அதிரடியாக உயர போகும் Samsung போன்களின் விலை.. காரணம் என்ன?
சாம்சங் நிறுவனம் சாம்சங் கேலக்ஸி ஏ56 5ஜி (Samsung Galaxy ஏ56 5G) ஸ்மார்ட்போனின் விலை உயர்த்தும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது டிப்ஸ்டர் அபிஷேக் யாதவ் வெளியிட்ட தகவின்படி, இந்த வாரம் கேலக்ஸி ஏ56 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ.2000 வரை உயரும் என்று தெரிவித்துள்ளார்.
தற்போது 8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி ஏ56 5ஜி ஸ்மார்ட்போன் ரூ.38,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இதன் 8ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் ரூ.41,999 விலையிலும், 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் ரூ.44,999 விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது.

சாம்சங் நிறுவனம் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ56 5ஜி போனின் விலை உயர்வை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ஆனாலும் இந்த வாரம் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ56 5ஜி போனின் விலை உயரும் என்று கூறப்படுகிறது. அதேபோல் இன்னும் பல கேலக்ஸி ஏ சீரிஸ் போன்களின் விலை கூட உயரும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக உலகளாவிய மெமரி சிப் விலைகள் அதிகரித்து வருவதால் இந்த விலை உயர்வு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது சாம்சங் கேலக்ஸி ஏ56 5ஜி போனின் அம்சங்களைப் பார்க்கலாம்.
சாம்சங் கேலக்ஸி ஏ56 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy ஏ56 5G Specifications): தரமான 4என்எம் ஆக்டா கோர் எக்ஸினோஸ் 1580 (4nm Octa Core Exynos 1580) சிப்செட்வசதியுடன் இந்த சாம்சங் போன் வெளிவந்துள்ளது. மேலும் கேமிங் பயனர்களைக் கவரும் வகையில் இந்த போனில் ஏஎம்டி எக்ஸ்கிளிப்ஸ் 540 ஜிபியு (AMD Xclipse 540 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் 6.7 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் (FHD+) சூப்பர் அமோலெட் (Super AMOLED) டிஸ்பிளே டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது சாம்சங் கேலக்ஸி ஏ56 5ஜி போன். 1080 x 2340 பிக்சல்கள், 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பிளஸ் (Corning Gorilla Glass Victus Plus), 1900 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளிட்ட பல அம்சங்கள் இதன் டிஸ்பிளேவில் உள்ளன.
குறிப்பாக சாம்சங் ஒன் யுஐ 7 (Samsung One UI 7) சார்ந்த ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மூலம் இந்த போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சாம்சங் கேலக்ஸி ஏ56 5ஜி ஸ்மார்ட்போன் 50 எம்பி மெயின் கேமரா + 12 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 5 எம்பி மேக்ரோ கேமரா கொண்ட டிரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் அசத்தலான படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 12எம்பி கேமரா இந்த போனில் உள்ளது.

அதுவும் IP67 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) ஆதரவுடன் இந்த சாம்சங் ஸ்மார்ட்போன் வெளிவந்தது. மேலும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதியும் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதேபோல் டைப்-சி ஆடியோ (Type-C Audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) வசதியுடன் இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டது.
மேலும் 5000mAh பேட்டரி வசதியுடன் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ56 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்தது. மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.


Click it and Unblock the Notifications








