Home
Mobile

மிட்-ரேஞ்ச் மிரளுது.. 6.9 மிமீ ஸ்லிம்மில் 5000mAh பேட்டரி.. SONY கேமரா.. AMOLED டிஸ்பிளே.. புது Samsung மாடல்!

சாம்சங் நிறுவனத்தின் மிட்-ரேஞ்ச் மாடலான சாம்சங் கேலக்ஸி ஏ57 (Samsung Galaxy A57) ஸ்மார்ட்போனின் முழு பீச்சர்கள் வெளியாகி இருக்கின்றன. 6.9 மிமீ ஸ்லிம் பாடியில் 5000mAh பேட்டரியை கொடுத்துள்ளது. சோனி சென்சார் கேமரா, 45W சார்ஜிங், அமோலெட் டிஸ்பிளேவுடன் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த சாம்சங் கேலக்ஸி ஏ57 ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை பார்க்கலாம்.

இந்திய மார்கெட்டில் வெளியாவதற்காக பிஐஎஸ் சர்டிபிகேஷனுக்கு ஏற்கனவே இந்த சாம்சங் கேலக்ஸி ஏ57 ஸ்மார்ட்போன் வந்துவிட்டது. ஆகவே, ஓரிரு மாதங்களில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த நேரத்தில் TENAA தளம் வழியாக முழு பீச்சர்களும் கசிந்துவிட்டன. இது சாம்சங் கேலக்ஸி ஏ56 ஸ்மார்ட்போனை விட ஸ்லிம் மற்றும் பர்ஃபாமென்ஸில் முந்துகிறது.

மிட்-ரேஞ்ச் மிரளுது.. 6.9மிமீ ஸ்லிம்மில் 5000mAh பேட்டரி.. SONY கேமரா!

சாம்சங் கேலக்ஸி ஏ57 அம்சங்கள் (Samsung Galaxy A57 Specifications): 6.6 இன்ச் (1080 x 2340 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்க உள்ளது. மேலும், ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் மற்றும் 120 Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைத்துள்ளது. 16 மில்லியன் கலர் டெப்த் கொண்டுள்ளது. இன்-ஸ்கிரீன் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-screen Fingerprint Sensor) கொடுக்கப்பட்டு உள்ளது.

சாம்சங் எக்ஸினோஸ் 1680 (Samsung Exynos 1680) சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கிடைத்துள்ளது. மேலும், ஒன் யுஐ 8 (One UI 8) கொடுக்கப்பட்டு உள்ளது. 6 ஜெனரேஷன் ஆண்ட்ராய்டு அப்டேட்கள் (Android Updates) மற்றும் 6 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்களை (Security Update) கொடுக்க உள்ளது. 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட் உள்ளது.

மேலும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்டுள்ளது. பிஐஎஸ் சர்டிபிகேஷனுக்கு வந்துவிட்டதால், இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஆகவே, 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் வெளியாகும். 45W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரியை கொடுத்துள்ளது. இந்த பேட்டரியுடன் 6.9 எம்எம் தடிமன் மட்டுமே வருகிறது.

ஆகவே, ஸ்லிம் ஸ்மார்ட்போன் மாடலாக இந்த சாம்சங் கேலக்ஸி ஏ57 இருக்கப் போகிறது. மேலும், 182 கிராம் எடை கொடுத்துள்ளது. 50 எம்பி மெயின கேமரா + 12 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 5 எம்பி மேக்ரோ கேமரா கொண்ட டிரிபிள் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது. மெயின் கேமராவுக்கு சோனி ஐஎம்எக்ஸ்906 (Sony IMX906) சென்சார் கிடைத்துள்ளது.

12 எம்பி செல்பீ கேமராவை இந்த சாம்சங் கேலக்ஸி ஏ57 ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. சாம்சங் கேலக்ஸி S26 சீரிஸ் பிப்ரவரி மாத இறுதியில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆகவே, முன்னதாக இந்த கேலக்ஸி ஏ57 மாடல் வெளியாக வாய்ப்புள்ளது. மேலும், சாம்சங் கேலக்ஸி ஏ37 (Samsung Galaxy A37) மாடலுடன் சேர்ந்து அறிமுகப்படுத்தப்பட வாய்ப்புள்ளது.

ஏனென்றால், கடந்த மார்ச் மாதத்தில் சாம்சங் கேலக்ஸி ஏ36 (Samsung Galaxy A36) மற்றும் சாம்சங் கேலக்ஸி ஏ56 (Samsung Galaxy A56) ஆகிய மாடல்கள் சேர்ந்து இந்திய மார்கெட்டில் வெளியாகின. இதில் ஏ56 ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.41,999ஆக இருக்கிறது. ஆகவே, சாம்சங் கேலக்ஸி ஏ57 மாடலின் விலை ரூ.45,000 பட்ஜெட்டுக்குள் இருக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A57 With 50MP Camera 5000mAh Battery Full Specifications Leaked Ahead Of Launch
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X