மார்ச் மாசம் இப்போவே களைக்கட்டுதே.. Samsung அறிமுகம் செய்யும் இரண்டு A-சீரீஸ் 5G போன்கள்!
சாம்சங் (Samsung) தனது 2026 பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் ஆன ஆன கேலக்ஸி எஸ்26 சீரீஸை அறிமுகப்படுத்திய சிறிது நாட்களிலேயே (அதாவது பிப்ரவரி 25 க்கு பின்), சாம்சங்கின் அப்பர் மிட்-ரேன்ஜ் பிரிவில் இன்னும் சில புதிய ஸ்மார்ட்போன்களை நாம் காண்போம் என்பது போல் தெரிகிறது.
என்ன மாடல்கள்? சாம்சங் அதன் பிரபலமான ஏ-சீரிஸின் கீழ் 2 புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய தயார் ஆகி வருகிறது. அந்த இண்டு போன்கள் - சாம்சங் கேலக்ஸி ஏ57 (Galaxy A57) மற்றும் கேலக்ஸி ஏ37 (Galaxy A37) மாடல்கள் ஆகும். இந்த ஸ்மார்ட்போன்களின் அறிமுகம் மிகவும் நெருக்கமாக இருப்பதை உணர்த்தும்படியாக இவ்விரு மாடல்களுமே IMDA சான்றிதழ் தளத்தில் காணப்பட்டுள்ளன. இது உடனடி வெளியீட்டைக் குறிக்கிறது.

எப்போது அறிமுகம் ஆகும்? முன்னதாக அறிமுகமான கேலக்ஸி ஏ56 (Galaxy A56) மற்றும் கேலக்ஸி ஏ36 (Galaxy A36) ஸ்மார்ட்போன்கள் மார்ச் 2025 இல் அறிமுகம் செய்யப்பட்டன. ஆக புதிய மாடல்கள் மார்ச் 2026 இல் அறிமுகம் செய்யப்பட அதிக வாய்ப்புள்ளது.
என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? இரண்டு மாடல்களில் டாப்-எண்ட் மாடலாக இருக்கும் கேலக்ஸி ஏ57 ஆனது 120Hz ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.6-இன்ச் FHD+ AMOLED டிஸ்பிளேவைக் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனை புதிய Exynos 1680 சிப்செட் உடன் அறிமுகம் செய்யப்படலாம். இது 45W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் அதே 5,000mAh பேட்டரியை தக்க வைத்து கொள்ளலாம்.
கேமராக்களை பொறுத்தவரை கேலக்ஸி ஏ57 ஸ்மார்ட்போனில் 12MP மற்றும் 5MP சென்சார்களுடன் இணைக்கப்பட்ட 50MP ப்ரைமரி சென்சாரை கொண்ட ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் இருக்கலாம். செல்பீக்களுக்கு, இந்த ஸ்மார்ட்போனில் 12MP முன்பக்க கேமரா இருக்கலாம். இது கேலக்ஸி ஏ56 மாடலில் உள்ளதை போன்ற அமைப்பாகும், ஆனால் சில சென்சார் மாற்றங்கள் அல்லது மென்பொருள் மேம்படுத்தல்களை காணலாம்.
மறுகையில் உள்ள கேலக்ஸி ஏ37 ஸ்மார்ட்போன் ஆனது - இந்த இரண்டிலும் மிகவும் மலிவு விலையில் வாங்க கிடைக்கும் மாறுபாடாக இருக்கும். இது 2024 ஆம் ஆண்டு வெளியான கேலக்ஸி ஏ55 ஸ்மார்ட்போனை போலவே Exynos 1480 சிப்செட்டை பயன்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது . கேலக்ஸி ஏ36 ஸ்மார்ட்போன் ஆனது Snapdragon 6 Gen 3 சிப்செட்டை பயன்படுத்தியதால், இது செயல்திறனில் எவ்வாறு மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
கேமராக்களை பொறுத்தவரை கேலக்ஸி ஏ37 ஸ்மார்ட்போனில் 50MP ப்ரைமரி சென்சார், 8MP அல்ட்ரா-வைட் மற்றும் 5MP மேக்ரோ லென்ஸ் கொண்ட ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் இருக்கலாம்.இது 5,000mAh பேட்டரி உடன் அறிமுகம் செய்யப்படலாம் மற்றும் 45W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவையும் பெறலாம். கடைசியாக வரவிருக்கும் இரண்டு புதிய போன்களும் பெரும்பாலும் ஆண்ட்ராய்டு 16 அடிப்படையிலான One UI 8.5 உடன் அறிமுகம் செய்யப்படலாம். மேலும் ஆறு அல்லது ஏழு ஆண்டுகள் வரை அப்டேட்களை பெறலாம்.
முன்னதாக அறிமுகமான சாம்சங் கேலக்ஸி ஏ56 5ஜி, சாம்சங் கேலக்ஸி ஏ36 5ஜி ஸ்மார்ட்போன்களின் முக்கிய அம்சங்கள்: சாம்சங் கேலக்ஸி ஏ36 5ஜி, சாம்சங் கேலக்ஸி ஏ36 5ஜி ஆகிய இரண்டுமே 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் கார்னிங் கொரில்லா விக்டஸ் பிளஸ் கிளாஸ் ப்ரொடெக்ஷன் உடனான 6.7-இன்ச் ஃபுல்எச்டி பிளஸ் (1080 x 2340 பிக்சல்ஸ்) சூப்பர் AMOLED டிஸ்பிளேவை கொண்டுள்ளன.
மேலும் இரண்டுமே ஆட்டோ டிரிம், பெஸ்ட் ஃபேஸ், ஏஐ செலக்ட் மற்றும் ரீட் அலவுட் போன்ற ஏஐ அம்சங்களை ஆதரிக்கின்றன. சிப்செட்டை பொறுத்தவரை சாம்சங் கேலக்ஸி ஏ56 5ஜி ஆனது எக்ஸினோஸ் 1580 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது, அதே நேரத்தில் சாம்சங் கேலக்ஸி ஏ36 5ஜி ஆனது ஸ்னாப்டிராகன் 6 ஜென் 3 சிப்செட் உடன் வருகிறது.
இரண்டுமே 12ஜிபி வரை ரேம், 256ஜிபி வரை இன்டர்னல் ஸ்டோரேஜை பேக் செய்கின்றன மற்றும் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் அடிப்படையிலான ஒன் யுஐ 7 உடன் ஷிப் செய்யப்படுகின்றன. இவ்விரு ஸ்மார்ட்போன்களுக்குமே 6 ஜெனரேஷன் ஓஎஸ் மேம்படுத்தல்கள் மற்றும் ஆறு வருட செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கும் என்றும் உறுதியளிக்கப்பட்டுள்ளது. You May Also Like
கேமராக்களை பொறுத்தவரை கேலக்ஸி ஏ56 5ஜி ஆனது ஓஐஎஸ் ஆதரவுடன் 50எம்பி ப்ரைமரி சென்சார், 12எம்பி அல்ட்ராவைட் ஷூட்டர் மற்றும் 5 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. சாம்சங் கேலக்ஸி ஏ36 5ஜி மாடலும் இதே போன்ற செட்டப்பை தான் கொண்டுள்ளது. ஆனால் 8 மெகாபிக்சல் அல்ட்ராவைட் சென்சாரை கொண்டுள்ளது. மேலும் இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் 12 மெகாபிக்சல் செல்பீ கேமராக்கள் உள்ளன.
பேட்டரியை பொறுத்தவரை இரண்டுமே 5000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. மேலும் 45W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கின்றன மற்றும் தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்காக ஐபி67 ரேட்டிங் கட்டமைப்பை கொண்டுள்ளன. கடைசியாக, கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொறுத்தவரை 5ஜி, 4ஜி LTE, வைஃபை, ப்ளூடூத் 5.3, ஜிபிஎஸ், என்எப்சி மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட் ஆகியவைகளை கொண்டுள்ளன.


Click it and Unblock the Notifications