Home
Mobile

பின்றானே சாம்சங்.. 50MP கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 45W ஃபாஸ்ட் சார்ஜிங்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?

இந்திய மார்கெட்டில் சாம்சங் பிரியர்களை அறக்க பறக்க விடும்படியான பட்ஜெட்டில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் கேமரா, இன்பினிட்டி-ஓ சூப்பர் அமோலெட் டிஸ்பிளே, கொரில்லா கிளாஸ் விக்டஸ் பிளஸ் பாதுகாப்பு போன்ற பீச்சர்களுடன் சாம்சங் கேலக்ஸி ஏ56 5ஜி (Samsung Galaxy A56 5G) களமிறங்கி இருக்கிறது. ஏஎம்டி எக்ஸ்கிளிப்ஸ் கிராபிக்ஸ் கார்டு, எக்ஸினோஸ் 1580 சிப்செட் போன்ற பீச்சர்களை கொடுக்கிறது. இந்த சாம்சங் கேலக்ஸி ஏ56 5ஜி போன் குறித்த முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

சாம்சங் கேலக்ஸி ஏ56 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy A56 5G Specifications): இந்த சாம்சங் போனில் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பிளஸ் (Corning Gorilla Glass Victus Plus) பாதுகாப்பு கொண்ட 6.7 இன்ச் (1080 x 2340 பிக்சல்கள்) இன்பினிட்டி-ஓ சூப்பர் அமோலெட் (Super AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இதில் ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் உள்ளது.

பின்றானே சாம்சங்.. 50MP கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 45W சார்ஜிங் மாடல்!

மேலும், 1900 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. சாம்சங் நிறுவனத்தின் யுஐ மற்றும் சிப்செட் பேக் செய்துள்ளது. ஆகவே, சாம்சங் ஒன் யுஐ 7 (Samsung One UI 7) கொண்ட 4என்எம் ஆக்டா கோர் எக்ஸினோஸ் 1580 (4nm Octa Core Exynos 1580) சிப்செட் கிடைக்கிறது. இந்த சிப்செட்டுக்கு ஏற்றபடி ஏஎம்டி எக்ஸ்கிளிப்ஸ் 540 ஜிபியு (AMD Xclipse 540 GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது.

இந்த சாம்சங் கேலக்ஸி ஏ56 5ஜி போனில் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கிடைக்கிறது. இதில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்கள் விற்பனைக்கு வருகிறது. இதுபோக 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட ஹை-எண்ட் வேரியண்ட் விற்பனைக்கு கிடைக்கிறது. இதில் டூயல் சிம் சிலாட் கொடுக்கிறது.

ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Optical Image Stabilization) டெக்னாலஜி கொண்ட 50 எம்பி மெயின் கேமரா + 12 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 5 எம்பி மேக்ரோ கேமரா கொண்ட டிரிபிள் ரியர் கேமரா சிஸ்டம் (Triple Rear Camera System) கிடைக்கிறது. 12 எம்பி செல்பீ ஷூட்டர் உள்ளது. இந்த சாம்சங் கேலக்ஸி ஏ56 5ஜி போனில் 5000mAh பேட்டரி மற்றும் 45W சார்ஜிங் வருகிறது.

IP67 டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) மற்றும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) கிடைக்கிறது. மேலும், டைப்-சி ஆடியோ (Type-C Audio) மற்றும் 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ மற்றும் 4ஜி வோஎல்டிஇ கனெக்டிவிட்டிகள் கிடைக்கிறது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.41,999ஆக இருக்கிறது.

மேலும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.44,999ஆகவும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.47,999ஆகவும் இருக்கிறது. இப்போது, இந்திய மார்கெட்டில் களமிறங்கி இருக்கிறது. ஆவ்ஸம் லைட்கிரே (Awesome Lightgray), ஆவ்ஸம் கிராஃபைட் (Awesome Graphite) மற்றும் ஆவ்ஸம் ஆலிவ் (Awesome Olive) கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A56 5G With 50MP Camera Launched in India Sale From Amazon Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X