Home
Mobile

செஞ்சிட்டா போச்சு.. மிட்-ரேன்ஜ் விலையில் 2 புது Samsung 5ஜி போன்கள்.. எந்த மாடல்கள்?

சாம்சங் (Samsung) நிறுவனம் அதன் பிரபலமான மிட்ரேன்ஜ் சீரீஸ் ஆன கேலக்ஸி ஏ-சீரீஸின் கீழ் 2 புதிய 5ஜி ஸ்மார்ட்போன்களை கூடிய விரைவில் அறிமுகம் செய்யலாம் என்கிற தகவல் கிடைத்துள்ளது. எந்த மாடல்கள்? என்னென்ன அம்சங்கள்? என்ன விலைக்கு வரலாம்? இதோ விவரங்கள்:

எந்த மாடல்கள்? ​​கீக்பெஞ்சில் 2 புதிய சாம்சங் மாடல்கள் தோன்றி உள்ளன. அவைகள் சாம்சங் கேலக்ஸி ஏ77 மற்றும் சாம்சங் கேலக்ஸி ஏ57 மாடல்கள் ஆகும். இதன் மூலம் நெக்ஸ்ட்-ஜெனெரஷன் கேலக்ஸி ஏ-சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் அறிமுகம் மிகவும் நெருக்கமாக இருப்பதை அறிந்துகொள்ள முடிகிறது.

செஞ்சிட்டா போச்சு.. மிட்-ரேன்ஜ் விலையில் 2 புது Samsung 5ஜி போன்கள்!

என்னென்ன அம்சங்கள்? கீக்பெஞ்ச் லிஸ்டிங் வழியாக இவ்விரு ஸ்மார்ட்போன்களுமே லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு 16 ஆப்ரேட்டிங் சிஸ்டம், சாம்சங் எக்ஸினோஸ் சிப்செட்கள், 8ஜிபி ரேம் (கேலக்ஸி ஏ77) மற்றும் 12ஜிபி ரேம் (கேலக்ஸி ஏ57) உடன் வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த 2 ஸ்மார்ட்போன்களின் சரியுமான லான்ச் டைம்லைன் குடித்து எந்த தகவலும் இல்லை.

என்ன விலை? ஸ்மார்ட்ப்ரைஸ் வலைத்தளத்தின்படி சாம்சங் கேலக்ஸி ஏ57 ஸ்மார்ட்போன் ஆனது ரூ.45,990 க்கு அறிமுகம் செய்யப்படலாம். மறுகையில் உள்ள சாம்சங் கேலக்ஸி ஏ77 ஸ்மார்ட்போனின் விலை குறித்த விவரங்கள் இல்லை.இதுவும் பெரும்பாலும் ரூ.50,000-ஐ சுற்றிய பட்ஜெட்டில் தான் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எஸ்26 சீரிஸும் தீயாக ரெடி ஆகுது: சாம்சங் நிறுவனம் புதிய கேலக்ஸி ஏ-சீரீஸ் ஸ்மார்ட்போன்களில் மட்டுமின்றி புதிய கேலக்ஸி எஸ்26 சீரீஸ் (Samsung Galaxy S26 Series) ஸ்மார்ட்போன்களிலும் பணியாற்றி வருகிறது. இந்த சீரிஸின் கீழ் சாம்சங் கேலக்ஸி எஸ்26, சாம்சங் கேலக்ஸி எஸ்26 பிளஸ் மற்றும் சாம்சங் கேலக்ஸி எஸ்26 அல்ட்ரா என மொத்தம் 3 மாடல்கள் வருமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆப்பிளுக்கு போட்டி: எக்ஸ் தளம் வழியாக டிப்ஸ்டர் ஐஸ் யுனிவர்ஸ் (Ice Universe) பகிர்ந்துள்ள விவரங்களின்படி - கேலக்ஸி எஸ்26 அல்ட்ரா மற்றும் கேலக்ஸி எஸ்26 ஆகிய இரண்டுமே அவற்றின் முன்னோடிகளை விட மெல்லியதாகவும், இலகுவாகவும் இருக்கலாம். மேலும் அனைத்து 3 மாடல்களுமே ஆப்பிள் அபின் 17 சீரிஸை (Apple iPhone 17 Series) விட தடிமன் மற்றும் எடையின் அடிப்படையில் குறைவாக அளவிடப்படும்.

வெளியான விவரங்களின்படி சாம்சங் கேலக்ஸி எஸ்26 அல்ட்ரா ஸ்மார்ட்போன் 7.9மிமீ தடிமன் கொண்டதாகவும், சுமார் 214 கிராம் எடை கொண்டதாகவும் இருக்கும் என்று கூறப்படுகிறது. சாம்சங் கேலக்ஸி எஸ்26 மற்றும் சாம்சங் கேலக்ஸி எஸ்26 பிளஸ் மாடல்கள் ஆனது முறையே 6.9மிமீ (164 கிராம்) மற்றும் 7.3மிமீ (191கிராம்) தடிமன் மற்றும் எடையை கொண்டிருக்கலாம்.

இது உண்மையாக இருந்தால், சாம்சங் கேலக்ஸி எஸ்26 அல்ட்ரா மற்றும் சாம்சங் கேலக்ஸி எஸ்26 சீரீஸின் ஸ்டாண்டர்ட் மாடல்கள் அவற்றின் முன்னோடிகளான கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா மற்றும் கேலக்ஸி எஸ்25 மாடலை விட இலகுவாகவும் மெல்லியதாகவும் இருக்கலாம். குறிப்பிடத்தக்க வகையில் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா 8.2 மிமீ தடிமன் மற்றும் சுமார் 218 கிராம் எடையை கொண்டுள்ளது. அதே நேரத்தில் வெண்ணிலா கேலக்ஸி எஸ்25 ஆனது 7.2 மிமீ தடிமன் மற்றும் சுமார் 168 கிராம் எடையை கொண்டுள்ளது.

முக்கிய அம்சங்கள்: சாம்சங் நிறுவனத்தின் இந்த 3 ஸ்மார்ட்போன்களுமே குவால்காம் (Qualcomm) நிறுவனத்தின் பிளாக்ஷிப் சிப்செட் ஆன ஆக்டா கோர் 3என்எம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட்டால் இயக்கப்படலாம். இருப்பினும், தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தைகளில், இது இன்னுமும் அறிமுகப்படுத்தப்படாத சாம்சங்கின் எக்ஸினோஸ் 2600 சிப் உடன் அறிமுகம் செய்யப்படலாம். மேலும், சாம்சங் கேலக்ஸி எஸ்26 மற்றும் எஸ்26 பிளஸ் மாடல்களில் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பும் , அல்ட்ரா மாடலில் குவாட் ரியர் கேமரா செட்டப்பும் எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A57 and Galaxy A77 Key Details Leaked What We can Expect Price Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X