Home
Mobile

பிப்ரவரி மாதம் இருக்கு கச்சேரி.. 50எம்பி கேமரா.. IP67 ரேட்டிங்.. புது Samsung 5ஜி போன் ரெடி.. எந்த மாடல்?

சாம்சங் நிறுவனம் அடுத்து சாம்சங் கேலக்ஸி ஏ57 (Samsung Galaxy A57) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. அதாவது சீனாவில் TENAA தளத்தில் SM-A5760 இந்த போன் காணப்பட்டுள்ளது. எனவே வரும் பிப்ரவரி மாதம் தொடக்கத்தில் இந்த போன் சீனாவில் அறிமுகமாகும். இந்த போன் சீனாவில் அறிமுகமான சில வாரங்களில் அனைத்து நாடுகளிலும் அறிமுகமாகும்.

குறிப்பாக சாம்சங் கேலக்ஸி ஏ57 ஸ்மார்ட்போன் ஆனது தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளிவரும். மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த புதிய சாம்சங் ஸ்மார்ட்போனின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்க்கலாம்.

பிப்ரவரி மாதம் இருக்கு கச்சேரி.. புது சாம்சங் 5ஜி போன் ரெடி..

சாம்சங் கேலக்ஸி ஏ57 அம்சங்கள் (Samsung Galaxy A57 Specifications): 6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் சூப்பர் அமோலெட் இன்பினிட்டி-ஒ எச்டிஆர் டிஸ்பிளே (Super AMOLED Infinity-O HDR Display) உடன் வெளிவரும் சாம்சங் கேலக்ஸி ஏ57 ஸ்மார்ட்போன். மேலும் இதன் டிஸ்பிளேவில் 1080 x 2340 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate) உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

குறிப்பாக ஆக்டா கோர் எக்ஸ்நோஸ் 1680 4என்எம் (Octa Core Exynos 1680 4nm) சிப்செட் உடன் சாம்சங் கேலக்ஸி ஏ57 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் கேமிங் பயனர்களைக் கவரும் வகையில் Xclipse 550 GPU கிராபிக்ஸ் ஆதரவும் இந்த புதிய சாம்சங் ஸ்மார்ட்போனில் உள்ளன.

8ஜிபி ரேம் + 256ஜிபி மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் சாம்சங் கேலக்ஸி ஏ57 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த சாம்சங் ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.

50எம்பி பிரைமரி கேமரா + 12எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா + 5எம்பி மேக்ரோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி ஏ57 ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 12எம்பி கேமரா இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.

இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor), யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர் (Stereo Speaker) உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் இந்த சாம்சங் 5ஜி போனில் உள்ளன.

பிப்ரவரி மாதம் இருக்கு கச்சேரி.. புது சாம்சங் 5ஜி போன் ரெடி..

IP67 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) உடன் சாம்சங் கேலக்ஸி ஏ57 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, ப்ளூடூத் 5.3, ஜிபிஎஸ், க்ளோனாஸ், யூஎஸ்பி டைப்-சி, என்எஃப்சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.

5000எம்ஏஎச் பேட்டரி உடன் சாம்சங் கேலக்ஸி ஏ57 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. ஆண்ட்ராய்டு 16 இயங்குதள வசதியுடன் சாம்சங் கேலக்ஸி ஏ57 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் ஆன்லைனில் வெளியான தகவலின்படி, பட்ஜெட் விலையில் இந்த போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A57 launch timeline revealed: check specification, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X