Home
Mobile

மிட்-ரேஞ்ச் மிரளுது.. 5000mAh பேட்டரி.. AMOLED டிஸ்பிளே.. 50MP கேமரா.. புது சாம்சங் போன்.. எந்த மாடல்?

சாம்சங் பிரியர்களை வெயிட்டிங் மோடில் போட்டு வைத்துள்ள சாம்சங் கேலக்ஸி ஏ57 5ஜி (Samsung Galaxy A57 5G) ஸ்மார்ட்போனின் விலை விவரங்கள் தெரியவந்துள்ளன. ஏற்கனவே, டிஸ்பிளே, கேமரா, சிப்செட் மற்றும் பேட்டரி உள்ளிட்ட ஒட்டுமொத்த பீச்சர்களும் வெளியாகின. இப்போது, விலை விவரங்களானது, மிட்-ரேஞ்ச் செக்மெண்ட்டை காட்டுகின்றன.

இந்திய மார்கெட்டில் கடந்தாண்டு மார்ச் மாதம் சாம்சங் கேலக்ஸி ஏ56 5ஜி ஸ்மார்ட்போன் வெளியாகியது. ஆகவே, இந்த மார்ச் மாதத்தில் சாம்சங் கேலக்ஸி ஏ57 5ஜி ஸ்மார்ட்போன் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு ஏற்ப முழு பீச்சர்களும் முன்னதாகவே கசிந்துவிட்டன. இப்போது, தாய்லாந்து நாட்டில் விலை விவரங்கள் கசிந்துள்ளன.

மிட்-ரேஞ்ச் மிரளுது.. 5000mAh பேட்டரி.. AMOLED டிஸ்பிளே.. 50MP கேமரா!

ஆகவே, இந்தியாவிலும் இதே பட்ஜெட்டில் எதிர்பார்க்கலாம் என்பதால், எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது. 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.51,526 ஆக இருக்கிறது. இது தாய்லாந்து நாட்டில் விலையில் இருந்து இது மாற்றப்பட்டு உள்ளது. இந்தியாவில் கிட்டத்தட்ட இதே பட்ஜெட்டில் கிடைக்க வாய்ப்புள்ளது. இப்போது கசிந்த பீச்சர்களை பார்க்கலாம்.

சாம்சங் கேலக்ஸி ஏ57 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy A57 5G Specifications): ஆக்டா கோர் எக்ஸினோஸ் 1680 4என்எம் (Octa Core Exynos 1680 4nm) சிப்செட் மற்றும் ஏஎம்டி எக்ஸ்கிளிப்ஸ் 550 ஜிபியு (AMD Xclipse 550 GPU) கிராபிக்ஸ் கார்டை கொடுத்து உள்ளது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மற்றும் ஒன் யுஐ 8 (Samsung One UI 8) கிடைக்கிறது.

6.6 இன்ச் (1080 x 2340 பிக்சல்கள்) சூப்பர் அமோலெட் (Super AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. 50 எம்பி மெயின் கேமராவில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) டெக்னாலஜி கிடைக்கிறது. 12 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா மற்றும் 5 எம்பி மேக்ரோ கேமரா கிடைக்கிறது.

12 எம்பி செல்பீ கேமராவை இந்த சாம்சங் கேலக்ஸி ஏ57 5ஜி ஸ்மார்ட்போன் கொடுக்கிறது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) கிடைக்கிறது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) மற்றும் IP67 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) கிடைக்கிறது. 45W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5000mAh பேட்டரி கிடைக்கிறது.

6.9 எம்எம் அல்ட்ரா ஸ்லிம் பாடி கொடுக்க உள்ளது. 182 கிராம் எடை வருகிறது. 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட் மட்டுல்லாமல், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டும் கிடைக்க இருக்கிறது. இந்த சாம்சங் கேலக்ஸி ஏ57 5ஜி ஸ்மார்ட்போனானது, கேலக்ஸி ஏ56 5ஜி ஸ்மார்ட்போனில் இருந்து எவ்வாறு மாறுபடுகிறது.

கேலக்ஸி ஏ56 ஸ்மார்ட்போனில் ஆக்டா கோர் எக்ஸினோஸ் 1580 4என்எம் (Octa Core Exynos 1580 4nm) சிப்செட் கிடைக்கிறது. ஆகவே, அப்கிரேட் செய்யப்பட்ட சிப்செட்டை கேலக்ஸி ஏ57 5ஜி கொண்டுள்ளது. மற்ற பீச்சர்களில் பெரிதாக மாற்றமில்லை. இருப்பினும், விலையில் மாற்றம் இருக்கும். அதேபோல ஓஎஸ் மற்றும் யுஐ ஆகியவற்றில் அப்கிரேட்கள் இருக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A57 5G Price Revealed Ahead of Launch Expected Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X