மார்க்கெட்டே திணறப்போகுது.. AMOLED டிஸ்பிளே.. 50எம்பி கேமரா.. வருகிறது புது சாம்சங் போன்.. எந்த மாடல்?
சாம்சங் நிறுவனம் இந்தியாவில் அசத்தலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அதுவும் மற்ற ஸ்மார்ட்போன்களை விட தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் சாம்சங் போன்கள் வெளிவருவதால் இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்நிலையில் சாம்சங் கேலக்ஸ் ஏ56 (Samsung Galaxy A56) ஸ்மார்ட்போனின் அறிமுகம் குறித்த முக்கியத் தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி சாம்சங் கேலக்ஸி ஏ56 ஸ்மார்ட்போன் ஆனது வரும் மார்ச் மாதம் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மேம்பட்ட ஏஐ அம்சங்களுடன் இந்த புதிய சாம்சங் போன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. மேலும் ஆன்லைனில் கசிந்த இந்த போனின் அம்சங்கள் மற்றும் விலை குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம்.

சாம்சங் கேலக்ஸி ஏ56 அம்சங்கள்(Samsung Galaxy A56 Specifications): 50எம்பி பிரைமரி கேமரா + 12எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 5எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் உடன் அறிமுகமாகும் சாம்சங் கேலக்ஸி ஏ56 போன். எனவே இந்த போனின் உதவியுடன் அசத்தலான படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 12எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இதில் உள்ளன.
அதேபோல் 6.5-இன்ச் பிளாட் அமோலெட் டிஸ்பிளே (flat AMOLED Display) உடன் சாம்சங் கேலக்ஸி ஏ56 போன் அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்,1000 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவரும் என்பதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
சக்திவாய்ந்த எக்ஸ்நோஸ் 1580 (Exynos 1580) சிப்செட் உடன் புதிய சாம்சங் கேலக்ஸி ஏ56 போன் வெளிவரும். குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் இந்த போனில் வீடியோ எட்டிங் ஆப்ஸ் மற்றும் கேமிங் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும். மேலும் Xclipse 540 GPU கிராபிக்ஸ் ஆதரவு இந்த போனில் உள்ளது. எனவே கேமிங் பயனர்கள் இந்த சாம்சங் ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம்.
குறிப்பாக One UI 7.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 15 (Android 15) இயங்குதள வசதியுடன் இந்த புதிய சாம்சங் கேலக்ஸி ஏ56 ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதியைக் கொண்டுள்ளது இந்த சாதனம். பின்பு இந்த போனின் மென்பொருள் வசதிக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சாம்சங் நிறுவனம்.
மேலும் 5000mAh பேட்டரி உடன் சாம்சங் கேலக்ஸி ஏ56 போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. எனவே இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும். 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் சாம்சங் கேலக்ஸி ஏ56 போன் விற்பனைக்கு வரும்.
ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 6 802.11பிஇ, புளூடூத் 5.4, ஜிபிஎஸ், குளோனாஸ் (GLONASS), கலிலியோ (GALILEO), போன்ற பல்வேறு ஆதரவுகளுடன் சாம்சங் கேலக்ஸி ஏ56 போன் வெளிவரும். மேலும் ஆன்லைனில் கசிந்த தகவலின்படி, ரூ.42,000 பட்ஜெட்டில் இந்த புதிய சாம்சங் போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications








