இதுதான் புதிய சாம்சங் 5ஜி போன்.. IP67 ரேட்டிங்.. 50எம்பி கேமரா.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
சாம்சங் நிறுவனத்தின் புதிய சாம்சங் கேலக்ஸி ஏ57 ஸ்மார்ட்போனின் படங்கள் தற்போது வெளியாகி உள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் படங்கள் சீனாவில் TENAA தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த சாம்சங் கேலக்ஸி ஏ57 போன் வரும் பிப்ரவரி மாதம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
அதுவும் இந்த ஸ்மார்ட்போன் முதலில் சீனாவில் தான் அறிமுகமாகும். அதன்பின்பு தான் இந்தியாவில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. மேலும் ஆன்லைனில் வெளியான இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்களை இப்போது பார்க்கலாம்.

சாம்சங் கேலக்ஸி ஏ57 அம்சங்கள் (Samsung Galaxy A57 Specifications): சக்திவாய்ந்த ஆக்டா கோர் எக்ஸ்நோஸ் 1680 4என்எம் (Octa Core Exynos 1680 4nm) சிப்செட் உடன் சாம்சங் கேலக்ஸி ஏ57 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் கேமிங் பயனர்களைக் கவரும் வகையில் Xclipse 550 GPU கிராபிக்ஸ் ஆதரவும் இந்த புதிய சாம்சங் ஸ்மார்ட்போனில் உள்ளன.
குறிப்பாக 6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் சூப்பர் அமோலெட் இன்பினிட்டி-ஒ எச்டிஆர் டிஸ்பிளே (Super AMOLED Infinity-O HDR Display) உடன் வெளிவரும் சாம்சங் கேலக்ஸி ஏ57 ஸ்மார்ட்போன். மேலும் இதன் டிஸ்பிளேவில் 1080 x 2340 பிக்சல்ஸ், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate) உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.
அதேபோல் 8ஜிபி ரேம் + 256ஜிபி மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் சாம்சங் கேலக்ஸி ஏ57 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும். மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த சாம்சங் ஸ்மார்ட்போன். அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இந்த போனில் உள்ளது.
அதுவும் 50எம்பி பிரைமரி கேமரா + 12எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா + 5எம்பி மேக்ரோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி ஏ57 ஸ்மார்ட்போன். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 12எம்பி கேமரா இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
சாம்சங் கேலக்ஸி ஏ57 ஸ்மார்ட்போன் IP67 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Dust & Water Resistance) உடன் அறிமுகம் செய்யப்படும். 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, ப்ளூடூத் 5.3, ஜிபிஎஸ், க்ளோனாஸ், யூஎஸ்பி டைப்-சி, என்எஃப்சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.

இந்த சாம்சங் போனில் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor), யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர் (Stereo Speaker) உள்ளிட்ட பல சிறப்பான வசதிகள் உள்ளன.
மேலும் 5000எம்ஏஎச் பேட்டரி உடன் சாம்சங் கேலக்ஸி ஏ57 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. ஆண்ட்ராய்டு 16 இயங்குதள வசதியுடன் சாம்சங் கேலக்ஸி ஏ57 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். ஆன்லைனில் வெளியான தகவலின்படி, பட்ஜெட் விலையில் இந்த போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
photo credits: TENAA, gizmochina


Click it and Unblock the Notifications








