Home
Mobile

Samsung-ன் 2 புது சிங்கக்குட்டி.. 5ஜி, 5000mAh பேட்டரி, 12GB ரேம்.. ஏப்.2 முதல் SALE.. எந்த மாடல், என்ன விலை?

சாம்சங் (Samsung) நிறுவனத்தின் லேட்டஸ்ட் 5ஜி ஸ்மார்ட்போன்கள் ஆக கேலக்ஸி ஏ57 5ஜி (Galaxy A57 5G) மற்றும் கேலக்ஸி ஏ37 5ஜி (Galaxy A37 5G) மாடல்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன. என்ன விலை? எப்போது முதல் சேல்? என்னென்ன அம்சங்கள்? இதோ விவரங்கள்:

சாம்சங் கேலக்ஸி ஏ57 5ஜி, கேலக்ஸி ஏ37 5ஜி அம்சங்கள்: இரண்டு ஸ்மார்ட்போன்களுமே ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ்-ஐ அடிப்படையாகக் கொண்ட ஒன் யுஐ 8.5கொண்டு இயங்குகின்றன. மேலும், இவைகள் 6 ஜெனரேஷன் ஆண்ட்ராய்டு மற்றும் ஒன் யுஐ அப்டேட்களையும், ஆறு ஆண்டுகள் வரையிலான செக்யூரிட்டி அப்டேட்களையும் பெறும் என உறுதி செய்யப்பட்டுள்ளது.

Samsung-ன் 2 புது சிங்கக்குட்டி.. 5ஜி, 5000mAh பேட்டரி, 12GB ரேம்!

டிஸ்பிளேவை பொறுத்தவரை இரண்டு போன்களிலும் 120ஹெர்ட்ஸ் வரையிலான ரெஃப்ரெஷ் ரேட் உடன் கூடிய 6.7-இன்ச் ஃபுல் எச்டி+ சூப்பர் அமோஎல்இடிபிளஸ் டிஸ்ப்ளே உள்ளது. இந்த டிஸ்பிளே சாம்சங்கின் விஷன் பூஸ்டர் தொழில்நுட்பத்தை ஆதரிக்கிறது. சிப்செட் விவரங்கள் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.
கேலக்ஸி ஏ57 மாடலில் எக்ஸினோஸ் 1680 இருக்கும் என்றும், கேலக்ஸி ஏ37 மாடலில் எக்ஸினோஸ் 1480 சிப் இருக்கும் என்றும் நம்பப்படுகிறது.

இந்த இரண்டு போன்களிலும் 12ஜிபி வரையிலான ரேம் மற்றும் 256ஜிபி வரையிலான இன்டர்னல் ஸ்டோரேஜ் உள்ளது. கேமராக்களை பொறுத்தவரை, கேலக்ஸி ஏ57 5ஜி மற்றும் கேலக்ஸி ஏ37 5ஜி ஆகிய இரண்டுமே எப்/1.8 அபெர்க்ஷர் கொண்ட 50-மெகாபிக்சல் வைட்-ஆங்கிள் கேமராவை கொண்டுள்ளன.

ஆனால் கேலக்ஸி ஏ57 5ஜி ஸ்மார்ட்போனின் ரியர் கேமரா செட்டப்பில் எப்/2.2 அபெர்க்ஷர் கொண்ட 12-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமராவும், எப்/2.4 அபெர்க்ஷர் கொண்ட 5-மெகாபிக்சல் மேக்ரோ கேமராவும் உள்ளது. மறுபுறம் உள்ள கேலக்ஸி ஏ37 5ஜி மாடலில் எப்/2.2 அபெர்க்ஷர் கொண்ட 8-மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் சென்சாரும், எப்/2.4 அபெர்க்ஷர் கொண்ட 5-மெகாபிக்சல் மேக்ரோ கேமராவும் உள்ளது. முன்பக்கத்தில் இரண்டுமே எப்/2.2 அபெர்ச்சர் கொண்ட 12 மெகாபிக்சல் செல்பீ கேமராவை கொண்டுள்ளன.

