Home
Mobile

முரட்டு ஆர்டர்.. 20 சதவீத ஆஃபரில் AMOLED டிஸ்பிளே.. 5000mAh பேட்டரி.. 45W சார்ஜிங்.. எந்த மாடல்?

சாம்சங் நிறுவனத்தின் ஏ சீரிஸ் மாடல்களுக்கு தனி வரவேற்பு இருக்கிறது. பர்ஃபாமென்ஸ் மற்றும் கேமராவில் பட்டையை கிளப்பும்படி இந்த மாடல்களும் இருக்கும். இதில் ஆக்டா கோர் எக்ஸினோஸ் 1580 4என்எம் சிப்செட் கொண்ட மாடலாக சாம்சங் கேலக்ஸி ஏ56 அறிமுகம் செய்யப்பட்டது. இப்போது தள்ளுபடி விலைக்கு கிடைக்கிறது.

பிளிப்கார்ட் தளத்தில் 20 சதவீத தள்ளுபடி விலைக்கு 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் கிடைக்கிறது. ஆகவே, ரூ.36,995 விலைக்கு வாங்கி கொள்ளலாம். மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.1,850 தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே, ரூ.35,145 விலைக்கு வாங்கி கொள்ளலாம்.

முரட்டு ஆர்டர்.. 20 சதவீத ஆஃபரில் AMOLED டிஸ்பிளே.. 5000mAh பேட்டரி!

சாம்சங் கேலக்ஸி ஏ56 அம்சங்கள் (Samsung Galaxy A56 Specifications): ஏஎம்டி எக்ஸ்கிளிப்ஸ் 540 ஜிபியு (AMD Xclipse 540 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்ட 2.9GHz ஆக்டா கோர் எக்ஸினோஸ் 1580 4என்எம் (Octa Core Exynos 1580 4nm) ப்ராசஸரை கொடுத்துள்ளது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மற்றும் ஒன் யுஐ 7 (Samsung One UI 7) கிடைக்கிறது.

8 ஜிபி / 12 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி / 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் வருகிறது. டூயல் சிம் (நானோ + நானோ) சப்போர்ட் உள்ளது. 6.7 இன்ச் (1080 x 2340 பிக்சல்கள்) சூப்பர் அமோலெட் இன்ஃபினிட்டி-ஓ (Super AMOLED Infinity-O) ஹெச்டிஆர் (HDR) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் உள்ளது.

மேலும், 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. 1200 நிட்ஸ் ஹெச்பிஎம் (HBM) மற்றும் 1900 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொடுக்கப்பட்டு இருக்கிறது. மேலும், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ்+ (Corning Gorilla Glass Victus+) பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. ரியர் கேமரா செட்டப்பை பார்க்கையில் 50 எம்பி மெயின் கேமரா + 12 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 5 எம்பி மேக்ரோ கேமரா உள்ளது.

மெயின் கேமராவில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) கொடுக்கப்பட்டு இருக்கிறது. முன்புறம் 12 எம்பி செல்பீ கேமரா கிடைக்கிறது. இந்த மாடலில் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சாரை (In-display Fingerprint sensor) கொடுத்து இருக்கிறது. டைப்-சி ஆடியோ (Type-C Audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) மற்றும் டைப்-சி சார்ஜிங் போர்ட் கொடுத்து இருக்கிறது.

மேலும், டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் கொடுக்க ஐபி67 (IP67) ரேட்டிங் பெற்றுள்ளது. 45W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரியை பேக் செய்துள்ளது. 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ. 4ஜி வோஎல்டிஇ, வை-பை 802.11 ஏசி, ப்ளூடூத் 5.3, ஜிபிஎஸ் மற்றும் என்எப்சி (NFC) கிடைக்கிறது. பேட்டரியுடன் சேர்த்து மொத்தமாக 198 கிராம் எடை கொண்டுள்ளது.

சாம்சங் நிறுவனத்தின் ஸ்மார்ட்போனை வாங்க விரும்பும் கஸ்டமர்களில் பிரீமியம் மிட்-ரேஞ்ச் பட்ஜெட் மாடல்களை தேடுவோர், சிறந்த கேமரா, பவர்ஃபுல் ப்ராசஸர், இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (IP67) போன்ற சிறப்பான அம்சங்களை பெற விரும்பினால், இந்த சாம்சங் கேலக்ஸி ஏ56 மாடலை ஆப்ஷனில் எடுக்கலாம்.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A56 With 50MP Camera Available At 20 Percent Discount on Flipkart Check Specification
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X