Home
Mobile

2026-ல் களமிறங்கும் முதல் Samsung போன் இதுதான்.. 50எம்பி கேமரா.. ஆண்ட்ராய்டு 16 OS.. எந்த மாடல்?

சாம்சங் நிறுவனத்தின் புதிய சாம்சங் கேலக்ஸி ஏ57 5ஜி ஸமார்ட்போன் BIS சான்றிதழ் தளத்தில் SM-A576B/DS என்ற மாடல் நம்பர் உடன் காணப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் வரும் வாரங்களில் அதாவது பொங்கல் பண்டிகைக்கு முன்பு இந்த புதிய சாம்சங் போன் அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு உள்ளது.

குறிப்பாக அசத்தலான வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட அம்சங்களுடன் சாம்சங் கேலக்ஸி ஏ57 5ஜி ஸமார்ட்போன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. இப்போது ஆன்லைனில் கசிந்த சாம்சங் கேலக்ஸி ஏ57 5ஜி ஸமார்ட்போனின் அம்சங்களை இப்போது சற்று விரிவாகப் பார்க்கலாம்.

2026-ல் களமிறங்கும் முதல் Samsung போன் இதுதான்.. எந்த மாடல்?

சாம்சங் கேலக்ஸி ஏ57 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy A57 5G Specifications): இந்த சாம்சங் கேலக்ஸி ஏ57 5ஜி ஸ்மார்ட்போன் 50எம்பி மெயின் கேமரா + 12எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 5எம்பி மேக்ரோ லென்ஸ் என்கிற ரியர் கேமரா அமைப்புடன் அறிமுகம் செய்யப்படும். செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமராவும் இதில் உள்ளதாக கூறப்படுகிறது.

தரமான எக்ஸிநோஸ் 1680 சிப் (Exynos 1680 chip) உடன் இந்த புதிய சாம்சங் கேலக்ஸி ஏ57 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். இதற்கு முன்பு வந்த சாம்சங் போன்கள் எக்ஸிநோஸ் 1580 சிப்செட் உடன் வெளியானது. எனவே இந்த புது சாம்சங் போன் இரண்டு மடங்கு வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

6.7-இன்ச் சூப்பர் ஒஎல்இடி (OLED) டிஸ்பிளே வசதியுடன் சாம்சங் கேலக்ஸி ஏ57 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate), கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பிளஸ் (Corning Gorilla Glass Victus+) உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன.

தனித்துவமான Xclipse 550 GPU கிராபிக்ஸ் ஆதரவும் இந்த புது சாம்சங் போனில் இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் IP67 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட்(Dust & Water Resistant) ஆதரவு இந்த புதிய சாம்சங் ஸ்மார்ட்போனில் உள்ளது. 12ஜிபி வரை ரேம் மற்றும் 256ஜிபி வரை மெமரி ஆதரவுடன் இந்த போன் வெளிவரும்.

One UI 8.5 சார்ந்த ஆண்ட்ராய்டு 16 (Android 16) இயங்குதள வசதியுடன் இந்த புதிய சாம்சங் போன் அறிமுகமாகும். ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு 6 அல்லது 7 ஓஎஸ் அப்டேட்கள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த புதிய சாம்சங் கேலக்ஸி ஏ57 5ஜி ஸ்மார்ட்போனின் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சாம்சங் நிறுவனம்.

5000mAh பேட்டரி உடன் சாம்சங் கேலக்ஸி ஏ57 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.

5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, புளூடூத் 6.1, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த புதிய சாம்சங் ஸ்மார்ட்போனில் உள்ளன. மேலும் இந்த புதிய சாம்சங் கேலக்ஸி ஏ57 5ஜி ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

photo credits: pricepony, samsung

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A57 5G spotted on BIS certification: May launch in India soon: check details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X