Home
Mobile

செஞ்சிட்டான் Samsung.. 6.9மிமீ ஸ்லிம் டிசைனில் 5000mAh பேட்டரி, 50MP கேமரா.. புதிய 5ஜி போன்.. என்ன மாடல்?

சாம்சங் (Samsung) நிறுவனத்தின் அடுத்த ஏ-சீரிஸ் ஸ்மார்ட்போனின் அறிமுகம், டிசைன் மற்றும் அம்சங்கள் குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளது. அது சாம்சங் கேலக்ஸி ஏ57 ஸ்மார்ட்போன் ஆகும். இது சாம்சங் கேலக்ஸி ஏ37 ஸ்மார்ட்போன் உடன் இணைந்து, விரைவில் அறிமுகப்படுத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிதாக வெளிவந்துள்ள TENAA படங்களில் சாம்சங் கேலக்ஸி ஏ57 ஸ்மார்ட்போன் ஆனது பர்பிள் / லாவெண்டர் நிறத்தில் தோன்றுகிறது. முந்தைய கேலக்ஸி ஏ56 மாடலை போலவே இந்த புதிய மாடலும் ஒரு பழக்கமான வடிவமைப்பை தக்க வைத்திருக்கிறது. ஆனால் குறிப்பிடத்தக்க வகையில் மெலிதான மற்றும் இலகுவான பாடி உடன் வருகிறது.

செஞ்சிட்டான் Samsung.. 6.9மிமீ ஸ்லிம் டிசைனில் புதிய 5ஜி போன்!

அதாவது சாம்சங் கேலக்ஸி ஏ56 மாடலின் 7.4மிமீ ஸ்லிம் பாடி மற்றும் 198 கிராம் எடையுடன் ஒப்பிடும்போது புதிய மாடல் 6.9மிமீ தடிமன் மற்றும் 182 கிராம் எடையை கொண்டதாக உள்ளது. எதிர்பார்க்கப்படும் அம்சங்களை பொறுத்தவரை, TENAA-வில் சாம்சங் கேலக்ஸி ஏ57 மாடல் ஆனது 6.6-இன்ச் FHD+ (1080 × 2340 பிக்சல்ஸ்) டிஸ்பிளேவுடன் பட்டியலிடப்பட்டுள்ளது, இது AMOLED பேனலை சுட்டிக்காட்டி, 16 மில்லியன் கலர்களை ஆதரிக்கிறது.

இந்த ஸ்மார்ட்போன்பில் பாதுகாப்புக்காக பேஸ் ரிகக்னைஷேஷன் ஆதரவுடன் இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சார் இடம்பெறுவதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. சிப்செட்டை பொறுத்தவரை இது ஆக்டா-கோர் சிப்செட்டுடன் இயக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது வரவிருக்கும் எக்ஸினோஸ் 1680 ஆக இருக்கலாம். இது 256ஜிபி வரையிலான பில்ட்இன் ஸ்டோரேஜ் உடன் 8ஜிபி மற்றும் 12ஜிபி ரேம் வகைகளில் அறிமுகப்படுத்தப்படலாம்.

கேமராக்களை பொறுத்தவரை சாம்சங் கேலக்ஸி ஏ57 மாடல் ஆனது 50-மெகாபிக்சல் மெயின் கேமரா உடனான 12-மெகாபிக்சல் மற்றும் 5-மெகாபிக்சல் சென்சார்களை உள்ளடக்கிய ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை பேக் செய்யலாம். முன்பக்கத்தில் 12-மெகாபிக்சல் செல்பீ ஷூட்டர் இடம்பெறலாம். பேட்டரியை பொறுத்தவரை இது 45W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5,000mAh திறன் கொண்டதாக இருக்கலாம்.