இந்த கேமரா யூனிட்கள் - ஆப்ஜெக்ட் எரேசர், பெஸ்ட் பேஸ் , ஃபில்டர்ஸ் மற்றும் எடிட் சஜ்ஜஷன்ஸ் போன்ற பல ஏஐ இமேஜிங் அம்சங்களை ஆதரிக்கின்றன. மேலும் இரண்டுமே வாய்ஸ் டிரான்ஸ்கிரிப்ஷன், ஏஐ செலக்ட் மற்றும் கூகுள் சர்க்கிள் டூ சேர்ச் உள்ளிட்ட பல்வேறு ஏஐ அடிப்படையிலான செயல்பாடுகளையும் வழங்குகின்றன. வீடியோ எடிட்டிங்கிற்காக ஆட்டோ டிரிம் அம்சமும் உள்ளது.

பேட்டரியை பொறுத்தவரை கேலக்ஸி ஏ57 5ஜி மற்றும் கேலக்ஸி ஏ37 5ஜி ஆகியவற்றில் 5000mAh பேட்டரி உள்ளது. இந்த பேட்டரி ஒரே சார்ஜில் 2 நாட்கள் வரை பேட்டரி லைஃப்பை வழங்கும் என்று கூறப்படுகிறது. இதில் உள்ள சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங் 2.0 தொழில்நுட்பம் ஆனது, சுமார் 30 நிமிட சார்ஜிங்கில் இந்த ஸ்மார்ட்போன்களின் பேட்டரியை பூஜ்ஜியத்திலிருந்து 60 சதவீதம் வரை நிரப்பும் என்று கூறப்படுகிறது.

பாதுகாப்பிற்காக சாம்சங்கின் நாக்ஸ் வால்ட் (Knox Vault) அம்சத்துடன் வரும் இந்த ஸ்மார்ட்போன்கள் நீர் மற்றும் தூசி எதிர்ப்பிற்கான ஐபி68 ரேட்டிங்கை கொண்டுள்ளன. கடைசியாக அளவீடுகளில் - கேலக்ஸி ஏ57 5ஜி ஆனது 161.5x76.8x6.9 மிமீ மற்றும் 179 கிராம் எடையை கொண்டுள்ளது, அதேசமயம் கேலக்ஸி ஏ37 5ஜி ஆனது 162.9 x 78.2 x 7.4 மிமீ மற்றும் 196 கிராம் எடையை கொண்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ57 5ஜி, கேலக்ஸி ஏ37 5ஜி விலை மற்றும் விற்பனை விவரங்கள்: இரண்டுமே தற்போது அமேசானில் முன்பதிவுகளுக்காக பட்டியலிடப்பட்டுள்ளன, ஏப்ரல் 2 ஆம் தேதி டெலிவரி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சாம்சங் கேலக்ஸி ஏ57 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை ரூ.56,999 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதே ஸ்மார்ட்போனின் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை ரூ.62,499 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆசம் நேவி, ஆசம் ஐசிப்ளூ மற்றும் ஆசம் லிலாக் ஆகிய 3 கலர் ஆப்ஷன்களில் வாங்க கிடைக்கும். மறுபுறம் உள்ள சாம்சங் கேலக்ஸி ஏ37 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை ரூ.41,999 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதே ஸ்மார்ட்போன் 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டுகளிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அவைகளின் விலைகள் முறையே ரூ.47,499 மற்றும் ரூ.52,999 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆசம் லாவெண்டர், ஆசம் சார்கோல் மற்றும் ஆசம் கிரேக்ரீன் ஆகிய 3 கலர்களில் வாங்க கிடைக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A57 5G Galaxy A37 5G Launched in India Pre order Started Sale From April 2
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X