேலக்ஸி இந்த இரண்டு மாடல்களின் தகவல்கள் டுவிட்டரில் வெளியாகி கொண்டே உள்ளது.

இந்த நிலையில் சாம்சங் கேலக்ஸி A6 மாடல் 5.6 இன்ச் இன்ஃபினிட்டி டிஸ்ப்ளேவாக இருக்கும். இந்த டிஸ்ப்ளே முழு ஹெச்டி மற்றும் 2280x1080 ரெசலூசன் பிக்சல் கொண்டவையாக இருக்கும். மேலும் இந்த மாடலின் பிராஸசர் எக்சினோஸ் 7870 என்றும், 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி இன்னர் ஸ்டோரேஜ் என்றும் கூறப்படுகிறது.

அதேபோல் கேலக்ஸி A6+ மாடலை பார்க்கும்போது இதன் டிஸ்ப்ளே 6 இன்ச் இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே என்றும், இந்த மாடலிலும் முழு ஹெச்டி மற்றும் 2280x1080 ரெசலூசன் பிக்சல் கொண்டவையாக இருக்கும் என்றும் தெரிகிறது. மேலும் ஸ்னாப்டிராகன் 625 பிராஸசர் கொண்ட இந்த போனில் ஸ்னாப்டிராகன் 450 பிராஸசராக இருக்கவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த கேலக்ஸி A6+ ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இண்டர்னல் ஸ்டோரேஜ் இருக்கவும் வாய்ப்பு உள்ளது.

How to find out where you can get your Aadhaar card (TAMIL GIZBOT)

மேலும் இந்த கேலக்ஸி A6+ மாடலில் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியா ஓஎஸ் இருக்க அதிக வாய்ப்பு உள்ளது. ஆனால் அதே நேரத்தில் இந்த போனின் பேட்டரி திறன் குறித்தும் கேமிரா திறன் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

இன்ஃபினிட்டி டிஸ்ப்ளேவுடன் சாமசங் மொபைல் வேண்டுமா? இதோ அரிய தகவல்கள்.!

இந்த இரண்டு மாடல்களிலும் உள்ள முக்கிய அம்சம் என்னவெனில் இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே என்பது வாடிக்கையாளர்களுக்கு தேவையான முக்கிய தகவல். இதனை தவிர இந்த மாடல்களில் இதற்கு முந்தைய மாடல்களின் அம்சங்கள் தான் பெரும்பாலும் உள்ளது. அதைவிட முக்கியமான நடுத்தர விலையில் இந்த இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே கொண்ட மாடல் கிடைக்கவுள்ளது என்பதுதான் முக்கிய அம்சம். மேலும் இந்த நிறுவனம் மேலும் அதிக இன்ஃபினிட்டி டிஸ்ப்ளே கொண்ட மாடல்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Samsung Galaxy A6 A6 plus to feature Infinity Display, Android Oreo; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X