சாம்சங் கேலக்ஸி எஸ்26 சீரீஸ்: எக்ஸ் தளம் வழியாக டிப்ஸ்டர் ஐஸ் யுனிவர்ஸ் பகிர்ந்துள்ள விவரங்களின்படி, சாம்சங் நிறுவனம் அதன் அடுத்த கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வை 2026 பிப்ரவரி 25 ஆம் தேதி நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த நிகழ்வில், சாம்சங் கேலக்ஸி எஸ்26 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிகழ்வு முடிந்ததும், ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் சாம்சங் கேலக்ஸி எஸ்26 (Samsung Galaxy S26), சாம்சங் கேலக்ஸி எஸ்26 பிளஸ் (Samsung Galaxy S26 Plus), சாம்சங் கேலக்ஸி எஸ்26 அல்ட்ரா (Samsung Galaxy S26 Ultra) ஆகியவற்றை பிப்ரவரி 26 முதல் மார்ச் 4 வரை முன்பதிவு செய்யலாம்.

பின்னர் அனைத்து கேலக்ஸி எஸ்26 சீரிஸ் மாடல்களும் 2026 ஆம் ஆண்டு மார்ச் 11 முதல் சந்தைகளில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பிட்ட டிப்ஸ்டரின் கூற்றுப்படி, இந்த வெளியீட்டு காலவரிசை தென் கொரியாவிற்கானது, மேலும் இந்தியா மற்றும் பிற உலகளாவிய சந்தைகளுக்கு முன்கூட்டிய ஆர்டர் தேதிகள் சற்று வேறுபடலாம். அதாவது மார்ச் 2026 இல் நடக்கலாம்.

கேலக்ஸி எஸ்26, கேலக்ஸி எஸ்26 பிளஸ் மாடல்களில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? எக்ஸ் தளம் வழியாக, நன்கு அறியப்பட்ட டிப்ஸ்டர் கேஜெட்ஸ் டேட்டா (Gadgetsdata) வழியாக கிடைத்த தகவலின்படி - கேலக்ஸி எஸ்26 ஸ்மார்ட்போன் ஆனது LTPO தொழில்நுட்பத்துடன் கூடிய சிறிய 6.3-இன்ச் எம்14 AMOLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், FHD+ ரெசல்யூஷன் மற்றும் HDR10+ ஆதரவுடன் வரும் என்றும் கூறப்படுகிறது.

மறுகையில் உள்ள கேலக்ஸி எஸ்26 பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது 120Hz ரெஃப்ரெஷ் ரேட், HDR10+ ஆதரவு உடனான பெரிய 6.7-இன்ச் எம்14 AMOLED டிஸ்பிளேவை கொண்டிருக்கலாம். இது 2கே ரெசல்யூஷன் உடன் வருமென்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இத கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 ப்ரொடெக்ஷனையும் பெறலாம். மேலும் இந்த இரண்டு மாடல்களும் நீர் மற்றும் தூசி எதிர்ப்பிற்கான IP68 ரேட்டிங்கை தக்கவைத்து கொள்ளலாம்.

சிப்செட்டை பொறுத்தவரை சாம்சங்கின் அடுத்த ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் ஆனது எக்ஸினோஸ் 2600 அல்லது ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 ஆல் இயக்கப்படும் என்று டிப்ஸ்டர் நம்புகிறார். நினைவூட்டும் வண்ணம் சாம்சங் நிறுவனம் ஆனது ஸ்னாப்டிராகன் மாறுபாட்டை அமெரிக்கா மற்றும் சீனா போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தைகளில் வெளியிடுகிறது, அதே நேரத்தில் உலகின் பிற பகுதிகள் எக்ஸினோஸ் வெர்ஷனை வெளியிடுகிறது

கேமராக்களை பொறுத்தவரை கேலக்ஸி எஸ்26 மற்றும் கேலக்ஸி எஸ்26 பிளஸ் ஆகிய இரண்டுமே 50எம்பி (மெயின்) + 12எம்பி (அல்ட்ரா வைட்) + 50எம்பி (டெலிஃபோட்டோ) கொண்ட ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டிருக்கலாம். பேட்டரியை பொறுத்தவரை 4300mAh பேட்டரியை பேக் செய்யலாம். இது 25W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கலாம்; கேலக்ஸி எஸ்26 பிளஸ் ஆனது 45W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் பெரிய 4,900mAh பேட்டரியை கொண்டிருக்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A57 With 6 9 mm Slim Design Launching Soon What to Expect
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X