Home
Mobile

முரட்டு 5ஜி போனை களமிறக்கும் Samsung.. IP67 ரேட்டிங்.. ஆண்ட்ராய்டு 16 OS.. சூப்பர் அமோலெட் டிஸ்பிளே..

சாம்சங் நிறுவனம் தனது புதிய சாம்சங் கேலக்ஸி ஏ57 5ஜி (Samsung Galaxy A57 5G) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. குறிப்பாக சாம்சங் கேலக்ஸி ஏ56 5ஜி ஸ்மார்ட்போனை விட மேம்பட்ட அம்சங்கள் உடன் இந்த புதிய சாம்சங் கேலக்ஸி ஏ57 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இப்போது ஆன்லைனில் கசிந்த இந்த போனின் அம்சங்களைப் பார்க்கலாம்.

சாம்சங் கேலக்ஸி ஏ57 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy A57 5G Specifications): 6.7-இன்ச் சூப்பர் அமோலெட் (Super AMOLED) டிஸ்பிளே வசதியுடன் இந்த புதிய சாம்சங் கேலக்ஸி ஏ56 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate), கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பிளஸ் (Corning Gorilla Glass Victus+) உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்கள் உள்ளன.

முரட்டு 5ஜி போனை களமிறக்கும் Samsung.. IP67 ரேட்டிங்.. எந்த மாடல்?

சக்திவாய்ந்த எக்ஸிநோஸ் 1680 சிப் (Exynos 1680 chip)உடன் இந்த புதிய சாம்சங் கேலக்ஸி ஏ57 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். இதற்கு முன்பு வந்த சாம்சங் போன்கள் எக்ஸிநோஸ் 1580 சிப்செட் உடன் வெளியானது. எனவே இந்த புது சாம்சங் போன் இரண்டு மடங்கு வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும்.

One UI 8.5 சார்ந்த ஆண்ட்ராய்டு 16 (Android 16) இயங்குதள வசதியுடன் இந்த புதிய சாம்சங் போன் அறிமுகமானது. ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு 6 அல்லது 7 ஓஎஸ் அப்டேட்கள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த புதிய சாம்சங் கேலக்ஸி ஏ57 5ஜி ஸ்மார்ட்போனின் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சாம்சங் நிறுவனம்.

Xclipse 540 GPU கிராபிக்ஸ் ஆதரவும் இந்த சாம்சங் போனில் இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக கேமிங் பயனர்கள் இந்த சாம்சங் ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம். IP67 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட்(Dust & Water Resistant) ஆதரவு இந்த புதிய சாம்சங் ஸ்மார்ட்போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

50எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் இந்த புதிய சாம்சங் கேலக்ஸி ஏ57 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமராவும் இதில் உள்ளதாக கூறப்படுகிறது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்களும் இந்த போனில் உள்ளன.

5000எம்ஏஎச் பேட்டரி உடன் சாம்சங் கேலக்ஸி ஏ57 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும். எனவே இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் பயனர்களுக்கு சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. அதாவது இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.

5ஜி. 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த புதிய சாம்சங் ஸ்மார்ட்போனில் உள்ளன. மேலும் இந்த புதிய சாம்சங் ஸ்மார்ட்போன் ஆனது சற்று உயர்வான விலையில் அறிமுகமாகும். ஆனால் விலைக்கு தகுந்த அனைத்து அம்சங்களும் இந்த போனில் இருக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A57 5G specifications leaked online: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X