Home
Mobile

வணக்கம்டி மாப்ள.. Samsung-ல இருந்து புது 5ஜி போன்.. அல்லு விடப்போகும் ஏ-சீரீஸ்.. எந்த மாடல்?

ஒன்பிளஸ் தொடங்கி லாவா வரையிலாக கிட்டத்தட்ட எல்லா ஸ்மார்ட்போன் பிராண்டுகளுமே, இந்த 2025 நவம்பரில், தத்தம் புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய உள்ளன. இந்த பட்டியலில் சாம்சங்கின் எந்த மாடலும் இல்லை. ஆனால் விரைவில் ஒரு புதிய ஏ-சீரீஸ் ஸ்மார்ட்போனை அறிமுகமாகும்.

அது சாம்சங் கேலக்ஸி ஏ57 5ஜி (Samsung Galaxy A57 5G) ஸ்மார்ட்போனாகும். எக்ஸ் தளம் வழியாக அகிலேஷ் குமார் (@Koram_Akhilesh) என்கிற பயனர், சாம்சங் கேலக்ஸி ஏ57 ஸ்மார்ட்போன் ஆனது சாம்சங்கின் டெஸ்ட் சர்வர் தரவுத்தளத்தில் ஏ576பி என்கிற மாடல் நம்பரின் கீழ் காணப்பட்டதாக கூறுகிறார். இது - இந்த ஸ்மார்ட்போனின் வெளியீடு வெகு தொலைவில் இல்லை என்பதை குறிக்கிறது.

வணக்கம்டி மாப்ள.. Samsung-ல இருந்து புது 5ஜி போன்!

இப்போதைக்கு இந்த ஸ்மார்ட்போன் எக்ஸினோஸ் 1680 சிப்செட் கொண்டு இயக்கப்படலாம் என்கிற தகவலை தவிர்த்து வேறு எந்த விவரங்களும் இல்லை. ஆனால் நிச்சயம் இது கடந்த எம்டபுள்யூசி 2025 (MWC 2025) நிகழ்வில் அறிமுகமான சாம்சங் கேலக்ஸி ஏ56 5ஜி (Samsung Galaxy A56 5G) மாடலுடன் ஒப்பிடும் போது சில நல்ல முன்னேற்றங்களை பெறும்.

மேலும் சாம்சங் கேலக்ஸி ஏ57 5ஜி ஆனது கேலக்ஸி ஏ37 5ஜி (Galaxy A37 5G) மாடலுடன் சேர்த்து அறிமுகமாகலாம். அதாவது கேலக்ஸி ஏ56 5ஜி மற்றும் கேலக்ஸி ஏ36 5ஜி ஆகிய இரண்டும் ஒன்றாக அறிமுகமானது போல. லான்ச் டைம்லைனை பொறுத்தவரை இவைகள் 2026 தொடக்கத்தில் அறிமுகம் செய்யப்படலாம். ஏனென்றால் மேற்குறிப்பிட்ட சிப்செட் இன்னும் அறிமுகமாகவில்லை. அது வெளியான பின்னரே ஏ57 குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்கள் கிடைக்கும்.

சாம்சங் கேலக்ஸி ஏ56 5ஜி இந்திய விலை விவரங்கள்: 8 ஜிபி ரேம் + 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் - ரூ.41,999 க்கும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் - ரூ.44,999 க்கும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் - ரூ.47,999 க்கும் அறிமுகமானது.

சாம்சங் கேலக்ஸி ஏ36 5ஜி இந்திய விலை விவரங்கள்: 8 ஜிபி ரேம் + 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் - ரூ.32,999 க்கும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் - ரூ.35,999 க்கும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் - ரூ.38,999 க்கும் அறிமுகமானது.

சாம்சங் கேலக்ஸி ஏ56 5ஜி, சாம்சங் கேலக்ஸி ஏ36 5ஜி ஸ்மார்ட்போன்களின் முக்கிய அம்சங்கள்: சாம்சங் கேலக்ஸி ஏ36 5ஜி, சாம்சங் கேலக்ஸி ஏ36 5ஜி ஆகிய இரண்டுமே 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் கார்னிங் கொரில்லா விக்டஸ் பிளஸ் கிளாஸ் ப்ரொடெக்ஷன் உடனான 6.7-இன்ச் ஃபுல்எச்டி பிளஸ் சூப்பர் அமோ எல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளன.

சிப்செட்டை பொறுத்தவரை சாம்சங் கேலக்ஸி ஏ56 5ஜி ஆனது எக்ஸினோஸ் 1580 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது, அதே நேரத்தில் சாம்சங் கேலக்ஸி ஏ36 5ஜி ஆனது ஸ்னாப்டிராகன் 6 ஜென் 3 சிப்செட் உடன் வருகிறது. இரண்டுமே 12ஜிபி வரை ரேம், 256ஜிபி வரை இன்டர்னல் ஸ்டோரேஜை பேக் செய்கின்றன.

கேமராக்களை பொறுத்தவரை கேலக்ஸி ஏ56 5ஜி ஆனது ஓஐஎஸ் ஆதரவுடன் 50எம்பி ப்ரைமரி சென்சார், 12எம்பி அல்ட்ராவைட் ஷூட்டர் மற்றும் 5 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. சாம்சங் கேலக்ஸி ஏ36 5ஜி மாடலும் இதே போன்ற செட்டப்பை தான் கொண்டுள்ளது. ஆனால் 8 மெகாபிக்சல் அல்ட்ராவைட் சென்சாரை கொண்டுள்ளது.

மேலும் இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் 12 மெகாபிக்சல் செல்பீ கேமராக்கள் உள்ளன. பேட்டரியை பொறுத்தவரை இரண்டுமே 5000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. மேலும் 45W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கின்றன மற்றும் தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்காக ஐபி67 ரேட்டிங் கட்டமைப்பை கொண்டுள்ளன.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A57 5G Chipset Leaked So launching is Near What to Expect
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X