அதிருது இந்திய மார்க்கெட்.. AMOLED டிஸ்பிளே.. 50எம்பி கேமரா.. வருகிறது புதிய சாம்சங் 5ஜி போன்.. எந்த மாடல்?
இந்தியா மற்றும் இங்கிலாந்தின் சாம்சங் ஆதரவு பக்கங்களில் (support pages) SM-A566E/DS என்ற மாடல் நம்பர் உடன் சாம்சங் கேலக்ஸி ஏ56 5ஜி (Samsung Galaxy A56 5G) ஸ்மார்ட்போன் காணப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் வரும் வாரங்களில் இந்தியாவில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது. மேலும் ஏற்கனவே இந்த போனின் புகைப்படங்கள் மற்றும் விவரக்குறிப்புகள் வெளியானது.
அதாவது சாம்சங் கேலக்ஸி ஏ56 5ஜி போன் ஆனது ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. அதேபோல் பிளாட் அமோலெட் டிஸ்பிளே (flat AMOLED Display) உடன் இந்த போன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் ஆன்லைனில் கசிந்த சாம்சங் கேலக்ஸி ஏ56 5ஜி போனின் அம்சங்களைப் பார்க்கலாம்.

சாம்சங் கேலக்ஸி ஏ56 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy A56 5G Specifications): தரமான எக்ஸ்நோஸ் 1580 (Exynos 1580) சிப்செட் உடன் சாம்சங் கேலக்ஸி ஏ56 5ஜி போன் வெளிவரும்.மேலும் Xclipse 540 GPU கிராபிக்ஸ் ஆதரவு இதில் உள்ளதாக கூறப்படுகிறது. எனவே இந்த போன் சிறந்த கேமிங் அனுபவத்தை வழங்கும். குறிப்பாக இந்த போனுக்கு வழங்கப்பட்ட சிப்செட் ஆனது மேம்பட்ட செயல்திறன் வழங்கும்.
அதேபோல் 6.5-இன்ச் பிளாட் அமோலெட் டிஸ்பிளே (flat AMOLED Display) உடன் சாம்சங் கேலக்ஸி ஏ56 5ஜி போன் அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்,1000 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது.
மேலும் One UI 7.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 15 (Android 15) இயங்குதள வசதியுடன் இந்த புதிய சாம்சங் கேலக்ஸி ஏ56 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். ஆனாலும் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதியைக் கொண்டுள்ளது இந்த சாதனம். இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சாம்சங் நிறுவனம்.
சாம்சங் கேலக்ஸி ஏ56 5ஜி போன் ஆனது 50எம்பி பிரைமரி கேமரா + 12எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 5எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்கொண்டுள்ளது . மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 12எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இதில் உள்ளன.
குறிப்பாக ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 6 இ, புளூடூத் 5.4, ஜிபிஎஸ், குளோனாஸ் (GLONASS), கலிலியோ (GALILEO), போன்ற பல்வேறு ஆதரவுகளுடன் சாம்சங் கேலக்ஸி ஏ56 5ஜி போன் வெளிவரும்.
4905mAh பேட்டரி உடன் சாம்சங் கேலக்ஸி ஏ56 போன் 5ஜி வெளிவரும். குறிப்பாக இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும்.8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் இந்த சாம்சங் 5ஜி போன் அறிமுகமாகும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.


Click it and Unblock the Notifications








