அதிரவிடும் விலை.. 50எம்பி கேமரா.. 45W சார்ஜிங்.. வருகிறது புதிய சாம்சங் 5ஜி போன்.. எந்த மாடல்?
சாம்சங் நிறுவனம் விரைவில் சாம்சங் கேலக்ஸி ஏ56 5ஜி (Samsung Galaxy A56 5G) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது 2025-ம் ஆண்டு துவக்கத்தில் இந்த போன் அறிமுகமாகும் எனத் தகவல் வெளியானது. ஏற்கனவே சாம்சங் கேலக்ஸி ஏ56 போனின் புகைப்படங்கள் வெளியான நிலையில், தற்போது இந்த போனின் முக்கிய விவரக்குறிப்புகள மற்றும் விலை குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது.
சாம்சங் கேலக்ஸி ஏ56 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy A56 5G Specifications): 6.5-இன்ச் பிளாட் அமோலெட் டிஸ்பிளே (flat AMOLED Display) உடன் சாம்சங் கேலக்ஸி ஏ56 5ஜி போன் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்,1000 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. குறிப்பாக இந்த போன் சிறந்த திரை அனுபவம் வழங்கும்.

தரமான எக்ஸ்நோஸ் 1580 (Exynos 1580) சிப்செட் உடன் புதிய சாம்சங் கேலக்ஸி ஏ56 5ஜி போன் வெளிவரும். குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் இந்த போனில் வீடியோ எட்டிங் ஆப்ஸ் மற்றும் கேமிங் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும். மேலும் Xclipse 540 GPU கிராபிக்ஸ் ஆதரவு இதில் உள்ளது.
One UI 7.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 15 (Android 15) இயங்குதள வசதியுடன் இந்த புதிய சாம்சங் கேலக்ஸி ஏ56 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகும். மேலும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதியைக் கொண்டுள்ளது இந்த சாதனம்.
50எம்பி பிரைமரி கேமரா + 12எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 5எம்பி மேக்ரோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது புதிய சாம்சங் கேலக்ஸி ஏ56 5ஜி போன். எனவே இந்த போனின் உதவியுடன் அசத்தலான படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 12எம்பி கேமரா கொண்டுள்ளது இந்த போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்கள் இதில் உள்ளன.
5000mAh பேட்டரி உடன் சாம்சங் கேலக்ஸி ஏ56 5ஜி போன் அறிமுகம் செய்யப்படும். குறிப்பாக இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. எனவே இந்த போனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers), 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 6 802.11பிஇ, புளூடூத் 5.4, ஜிபிஎஸ், குளோனாஸ் (GLONASS), கலிலியோ (GALILEO), போன்ற பல்வேறு ஆதரவுகளுடன் சாம்சங் கேலக்ஸி ஏ56 5ஜி போன் வெளிவரும். குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சாம்சங் நிறுவனம்.
8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி என இரண்டு வேரியண்ட்களில் சாம்சங் கேலக்ஸி ஏ56 5ஜி போன் விற்பனைக்கு வரும். மேலும் ஆன்லைனில் கசிந்த தகவலின்படி, ரூ.47,200 பட்ஜெட்டில் இந்த புதிய சாம்சங் போன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.
photo credit: @OnLeaks, @androidheadlines, AH


Click it and Unblock the Notifications








