Home
Mobile

மளமளவென குறைந்த Samsung 5ஜி போன் விலை.. 50எம்பி கேமரா.. 45W சார்ஜிங்.. எந்த மாடல்?

கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிமுகம் செய்த சாம்சங் கேலக்ஸி ஏ56 5ஜி (Samsung Galaxy A56 5G) ஸ்மார்ட்போனின் விலை குறைந்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் 50எம்பி ட்ரிபிள் ரியர் கேமராக்கள், 45W ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்தது. இப்போது சாம்சங் கேலக்ஸி ஏ56 5ஜி ஸ்மார்ட்போனின் புதிய விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.

8ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி ஏ56 5ஜி ஸ்மார்ட்போன் ரூ.41,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் தற்போது இந்த போனின் விலை குறைக்கப்பட்டு ரூ.38,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் அமேசான் தளத்தில் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.2000 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த போனை ரூ.36999 விலையில் தற்போது வாங்கிவிட முடியும்.

மளமளவென குறைந்த Samsung 5ஜி போன் விலை.. 50எம்பி கேமரா.. எந்த மாடல்?

சாம்சங் கேலக்ஸி ஏ56 5ஜி அம்சங்கள் (Samsung Galaxy A56 5G Specifications): 6.7 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் (FHD+) சூப்பர் அமோலெட் (Super AMOLED) டிஸ்பிளே டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது சாம்சங் கேலக்ஸி ஏ56 5ஜி போன். 1080 x 2340 பிக்சல்கள், 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பிளஸ் (Corning Gorilla Glass Victus Plus), 1900 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் உள்ளிட்ட பல அம்சங்கள் இதன் டிஸ்பிளேவில் உள்ளன.

4என்எம் ஆக்டா கோர் எக்ஸினோஸ் 1580 (4nm Octa Core Exynos 1580) சிப்செட்வசதியுடன் இந்த சாம்சங் போன் வெளிவந்துள்ளது. மேலும் கேமிங் பயனர்களைக் கவரும் வகையில் இந்த போனில் ஏஎம்டி எக்ஸ்கிளிப்ஸ் 540 ஜிபியு (AMD Xclipse 540 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சாம்சங் ஒன் யுஐ 7 (Samsung One UI 7) சார்ந்த ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மூலம் இந்த போன் இயங்குகிறது. ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

50 எம்பி மெயின் கேமரா + 12 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 5 எம்பி மேக்ரோ கேமரா கொண்ட டிரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ56 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் மூலம் அசத்தலான படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 12எம்பி கேமரா இந்த போனில் உள்ளது.

IP67 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) ஆதரவுடன் இந்த சாம்சங் ஸ்மார்ட்போன் வெளிவந்தது. மேலும் இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) வசதியும் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதேபோல் டைப்-சி ஆடியோ (Type-C Audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) வசதியுடன் இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டது.

5000mAh பேட்டரி வசதியுடன் இந்த சாம்சங் கேலக்ஸி ஏ56 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்தது. மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 45W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. ஆவ்ஸம் லைட்கிரே (Awesome Lightgray), ஆவ்ஸம் கிராஃபைட் (Awesome Graphite) மற்றும் ஆவ்ஸம் ஆலிவ் (Awesome Olive) நிறங்களில் இந்த போனை வாங்க முடியும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy A56 5G price drops in India: Check New Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X