செல்லத்த தூக்குங்குடா.. OIS கேமராவுடன் புது Samsung போன்.. 5000mAh பேட்டரி.. 45W சார்ஜிங்.. எந்த மாடல்?
சாம்சங் கேலக்ஸி ஏ57 (Samsung Galaxy A57) ஸ்மார்ட்போனின் பேட்டரி, சிப்செட், கேமரா போன்ற முழு அம்சங்களும் மார்கெட்டில் கசிந்து சாம்சங் பிரியர்களை வெயிட்டிங் செய்ய வைத்துள்ளது. ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் கேமராவையும், 5000mAh பேட்டரியையும் கொடுக்க இருக்கிறது. தரமான பர்ஃபாமென்ஸ் கொடுக்க எக்ஸினோஸ் 1680 சிப்செட் கிடைக்க இருக்கிறது.
சாம்சங் கேலக்ஸி ஏ சீரிஸ் மாடல்களுக்கு இந்தியாவில் தனி வரவேற்பு இருக்கிறது. இதனால் அடுத்தடுத்து புது மாடல்கள் வெளியாகி வருகிறது. ஏற்கனவே, கேலக்ஸி ஏ56 நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில் இப்போது, சாம்சங் கேலக்ஸி ஏ57 ஸ்மார்ட்போன் வெளியீட்டுக்கு தயாராக விட்டது. டிஜிட் இந்தியா தளத்தின் வழியாக முழு பீச்சர்கள் தெரியவந்துள்ளன.

சாம்சங் கேலக்ஸி ஏ57 அம்சங்கள் (Samsung Galaxy A57 Specifications): 6.7 இன்ச் சூப்பர் அமோலெட் டிஸ்பிளேவானது 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1900 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் எச்டிஆருடன் இணைக்கப்பட்டுள்ளது. ஃபுல்எச்டிபிளஸ் 2340 x 1080 ரெசொலூஷன் கொண்டுள்ளது. இதில் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் ஸ்கேனர் கிடைக்கிறது.
கிளாஸ் பேக் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ்+ (Corning Gorilla Glass Victus+) பாதுகாப்பை கொண்டுள்ளது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் மற்றும் எக்ஸினோஸ் 1680 (Exynos 1680) சிப்செட் கொடுக்கப்படுகிறது. ஏ சீரிஸ் மாடல்களில் கிடைக்கும் 5000mAh பேட்டரியை இந்த ஏ15 ஸ்மார்ட்போனும் கொடுக்கிறது. இதற்கு 45W ஃபாஸ்ட் சார்ஜிங் கொடுக்கப்படுகிறது.
50 மெகாபிக்சல் பிரைமரி கேமராவில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் கேமரா கிடைக்கிறது. இந்த பிரைமரி கேமராவுக்கு 12 மெகாபிக்சல் அல்ட்ரா-வைடு லென்ஸ் மற்றும் 5 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா கிடைக்கிறது. இந்த டிரிபிள் ரியர் கேமராவுக்கு 4K தரத்தில் வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் கொடுக்கப்படுகிறது. 12 மெகாபிக்சல் செல்பீ கேமரா கிடைக்கிறது.
இந்த கேமராவுக்கும் 4K தரத்தில் வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் கொடுக்கப்படுகிறது. ரூ.35,000 மற்றும் ரூ.40,000 பட்ஜெட்டில் வெளியாக வாய்ப்புள்ளது. 2026ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்திய மார்கெட்டில் வெளியாக வாய்ப்புள்ளது. முன்னதாக வெளியான சாம்சங் கேலக்ஸி ஏ56 ஸ்மார்ட்போனின் அம்சங்கள் மற்றும் விலைகளை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
சாம்சங் கேலக்ஸி ஏ56 அம்சங்கள் (Samsung Galaxy A56 Specifications): 6.7 இன்ச் சூப்பர் அமோலெட் டிஸ்பிளே, 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1900 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 1200 நிட்ஸ் எச்பிஎம் மோட் வருகிறது. இதிலும் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ்+ பாதுகாப்பு வருகிறது. ஆனால், எக்ஸினோஸ் 1580 4என்எம் (Exynos 1580 4nm) சிப்செட் கிடைக்கிறது.
ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் மற்றும் ஒன் யுஐ 7 கொண்டுள்ளது. ஏஎம்டி எக்ஸ்கிளிப்ஸ் 540 ஜிபியு கிராபிக்ஸ் கொண்டிருக்கிறது. 50 மெகாபிக்சல் பிரைமரி கேமரா மற்றும் 12 மெகாபிக்சல் அல்ட்ரா வைடு கேமரா கிடைக்கிறது. மேலும் 5 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ் வருகிறது. 12 மெகாபிக்சல் செல்பீ கேமராவை இந்த சாம்சங் கேலக்ஸி ஏ56 ஸ்மார்ட்போன் கொடுக்கிறது.
45W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5000mAh பேட்டரியை கொண்டுள்ளது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் கொடுக்கப்படுகிறது. ஆகவே, சிப்செட் மற்றும் ஓஎஸ் தவிர மற்ற பீச்சர்கள் கிட்டதட்ட ஒரே மாதிரியாகவே இருக்கப் போவது தெரிகிறது. இந்த கேலக்ஸி ஏ56 ஸ்மார்ட்போனின் விலை ரூ. 38,999 பட்ஜெட்டில் இருக்கிறது. ஆகவே, ரூ.40,000 பட்ஜெட்டில் கேலக்ஸி ஏ57 இருக்கலாம்.
டிசைனில் பெரிதாக மாற்றம் இருக்காது. ஏ சீரிஸ் மாடல்களில் கேமரா டெகோ வேண்டுமானால், சிறிது மாற்றத்துடன் கிடைக்கும். மற்றபடி ஒரே மாதிரியாகவே இருக்கிறது. ஆகவே, இந்த கேலக்ஸி ஏ57 முந்தைய மாடல்களை போலவே இருக்கும். கேலக்ஸி ஏ56 மாடலின் கலர்களை பார்க்கையில், அவ்சம் லைட்கிரே (Awesome Lightgray), அவ்சம் கிராஃபைட் (Awesome Graphite) வருகிறது.


Click it and Unblock the Notifications








