Home
Mobile

இந்த Samsung 5ஜி போனுக்கு பல பேர் வெயிட்டிங்.. 50எம்பி கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 12ஜிபி ரேம்.. எந்த மாடல்?

சாம்சங் கேலக்ஸி ஏ56 (Samsung Galaxy A56) ஸ்மார்ட்போன் ஆனது சீனாவின் MIIT தளத்தில் SM-A5660 என்ற மாடல் நம்பர் உடன் காணப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சாம்சங் போன் வரும் மார்ச் மாதம் சீனாவில் அறிமுகமாகும் எனத் தகவல் வெளியாகி உள்ளது. சீனாவில் அறிமுகமான சில வாரங்களில் இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளில் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ56 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ56 ஸ்மார்ட்போனின் புகைப்படங்கள் ஏற்கனவே ஆன்லைனில் வெளியானது. அதன்படி ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த போன். மேலும் பஞ்ச்-ஹோல் டிஸ்பிளே (Punch-Hole Display) உடன் இந்த போன் அறிமுகமாகும். மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த போன்.

இந்த Samsung 5ஜி போனுக்கு பல பேர் வெயிட்டிங்.. எந்த மாடல்?

சாம்சங் கேலக்ஸி ஏ56 அம்சங்கள் (Samsung Galaxy A56 Specifications): சக்திவாய்ந்த எக்ஸ்நோஸ் 1580 (Exynos 1580) சிப்செட் உடன்
சாம்சங் கேலக்ஸி ஏ56 போன் வெளிவரும்.மேலும் Xclipse 540 GPU கிராபிக்ஸ் ஆதரவு இதில் உள்ளதாக கூறப்படுகிறது. எனவே இந்த போன் சிறந்த கேமிங் அனுபவத்தை வழங்கும்.

அதேபோல் 6.5-இன்ச் பிளாட் அமோலெட் டிஸ்பிளே (flat AMOLED Display) உடன் சாம்சங் கேலக்ஸி ஏ56 போன் அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்,1000 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

குறிப்பாக One UI 7.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 15 (Android 15) இயங்குதள வசதியுடன் இந்த புதிய சாம்சங் கேலக்ஸி ஏ56 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். மேலும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதியைக் கொண்டுள்ளது இந்த சாதனம்.

சாம்சங் கேலக்ஸி ஏ56 போன் 50எம்பி பிரைமரி கேமரா + 12எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 5எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 12எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இதில் உள்ளன.

இந்த Samsung 5ஜி போனுக்கு பல பேர் வெயிட்டிங்.. எந்த மாடல்?

5000mAh பேட்டரி உடன் சாம்சங் கேலக்ஸி ஏ56 போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி வசதியுடன் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ56 போன் வெளிவரும்.

ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 6 இ, புளூடூத் 5.4, ஜிபிஎஸ்,
குளோனாஸ் (GLONASS), கலிலியோ (GALILEO), போன்ற பல்வேறு ஆதரவுகளுடன் சாம்சங் கேலக்ஸி ஏ56 போன் வெளிவரும். பின்பு ஆன்லைனில் வெளியான தகவலின்படி, ரூ.47,200 விலையில் இந்த போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

photo credit: @OnLeaks, @androidheadlines, AH

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A56 spotted on MIIT certification site: check all details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X